உலக வானொலி தினம் – பிப்=13

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.இந்நிலையில்தான் ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.

வானொலி நம்மில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் இப்போதும் பலருண்டு.அது போல் வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை நம் செவிகளில் வந்து மோதும். முன்னரே குறிப்பிட்டது மாதிரி இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க முடியும் என்றாலும், காற்றலைகளில் தவழ்ந்து வரும் வானொலியின் ஒலிப்பரப்பை உங்களின் செவிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவும் முக்கியமான கருவி வானொலிதான்.

ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர் மின்காந்த அலைகளை ,டிரான்ஸ்மீட்டராக மாற்றினார். பின்னர் இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்கொனி (1874-1937) வானொலியை கண்டறிந்தார்.

இன்று உலக முழுவதும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட செய்தியை 1947-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய பிரிட்டன் பிரதமராக இருந்த சர். க்ளமன்ட் அட்லி,(1945-1951) வானொலி வாயிலாக அறிவித்ததை நம் இந்தியர்கள் கேட்டறிந்ததாக சொல்கிறார்கள். முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள் போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது.

உலக வானொலி தினத்தை முன்னிட்டு, இணையத்தில் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க உதவும் தளங்கள் பற்றி ஒரு அறிமுகம்:

ரேடியோ கார்டன் :

http://radio.garden/ இணையத்தில் வானொலி என்றவுடன், ரேடியோ கார்டன் தளம் தான் முதலில் நினைவுக்கு வர வேண்டும். அந்த அளவுக்கு அருமையான இணையதளம் இது. உலகில் உள்ள வானொலி நிலைய நிலையங்களை எல்லாம் அந்த தளத்தின் மூலம் அணுகலாம். இணைய வானொலி, பண்பலை வானொலி உள்ளிட்ட எல்லா வகையான வானொலி நிலையங்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை இந்தத் தளம் ஒரே இடத்தில் அணுக வழி செய்கிறது.

அந்த தளத்தின் இடைமுகம் தான் இன்னும் அற்புதமானது. அதன் முகப்புப் பக்கத்தில் கிளிக் செய்தால் பூமி உருண்டை தோன்றுகிறது. அந்த பூமி உருண்டையில் பச்சை புள்ளிகளாக தோன்றும் இடங்களை கிளிக் செய்தால், அந்த இடத்தில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலியை கேட்டு ரசிக்கலாம். நாம் கிளிக் செய்வதற்கு முன்னரே, நம்முடைய இருப்பிட நகரத்தை அடையாளம் கண்டு, அங்குள்ள வானொலி தானாக கேட்கத்துவங்குகிறது. இது தவிர அருகாமையில் உள்ள வானொலிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். புதுவிதமான இசையைக் கேட்க விரும்பினால், உலகின் மற்ற பகுதிகளில் உள்ள பச்சை புள்ளிகளை கிளிக் செய்து அங்குள்ள பாடல் அல்லது இசையை கேட்டு மகிழலாம். வானொலி பிரியர்களுக்கு சரியான வேட்டைக்களம் என்று தான் இந்த தளத்தை சொல்ல வேண்டும்.

ஆன்லைன் ரேடியோஸ்;

https://onlineradios.in/ ரேடியோ கார்டனோடு ஒப்பிடும் போது மிகவும் சாதாரணமான தளம் என்றாலும், ஆன்லைன் ரேடியோஸ் தளம் இந்தியாவில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களையும் அணுக வழி செய்கிறது. இந்திய வானொலி நிலையங்களை காட்சிரீதியாக பட்டியலிடுகிறது. விரும்பிய வானொலியை கிளிக் செய்து கேட்டு ரசிக்கலாம்.

ரேடியோ வேர்ல்ட்:

https://www.radioworld.com/ வானொலி உலகம் தொடர்பான செய்திகள் மற்றும் போக்குகளை தெரிந்து கொள்வதற்கான இணையதளமாக ரேடியா வேர்ல்டு விளங்குகிறது. வானொலி நிலைய உரிமையாளர்கள், பொறியாளர்களை மனதில் கொண்டது என்றாலும், வானொலி உலக நிகழ்வுகளில் ஆர்வம் உள்ள எவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இண்டெர்நெட் ரேடியா :

https://www.internet-radio.com/ வானொலி நிகழ்ச்சிகளை இணையம் மூலம் கேட்டு ரசிப்பதற்கான இன்னொரு இணையதளம். ஆயிரக்கணக்கான இணைய வானொலிகளை நேரலையாக கேட்டு ரசிக்க வழி செய்கிறது. முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வானொலிகளில் மேற்கத்திய இசை சார்ந்தவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. வானொலிகள் தனியேவும் பட்டியலிடப்பட்டுள்ளன. ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள வானொலி நிலையங்களும் தனியே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த தளம் அளிக்கும் வசதி மூலம் சொந்த இணைய வானொலியும் துவக்கலாம். வானொலி தொடர்பான விவாதத்திலும் பங்கேற்கலாம்.

ரேடியோ லொக்கேட்டர் :

https://radio-locator.com/ இணைய வானொலி நிலையங்களுக்கான எளிமையான தேடியந்திரம் இது. அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இணைய வானொலி நிலையங்களை தேட வழி செய்கிறது. தேடலுக்கான எளிமையான இடைமுகமும் கொண்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இணைய வானொலிகளை தேடலாம்.

இதே போல, streamit-online.com குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக வானொலி தேடல் வசதியை அளிக்கிறது.

இவைத் தவிர மொபைல் போனில் செயலி வழியே இணைய வானொலிகளை அணுக, https://www.radio.net/android, http://onrad.io/ உள்ளிட்ட செயலிகள் வழி செய்கின்றன

aanthai

Recent Posts

அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘ரத்தம்’ பட டீசர்!

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' பட டீசர் பார்வையாளர்களிடையே, படம் குறித்த எதிர்பார்ப்புகளைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நடிகர்…

10 hours ago

சங்கராந்தியன்று இரட்டைப் பரிசு வழங்கும் ஸ்ருதிஹாசன்!

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின்…

16 hours ago

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை சுரேஷ் காமாட்சி ரிலீஸ் செய்கிறார்!

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம்…

16 hours ago

நல்ல கலை இயக்கம் என்பது வெளியே தெரியாமல் இருப்பதுதான்: கலை இயக்குநர் வீரசமர்!

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் 'காதல்' திரைப்படத்திலிருந்து சுமார் 30 படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வீரசமர் .இவர் 'வெயில்', 'பூ',…

17 hours ago

கனெக்ட் படத்தில் என்ன ஸ்பெஷல்? – டைரக்டர் அஸ்வின் சரவணன் பகிர்ந்தவை!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்…

1 day ago

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து வெளியேற திட்டம்?

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள்…

2 days ago

This website uses cookies.