எக்ஸ் ரே-வை கண்டு பிடித்த வில்ஹம் கான்ரட் ராண்ட்ஜென் !

இப்போதெல்லாம் நமக்கு சளி, இருமல் வந்தாலே அல்லது கீழே வழுக்கி விழுந்து விட்டாலோ ,விபத்தில் அடிபட்டு விட்டாலோ டாக்டரிடம் செல்வோம். அப்போ, நம் கண்ணை பிதுக்கி, ஸ்டெத்தாஸ்கோப்பை வச்சு தொட்டு பாத்துட்டு , எதுக்கும் ஒரு எக்ஸ் ரே எடுத்து வந்துடுங்க.. என்று சொல்வது வாடிக்கை. அந்த எக்ஸ் ரே -யை கண்டு பிடிச்சவருக்கு இன்னிக்கு ( நவம்பர் 8)  ஹேப்பி பர்த் டே.. இதே நாளை பன்னாட்டுக் கதிரியல் நாள்=னும் கொண்டாடறாங்க.

இன்றைய மருத்துவ உலகில் நோயின் தன்மையை அறியப் பெரிதும் பயன்படக் கூடியதே எக்ஸ் ரே கதிரியக்க முறை. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் இக்கதிர்கள் பெரிதும் பயன்படுகின்றன. மருத்துவ உலகிற்கு மட்டுமல்லாமல், உயர்ந்த ஆபரணங்களை மறைத்து வைத்துக் கடத்துவதைக் கண்டுபிடிப் பதற்கும், இயற்கை வைரத்தைச் செயற்கை வைரத்திலிருந்து கண்டு பிடிப்பதற்கும், பெரிய கட்டடங்கள், இரும்புப் பாலங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதைப் பார்த்துச் சரி செய்வதற்குமான பல செயல்களில் இக்கதிர்கள் பயன்படுகின்றன.

இந்த எக்ஸ் ரே முறையினைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனியில் 1845, மார்ச் 22 இல் லௌனப் என்ற இடத்தில் பிறந்த வில்ஹம் கான்ரட் ராண்ட்ஜென் என்பவர். இவரது தந்தை விவசாயி. 1885 இல் விர்ஸ்பொர் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.தனது ஆய்வுக்கூடத்தில் சில வாயுக்களை வைத்து சோதனை செய்தார். வாயுக்களிலிருந்து வெளிப்படும் மின்சாரம்பற்றிய ஆராய்ச்சியைச் செய்து பார்த்தார். இந்த ஆய்வை, ஒரு கேத்தோடு குழாயை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அந்த அறை முழுவதும் இருட்டாக இருந்தது. அத்தோட கருப்புக் காகிதத்தால் கேத்தோடு குழாயையும் மூடி வைத்திருந்தார். அந்தக் குழாய்க்கு அருகிலிருந்த பிளாட்டிளா சையனைட் படிகம் வெளிச்சம்பட்டு மின்னியுள்ளது. ஆச்சரியத்தில் மூழ்கினார்.

குழாயிலிருந்து ஏதோ கதிர் ஒன்று வெளிப்பட்டு குழாயை மீறி, மூடி வைத்திருந்த கருப்புக் காகிதத்தையும் தாண்டி வந்திருக்க வேண்டும் எனக் கணித்தார். கண்களுக்குப் புலப்படாதவையாக இருந்த இந்தக் கதிர்கள் அதுவரையிலும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படாததால் ஜஸ்ட் லை தட் எக்ஸ் ரே எனப் பெயர் வைத்தார்.

எல்லா ஒளிக்கதிர்களும் போட்டோ தகடுகளில் படியும் தன்மை கொண்டுள்ளதால் இவர் கண்டுபிடித்த கதிர்களையும் தகடுகளில் பதியவைக்க ஆசைப்பட்டார். எனவே, லேப்புக்குள்ளேஎ போன தன்னோட வூட்டுக்காரரை ரொம்ப நாழியா காணோமேன்னு த்ஹெடி வந்த மனையின் கை மீது இக்கதிர்களை போட்டோ தகட்டில் வைத்து செலுத்திப் பார்த்தார். செலுத்தியபின் அந்தத் தகட்டிலுள்ள கருவியைப் பார்த்தார். அதில், அவரது மனைவியின் கை எலும்புகளும் அவர் அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன. 1895 இல் – தனது 50 ஆவது வயதில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியதை ‘நான் அப்படியே ஷாக்காயிட்டே’ன்னு சொல்லியிருக்கார்.இவரது இந்தக் கண்டுபிடிப்புக்காக 1901 இல் உலகின் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது குரிப்பிடத்தக்கது.

aanthai

Recent Posts

2022ம் ஆண்டுகான மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுகான உடலியல்…

2 hours ago

இரண்டு பட்டப்படிப்பு திட்டம்; ‘பிஎச்டி’ஆய்வு மாணவர்களுக்கு பொருந்தாதாமில்லே!

இரண்டு பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்கும் திட்டமானது, பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. நாடு…

3 hours ago

டெலுஷனல் டிஸ்ஆர்டர் (Delusional Disorder)எனப்படும் பிரச்சினை பற்றிய படமே ‘ரீ’!

ரீ அங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரீமா, பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் சுந்தரவடிவேல் எழுதி இயக்கியிருக்கும்…

3 hours ago

காந்தியைக் கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம்!- கொட்டும் மழையில் ராகுல்!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் கன்னியாகுமரியில்…

4 hours ago

பிரபுதேவாவின் நடனத்தில் தயாராகி ஹிட் அடித்து இருக்கும் பாடல்!

'அசுரன்' பட புகழ் நடிகை மஞ்சு வாரியார் நடித்திருக்கும் 'ஆயிஷா' எனும் படத்தில், 'நடனப் புயல்' பிரபுதேவாவின் நடனத்தில் தயாராகி…

11 hours ago

கால்பந்து போட்டியால் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பல…

1 day ago

This website uses cookies.