February 8, 2023

இந்தியாவின் ஜிடிபியில் யூடியூபர்கள்பங்களிப்பு சுமார் ரூ.10,000 கோடி!

ம் நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பில் ரூ.10,000 கோடி யூடியூபர்கள் வாயிலாக கிடைத்துள்ளதாக ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் தெரிவித்துள்ளது.

யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்கள் கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேல் பங்களிப்பு செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் நாட்டில் 750,000 க்கும் மேற்பட்ட முழுநேர வேலையாக செய்து வருகின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

இன்றளவும் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கும் அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகள் போன்ற முதன்மை ஊடகங்கள் கூட (Mainstream Media) சமூக வலைத்தளங்கள் மற்றும் யூ டியூப் எனும் வலைக்காட்சி ஊடகத்தை புறக்கணிக்க முடியாத அளவுக்கு அவை பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. அதிலும் கொரோனா பெருந்தொற்று பேரிடர் உலகை ஆட்டிப் படைத்த காலத்தில், ஏற்பட்ட பொது முடக்கத்தின்போது, யூ டியூப் எனும் வலைக்காட்சி ஊடகத்திற்கு பெரும் செல்வாக்கு ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.

அதுவரையில், வலைக்காட்சிகளை (யூடியூப்) பார்க்காமல் இருந்தவர்கள் கூட அதன் செல்வாக்குக்கு அடிமை ஆனார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில், 2020-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தில் ரூ.6,800 கோடியாக இருந்த யூடியூபர்களின் பங்கு, 2021-ல் ரூ.10,000 கோடியாக உயர்ந்துள்ளது. 7.5 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு தந்ததற்கு இணையான வேலை வாய்ப்பை யூடியூபர்கள் உருவாக்கியுள்ளதாகவும் ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் விளக்கமளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.