டைம் இதழின் உலகின் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் படேல் சிலை!- மோடி ஹேப்பி
சர்வதேச அளவில் பிரபலமான டைம் இதழின் 2019-ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் படேல் சிலை இடம்பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை பிரதமர் சர்தார் வல்லபபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை நதிக் கரை யில் 597 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான சிலை என்ற அந்தஸ்தைக் கொண்ட படேலின் ஒற்றுமையின் சிலை (ஸ்டேட்சூ ஆஃப் யூனிட்டி) கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளன்று நிறுவப்பட்டது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை இணைத்தவர் என்பதால் படேல் சிலைக்கு ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படேலின் ஒன்றுமை சிலை மற்றும் மும்பையின் சோஹோ ஹவுஸ் டைம் இதழ் வெளியிட்டுள்ள உலகின் மிகச்சிறந்த 100 இடங்கள் 2019 இன் இரண்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
டைம்ஸ் பத்திரிக்கையின் இந்த தகவலுக்குத்தான் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Excellent news vis-à-vis the ‘Statue of Unity’- it finds a spot in the @TIME 100 greatest places 2019 list.
And, a few days back, a record 34,000 people visited the site in a single day.
Glad that it is emerging as a popular tourist spot!https://t.co/zLSNmwCKyc pic.twitter.com/7xmjWCz9xo
— Narendra Modi (@narendramodi) August 28, 2019
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில், டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் 100 சிறந்த இடங்களில் ஒற்றுமை சிலையும் இடம்பெற்றுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 34,000 பேர் இந்த சிலையை பார்த்துச் சென்றுள்ளனர். புகழ்பெற்ற சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்த சிலையம் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் இந்த சிலை குறித்து டைம்ஸ் பத்திரிக்கையின் அதிகாரப்பூர்வ விளக்கத்தில்; “கடந்த இலையுதிர்காலத்தில் வெளியிடப்பட்ட உலகின் மிக உயரமான சிலை, நர்மதா ஆற்றில் உள்ள ஒரு தீவில் 597 அடி உயரத்தில் உள்ளது. இது மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் மேல் அமைந்துள்ளது, பார்வையாளர்களுக்கு அதன் மார்பு பகுதியில் இருந்து அருகிலுள்ள மலைத்தொடர்களின் காட்சிகளைக் காண வாய்ப்பு அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளது.