February 7, 2023

உலக கோப்பை கால்பந்து போட்டி : போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தி மொராக்கோ அரையிறுதிக்குத் தகுதி!.

ர்வதேச அளவிலான சகல விளையாட்டு அரங்கிலும் ஏகப்பட்ட சாம்பியன் கோப்பைகளை கையில் ஏந்தி இருந்தாலும் உலகக்கோப்பை என்பது ஒவ்வொரு வீரருக்கும் உச்சபட்ச கனவு. கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர், லெவண்டோஸ்கி, உள்ளிட்ட பல்வேறு வீரர்களுக்கு இந்த உலகக் கோப்பையை கடைசி தொடர் என்ற நிலையில், தங்களது தேசத்திற்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கினர். ஆனால், நெய்மர் இடம் பெற்றுள்ள பிரேசில் அணியின் உலகக்கோப்பை கனவை குரேஷியா தகர்த்தெறிய, மறுபுறம் போர்ச்சுகலின் உலகக்கோப்பை கனவை மொராக்கோ தவிடு பொடியாக்கியது.

22வது உலக கோப்பை கால்பந்து தொடரின் 3-வது காலிறுதி சுற்றில் மொராக்கோ – போர்ச்சுக்கல் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் தங்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனால் 1-0 என முதல் பாதியில் மொராக்கோ முன்னிலை வகித்தது. பின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதன் மூகம் ஆட்ட இறுதியில், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தியதோடு முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்று முன்னேறியது.

இந்த போட்டியில் தோல்வியடைந்த நிலையில் போர்ச்சுக்கல் அணி வீரர்கள் கண்ணீருடன் வெளியேறியது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக ரொனால்டோவுக்கு 37 வயதாகிவிட்ட நிலையில், இதுவே அவரது கடைசி போட்டி. இதனால் போர்ச்சுகல் வெற்றிபெறவேண்டும் என்பதை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ரொனால்டோவின் கனவு தகர்ந்த நிலையில் அழுது கொண்டே மைதானத்தை விட்டு வெளியேறியது அவரோடு சேர்த்து அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.