September 18, 2021

உலகத் தற்கொலை தடுப்பு நாள்!

நாளிதழ்கள் என்றொரு மீடியா உருவான தினத்திலிருந்து தற்கொலைச் செய்திகள் இல்லாமல செய்திதாள்கள் இல்லை என்னும் அளவுக்குத் தற்கொலை செய்து கொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன. உலக நல்வாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அஃதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கையானது கொலைகள் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. தற்கொலையை தடுக்கும் நோக்கில் தற்கொலை விழிப்புணர்வு தினமாக செப்டம்பர் 10 கொண்டாடப்படுகிறது.

உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறான். மற்ற உயிரினங்கள் அனைத்தும் தமக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கடந்து, போராடி வெற்றிபெற முயல்கின்றன. இதனால்தான் தற்கொலை செய்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பான விஷயமாகக் கருதப்பட்டு அதுவும் இப்போது சட்டப்படி என்றொரு வாதம் கோர்டே சொன்ன சேதியெல்லாம் அறிந்திருப்போம்

இந்த தற்கொலை முயற்சிக்கான ஆரம்ப கட்டம் மன அழுத்தம்தான். பொதுவாக, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையை நாடிச் செல்வார்கள். அந்தத் தனிமையே நாளடைவில் தற்கொலை எண்ணத்துக்கான தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. “மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நெருங்கிய வட்டத்திலிருந்து விலகிச் செல்ல நினைப்பார்கள். தூக்கமின்மை, யாரிடமும் பேசாமல் இருப்பது போன்றவை அதற்கு உதாரணம். ஒரு சிலர் தங்களையே காயப்படுத்திக்கொள்வார்கள். இதுபோன்ற செயல்கள் தென்பட்டால் அவர்களிடம் மனம்விட்டுப் பேசுவது நல்லது.

அதேபோல் யாராவது தங்களுடைய கஷ்டத்தைப் பகிர்ந்துகொண்டால் உடனே அறிவுரை வழங்காமல் கொஞ்சம் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்டுப் பழக வேண்டும். ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா, எல்லாம் சரியாகிடும், இதுவும் கடந்துபோகும்’ என்பது போன்ற வார்த்தைகளை அறிவுரை என்ற பெயரில் மன அழுத்தத்தில் இருப்பவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கலாம். ‘உனக்கு எப்ப கஷ்டமாக இருந்தாலும் என்னிடம் பேசு. உனக்கு நான் உறுதுணையாக இருப்பேன்’ எனப் பேசி அவர்களுக்கு நம்பிக்கை தரலாம்.

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு சிநேகா அமைப்பின் சார்பில் கவுன்சலிங் வழங்கி வருகிறார்கள். 044-24640050, 044-24640060 ஆகிய எண்ணில் தொடர்புகொண்டு பேசலாம். பேசும் நபர் யார், எங்கிருந்து பேசுகிறார் போன்றவற்றை நாங்கள் கேட்கமாட்டார்கள். பேசுவோரின் தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கான ஆலோசனையை மட்டுமே வழங்குகிறார்கள்

நீங்களும் சக மனிதர் சொல்ல வருவதை கேட்பதற்கு உங்கள் காதுகளையும் சாய்ந்துகொள்ள உங்கள் தோளையும் கொடுக்க முன் வந்தாலே பல தற்கொலைகள் தடுக்கப்பட்டுவிடும்.