யாஹூ குரூப்-பின் நேம் ’அல்டாப்பா’ஆகிடுச்சு!

யாஹூ குரூப்-பின் நேம் ’அல்டாப்பா’ஆகிடுச்சு!

பிரபல யாஹு நிறுவனம் தனது பெயரை அல்டாப்பா என பெயர் மாற்றம் செய்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் பதவி விலக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

yahoo jan 10

உலகம் முழுவதும் இணையதள சேவைகளை அளித்து வரும் யாஹு நிறுவனத்தின் மின் அஞ்சல் கணக்குகளில் அந்நியர்கள் அத்துமீறி ஊடுருவியது குறித்து அந்நிறுவனம் புதிய தகவல்களை வெளியிட்டது. 2013ம் ஆண்டு நடந்த ஊடுறுவல் சம்பவத்தில் பல கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்ஸ் திருடியதாகவும், அதே போல் 2014ம் ஆண்டு நடந்த ஊடுறுவலில் சுமார் 50 கோடி மின் அஞ்சல் கணக்குகளின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், 2013 மற்றும் 14ம் ஆண்டுகளில் நடந்த இணையத் தகவல் திருட்டு சம்பவங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என யாஹு கூறியுள்ளது. மின் அஞ்சல் கணக்கு வைத்திருந்தவர்களின் பெயர்கள், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டதாக கருதப்படும் இந்த சம்பவங்கள் பற்றி காவல் துறையுடன் இணைந்து விசாரித்து வருவதாக யாஹு தெரிவித்திருந்த நிலையில் இந்த நிறுவனம் தங்களது செல்வாக்கை உயர்த்தும் பொருட்டு யாஹு.ஐஎன்சி என்ற பெயரை அல்டாப்பா .ஐஎன்சி என பெயர் மாற்றம் செய்துள்ளது. யாஹு வின் இணையதளங்கள் அனைத்து அல்டாப்பா என்று மாற்றப்பட இருக்கிறது.

மேலும் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநராக இருக்கும் மரிசா மேயரும் , மேலும் அந்த நிறுவனத்தின் ஐந்து முக்கிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களும் பதவி விலக இருப்பதாகவு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் எரிக் பிரிண்ட தலைமை செயல் இயக்குநராக பதவி ஏற்பார் என்றும் ஏதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!