ஊர் போய் சேர பயணம் செய்தவர்களை உலகை விட்டே அனுப்பும் விபத்துகள்! – வீடியோ!

ஊர் போய் சேர பயணம் செய்தவர்களை உலகை விட்டே அனுப்பும் விபத்துகள்! – வீடியோ!

உத்திரபிரதேச மாநிலம் அவ்ரியாவில் பகுதியில் புலம் பெயர்தோர் பயணிக்கையில் சாலை விபத்து நேர்ந்து உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் யோகி அறிவித்துள்ளார். காயமடைந்த அனைவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், கமிஷனர் மற்றும் கான்பூர் ஐ.ஜி. ஆகியோர் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் யோகி உத்தரவிட்டுள்ளார்.

தொடரும் ஊரடங்கால் சாப்பாட்டுக்கே வழியில்லாததால் சொந்த ஊருக்கு போவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை ஒட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் ட்ராக் மூலம் சில வாரங்களுக்கு முன்பு பயணம் செய்து கொண்டிருந்தோர் ரயில் மோதி தொழிலாளர்கள் பலர் பரிதாபமாக பலியாகினர். அதை அடுத்து இன்று உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் புலம் பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நின்றுகொண்டிருந்த ட்ரைலர் லாரி மீது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற டெம்போ மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் ஏற்பட்ட விபத்தில் லாரியில் தங்கள் சொந்த மாநிலத்திற்கு பயணித்துக்கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானிலிருந்து கிளம்பி, பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் சென்றடைய பயணப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள் லக்னௌ அருகில் அவுரியா மாவட்டத்தில் அவர்கள் பயணம் செய்த லாரியானது மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த “துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை” வேதனை அளிப்பதாகவும், உயிர் இழந்த 24 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இதே போல் பிரதமர் மோடொயும் தன் இரங்கலை தெரிவித்து விட்டதாக தகவல் வருகிறது.

error: Content is protected !!