இனப்பெருக்கம் செய்து அசத்தும் ரோப்போக்கள் கூட தயாராமில்லே! வீடியோ!

இனப்பெருக்கம் செய்து அசத்தும் ரோப்போக்கள் கூட தயாராமில்லே! வீடியோ!

ப்போது மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகள் பலவற்றை ரோபோக்கள் செய்யத் தொடங்கிவிட்டன. இதனால் பல்வேறு நாடுகளில் வேலையாட்களை நிறுவனங்கள் நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட கம்ப்யூட்டர்களே அந்த வேலைகளைச் செய்து வரும் நிலை!மையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராணுவ பயன்பாட்டில் ரோபோக்களின் பயன்பாடு குறித்து தினமும் பல ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. மனித உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்படும் என்பதால் எல்லா நாடுகளும் ராணுவ ரோபோ தயாரிப்புக்காக அதிகளவில் நிதி ஒதுக்குகின்றன. எல்லைப் பாதுகாப்பு, வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தல், ஆகியவற்றுக்காக ராணுவத்தில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.அதே சமயம் ரோபோக்கள் என்றால் புரோகிராம் செய்யப்பட்ட சில டாஸ்க்குகளை துல்லியமாக செய்யும். ஆனால் கற்பனையை மிஞ்சும் அளவுக்கு இனப்பெருக்கம் செய்து அசத்தும் ரோப்போக்கள் கூட தயாராகி விட்டதாம் இதற்கு ‘Xenobot’ ரோபோக்கள் என்று பெயராம். சாம் க்ரீக்மேன், டக்ளஸ் பிளாக்கிஸ்டன், மைக்கேல் லெவின், ஜோஷ் பொங்கார்ட் என நான்கு விஞ்ஞானிகள் இணைந்து இந்த ரோபோவுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இதற்காக Xenopus laevis என்ற ஆப்பிரிக்க தவளையின் ஸ்டெம் செல்களை கொண்டு இதற்கு உயிர் கொடுத்துள்ளனர். அதன் நினைவாக தான் இதற்கு Xenobot என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1 மில்லி மீட்டருக்கும் கீழான அளவில் இருக்கும் இந்த ரோபோக்கள் அருகாமையில் உள்ள செல்களை சேகரித்து தனக்கு தானே இனப்பெருக்கம் செய்து கொள்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முழுவதும் தோல் மற்றும் இதய தசை செல்களை மட்டுமே இவை கொண்டுள்ளன. டிரையல் அண்ட் எர்ரர் முறையில் நடக்க, நீந்த, துகள்களை தள்ள, பளு தூக்க என தனியாகவும், குழுவாகவும் இணைந்து பணியாற்றும் டாஸ்க்குகள் இதற்கு கொடுக்கப்பட்டுள்ளனவாம். உணவு இல்லாமல் ஒரு வார காலம் வரை உயிர் வாழுமாம் இந்த ரோபோக்கள்.

இப்போதைக்கு இது அறிவியல் ரீதியிலான சோதனையில் உள்ளதாம். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் அடிப்படையில் இந்த மைக்ரோ ரோபோக்கள் மருத்துவ துறையில் முக்கியமான பணிகளை செய்ய உதவும் என சொல்லப்படுகிறது. இது ரோபோ தானா? இல்லை உயிரினமா? என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. ஆனால் இது ரெண்டுமே இல்லை என சில விஞ்ஞானிகள் சொல்லி வருவதாக தகவல்.

error: Content is protected !!