September 17, 2021

உலக நாடுகளில் இரண்டாவது சர்வதேச தின நிகழ்ச்சி கோலாகலம்!

இன்றைய தினம் இந்தியா உள்பட உலக நாடுகளில்  இரண்டாவது சர்வதேச தின நிகழ்ச்சி நடைபெற்றது. குறிப்பாக இந்தியாவில் பல லட்சம் மக்கள் ஆர்வத்துடன் யோகா தின நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயிற்சி செய்தார்கள். சண்டிகரில் பிரதமர் மோடி தலைமையில் 30ஆயிரம் மக்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். பிரதமர் மோடி ஆசனங்கள் உள்பட பல்வேறு பயிற்சிகளை பொதுமக்களுடன் செய்தார். அப்போது யோகாவில் சாதனை படைக்கும் யோகா நிபுணர்களுக்கு தேசிய, சர்வதேச விருதுகள் அளிக்கப்படும் என அவர் அறிவித்தார்.

yoaga day

சர்வதேச யோகா தினம் கடந்த ஆண்டு முதல் உலக நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த யோகா தினத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததும், 40 இஸ்லாமிய நாடுகள் உள்பட 190 நாடுகள் அதனை வரவேற்றன. கடந்த ஆண்டு முதல் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் நடைபெற்றபோது பிரதமர் மோடி பல ஆயிரம் மக்களுடன் யோகா செய்தார். கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு யோகா மீதான ஆர்வம் 30சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய பாரம்பரிய கலையான யோகாவை செய்வதால் மன அழுத்தம் உள்பட பல்வேறு நோய்களை தடுக்கலாம் என்று தொழில் துறை அமைப்பான அசோசம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வினை சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட 10 பெரு நகரங்களில் அசோசம் ஆய்வு நடத்தி இந்த தகவலை வெளியிட்டது. 2வது சர்வதேச யோகா தினத்தையொட்டி சண்டிகரில் யோகா நடந்த இடத்தில் 30ஆயிரம் மக்கள் ஆர்வத்துடன் குவிந்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெள்ளை நிற சட்டை மற்றும் டிரவுசரைப்போட்டிருந்தார். அவரது கழுத்தில் கழுத்துப்பட்டை அணிந்திருந்தார். பாதுகாப்புப்படையினர் பள்ளிக்குழந்தைகள் ஆகியோரும் இந்த யோகா நிகழ்ச்சியில் அதிக அளவில் கலந்து கொண்டார்கள்.இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,கூறியதாவது, மக்கள் மொபைல் போனில் ஆர்வம் காட்டுவதற்கு பதிலாக யோகாவில் அதிக ,ஈடுபாடு காட்ட வேண்டும் ,

நமது உடல் எந்த வித நோயும் இல்லாமல் எந்த வித செலவினமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. சர்க்கரை நோய்க்கு யோகா முறையில் சிகிச்சை மேற்கொள்ளலாம் . யோகா துறையில் சாதனை படைப்பவர்களுக்குதேசிய விருது, சர்வதேச விருதுகள் அளிக்கப்படும் . ஐ.நா.சபையில் அறிவிக்கப்பட் சர்வதேச தினங்களில் யேகாவைப்போல் வேறு எந்த நிகழ்ச்சியும் இந்த அளவிற்கு மக்களின் ஆதரவு இயக்கமாக மாறியதில்லை. இருப்பினும் யோகாவால் கிடைக்கும் பலன்கள் குறித்து சிலர் புரிந்து கொள்வதில்லை. யோகா மதசம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல. இதை சர்ச்சையாக்க தேவையில்லை. பழங்காலத்தில் மக்களுக்கு இன்சூரன்ஸ் கிடையாது. ஆனால் ஜிரோ பட்ஜெட்டில் இன்சூரன்சாக இந்த யோகா பயன்பட்டது. யோகாவால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகாவை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும். இதற்காக ஆண்டு தோறும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விருதுகள் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். தலைநகர் டெல்லி ராஷ்ட்டிரபதி பவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் மக்கள் கலந்து கொண்டார்கள். யோகா தினத்தினையொட்டி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சி.பி.எம் .கட்சியின் மூத்த தலைவர் ஷைலஜா சமஸ்கிருத ஸ்லோகத்தை உச்சரிக்க மறுத்தார். மாநிலம் சார்பில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஷைலஜா யோகாவை துவங்குவதற்கு முன்னர், சமஸ்கிருத ஸ்லோகம் அவசியம்தானா என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இதனால் அந்த நிகழ்ச்சியில் பொதுவான பிரார்த்தனை இடம் பெற்றது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை.

அந்த மாநிலத்தில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைமையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் வி.நாரயாணசாமி மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் ஆகியோர் யோகா தின கொண்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் கலந்து கொள்ளாதது சந்தேகத்தை எழுப்புவதாக இருந்தது புதுச்சேரியில் அந்த மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் யோகா ஆசனங்களை செய்தார்கள்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்ற 2வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி மற்றும் 57 மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். கடுமையாக மழை கொட்டியபோதும் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளை செய்தார். இந்த யோகா நிகழ்ச்சி கே.டி..சிங் பாபு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்டார்கள்.

இதனிடையே ராஷ்டிரபதி பவனில் ஆயிரம் பேர் கூடிய மெகா யோகா நிகழ்ச்சி ஒன்றினை இன்று தொடங்கி வைத்த ஜனாதிபதி பேசும்பொழுது, மக்கள் ஆரோக்கிய வாழ்வு வாழ யோகா உதவும். உடல் மற்றும் மனதிற்கு இடையே ஒட்டுமொத்த நல்லிணக்கத்தினை உருவாக்கும். அதனுடன் மனநலம் மற்றும் உடல் நலத்தினையும் அதிகரிக்கும் என அவர் கூறினார்.