பிறந்த மதத்தை குறைத்து கூறும் தற்குறிகளுக்கு…!

பிறந்த மதத்தை குறைத்து கூறும் தற்குறிகளுக்கு…!

இன்று சண்டே என்பதால் தத்துபித்து – பிறந்த மதத்தை குறைத்து கூறும் தற்குறிகளுக்கு

உலகத்தின் மிக பழைமையான மற்றும் மூன்றாவது பெரிய மதம் இந்து என்று கூறினாலும், வெறும் மதம் அல்ல – மார்க்கம் – வாழ்வியல் தர்மம் – உண்மை இது தான் – தர்மா / அர்த்தா / காமா மற்றும் மோக்ஷம்… இந்த லைஃப் சைக்கிள் தான்……  இது என்னமோ வெள்ளைக்காரன் வெச்ச பேருனு தப்பா தன் சர்வைவலுக்காக உளறும் மக்களுக்கு மட்டும் இந்த தகவல் –

1500 BCE இது தன் இந்து சமயத்தின் ஆரம்ப காலம் – இது இண்டஸ் நதிக்கரை நாகரீக வாழ்க்கையே இந்த இந்து சமயம் – சிலருக்கு தெரியாமல் போயிருக்கலாம் – ராஜா ராம் மோகன் ராய் நினைவிருக் கிறதா – இவரைத்தான் முதன் முதலில் இந்து என பொது வெளியில் பெயரிட்டு அறிமுகப் படுத்தியது நீங்கள் நினைப்பது போல ஜேம்ஸ் மில்லர் அல்ல – மொகலாய சக்கரவர்த்தி அக்பர்…… சிலருக்காக இந்த தகவல் – உங்களுக்கு பிடித்த மசாலா தடவி மண்டையில் உரைக்கின்ற மாதிரி………

“தமிழனுக்கு கடவுள் இல்லை…”
“வழிபாடு இல்லை..”
“மதம் இல்லை.”
“தமிழ் மட்டும் தான் எங்கள் உயிர்.”
இப்படி கூறும் நாத்திக வாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும். இதோ சில உண்மைகள்.

சிவன் இல்லை எனில் நக்கீரனும் பொய்.
முத்தமிழ் சங்கங்களும் பொய்யே…

பிள்ளையார், முருகன் கடவுள் இல்லை எனில் ஔவையும் பொய். அவரின் தமிழ்க் கவியும் பொய்யே…

கண்ணகி இந்து கடவுள் இல்லை எனில் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களும் பொய்யே…

பெருமாள் கடவுள் இல்லை எனில் ஆழ்வார்களும் பொய். அவர்களின் தமிழ் திவ்வியப் பிரபந்தங்களும் பொய்யே…

இந்து கடவுள் இராமர் இல்லை எனில் கம்பனும் பொய். அவனின் தமிழ்க் காவியமும் பொய்யே…

இந்து மதம் பொய் எனில் திருவள்ளுவரும் பொய். அவரின் திருக்குறளும் பொய்யே…

இந்து கடவுள்கள் பொய் எனில் திருமுறைகளும் பொய். திருமத்திரமும் பொய். தமிழும் பொய். தமிழ் வரலாறும் பொய்யே.

மொத்தத்தில் இந்து சமயமும், இந்துக் கடவுள்களும், இந்து சமய வழிபாடுகளும் இரண்டறக் கலந்ததே தமிழ் என்பது இப்போது புரிகிறதா?

உடனே……….
இந்து என்பது அண்மையில் வந்தது.
இந்து என்பது தமிழனுக்குரியதல்ல.
இந்து என்பது வடநாட்டுக்குரியது என்று சொல்ல வருவீர்களே!

இந்து என்பது எமது எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர். இதில் தமிழரின்..

சூரிய வழிபாடு..
நடுகல் வழிபாடு..
சந்திரன் வழிபாடு..
மர வழிபாடு..
மலை வழிபாடு..
பஞ்ச பூத வழிபாடு..
பேய் வழிபாடு..
குலதெய்வ வழிபாடு..
நாக வழிபாடு..
காளை வழிபாடு..
யக்ஷ வழிபாடு…
சிவ வழிபாடு..
முருக வழிபாடு..
மாயோன் வழிபாடு..
அம்மன் வழிபாடு..
இந்திரன் வழிபாடு..
வருணன் வழிபாடு..
விநாயகர் வழிபாடு..

குல தெய்வ வழிப்பாட்டு இல்லா தமிழர்களே இல்லை….. இனிய ஞாயிறு உரித்தாகட்டும்…..

Image may contain: text
error: Content is protected !!