January 30, 2023

🦉உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் அல்லது உலக புத்தக நாள்!

ர்வதேச புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது. பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாளை, 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களைையும் ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.

உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின்; புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்’ என்பார் பாரதிதாசன். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். தேடுதல் இன்றி வாழ்க்கையில் எந்த உச்சமும் கிடைத்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட தேடுதலின் ஆரம்பப்புள்ளியே புத்தகம்தான். புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட புத்தக நதியில் மூழ்கி புத்தம் புதிய சுகானுபவங்களைப் பெற நினைவூட்டும் தினமே இது.

இன்றைய நவீன உலகத்தில் வாசிப்புக்கு நிறைய மின்னணு ஊடகங்கள் வந்துவிட்டன. வலைத்தளம், இணையவழி நூலகம், மின்னிதழ், மின் செய்தி என்று ஏராளமானவை இருந்தாலும், காகிதத்தால் ஆன புத்தகங்களே என்றைக்கும் நம் உணர்வுகளை மீட்டும் கண்ணாடியாக உள்ளது.புத்தகத்தை தொட்டு, அதன் மணத்தை நுகர்ந்து, சுவாசித்து, பிரித்துப் படித்து, அதன் பக்கங்களைத் தடவிப் பார்த்து படிப்பது என்பது தனி ரசனை ஆகும். இதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை.

விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் போல் சமூகம், தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துக்களை புத்தகங்கள்தன்னுள் புதைத்து வைத்துள்ளன. வரலாற்று நிகழ்வுகளையும், இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியேஎதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்ல பதிவு செய்யப்பட்ட பொக்கிஷங்களே புத்தகங்கள். வாசிப்பை சுவாசமாக கருதி நேசிப்போம்.உலக புத்தக தினத்தில்புத்தகம் படிப்பதை ஊக்குவிப்போம்

துப்பாக்கிகளைவிட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள் என்றுன் மார்ட்டின் லூதர் கிங்கும், ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம் என்று சர் ஐசக் நியூட்டனும் கூறுகின்றனர். இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடி தனது 23 வது வயதில் தூக்கிலிடப்பட்ட மாவீரன் பகத் சிங் தூக்குக்கயிறு கழுத்தில் அரங்கேறும் வரை படித்துக்கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.