ரத்தம் இல்லாமல் எந்த ஓர் உயிரும் இல்லை. நாம் மூச்சு விடும் ஆக்ஸிஜனை உடலுக்குள் சுமந்து இந்த ரத்தம்தான் என்பதால் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததுதான். மற்றவர்களின் உயிரைக் காக்க உயிர் கொடுக்கப்படுவதால் அது தானங்களில் மிகச் சிறந்ததாக இருக்கிறது. இருந்தாலும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தவும், உயிர்களை காப்பாற்ற எங்கும் எப்போது ரத்தம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் ஜூன் 14 ஆம் தேதி சர்வதேச குறுதி கொடையாளர் தினம் (World Blood Donor Day, June 14 ) கொண்டாடப்படுகிறது -ரத்தப் பிரிவுகளான A, B, O உள்ளிட்டவற்றை கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் பிறந்த நாளான இன்று, அவரை கெளரவப்படுத்தும் விதமாக உலக சுகாதார அமைப்பு 2004 ஆம் ஆண்டு முதல் ஜுன் 14 ஆம் தேதியை உலக ரத்த தானம் தினமாக கடைபிடிக்க அறிவித்தது.

உலகச் சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையின்படி 160 லட்சம் யூனிட் ரத்தமே ஆண்டுக்கு சேகரிக்கப்படுகிறது. ஆனால் தேவையோ 3 கோடியே 20 லட்சம் யூனிட்கள் என்று கூறியிருந்தது.தானம் செய்யப்பட்ட ரத்தத்தை 35 முதல் 42 நாட்கள் வரையே வைத்திருக்க முடியும். ஆகவே புதிய ரத்தத்திற்கானத் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு மேலும் 2% இந்தியர்கள் ரத்த தானம் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது.18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமானவர்களே ரத்த தானம் செய்ய முடியும். இவர்கள் ரத்த தானம் செய்ய அதிகம் முன் வரவேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

மனிதர்களின் உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் ஓடுகிறது.இதில்,ஒரு நேரத்தில் 350 மில்லி (ஒரு யூனிட்) ரத்தத்தை கொடுக்கலாம்.இதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் வராது. எடை சுமார் 50 கிலோவாகவும், உயரம் ஐந்து அடிக்கு அதிகமாகவும் இருப்பவர்கள் 450 மில்லி ரத்தம் கொடுக்கலாம். 100 மில்லி ரத்தத்தில் ஹீமோகுளோபின் 12.5 கிராம் இருந்தால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். எடுக்கப்பட்ட ரத்தம் 48 மணி நேரத்துக்குள் தானாவே மீண்டும் சுரந்து விடும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் எவ்வளவு ரத்தத்தையும் மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கும்.பொதுவாக, ஆண்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்துக்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம்.

ரத்தத்தில் நான்கு வகைகள் உள்ளன. ஏ, பி, ஓ, ஏபி ஆகியவையே அவை. இதிலும்கூட ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், பி பாசிட்டிவ், பி நெகட்டிவ், ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ், ஏபி நெகட்டிவ் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. இந்த வகைகளில் ஒன்றைத்தான் மனிதர்கள் பெற்றிருப்பார்கள். ஒவ்வொரு நபரும் தங்கள் ரத்த வகையை அறிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல வீட்டில் உள்ளவர்களும் அதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவசர காலத்துக்கு இது மிகவும் அவசியம்.

அது சரி.. யாரெல்லாம் ரத்ததானம் செய்யக் கூடாது?

உடல் நலமில்லாதவர்கள்,மது மற்றும் போதை மருந்தின் போதையில் இருக்கும் போது, கருவுற்றிருக்கும் பெண்கள், இளம் தாய்மார்கள்,மலேரியா நோய் பாதித்தவர்கள் (நோய் குணமாகி மூன்று மாதம் கழித்து ரத்தம் கொடுக்கலாம்), இருதய நோய், சிறு நீரக கோளாறு, எய்ட்ஸ், ரத்த சோகை, தொழு நோய், வலிப்பு, உயர் ரத்த அழுத்தம், மலேரியா தாக்கி இருப்பவர்கள்,ஆஸ்பரின் மாத்திரை சாப்பிட்ட மூன்று நாட்களுக்குள், தடுப்பூசி போட்ட ஒரு மாதத்துக்குள் அறுவை சிகிச்சை நடந்து குறைந்தது மூன்று மாதத்துக்குள் ரத்தம் கொடுக்க கூடாது.மஞ்சள் காமாலை, பால் வினை மற்றும் எய்ட்ஸ் உள்ளவர்களும் ரத்ததானம் கொடுக்க கூடாது.ரத்ததானம் கொடுக்க முடிவு செய்திருப்பவர்கள்,முன் தினம் இரவு மது அருந்தி இருக்க கூடாது மற்றும் நன்றாக நன்றாக தூக்க வேண்டும்.டென்சன் இல்லாமல் அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டும்.

ஆனாலும், இந்த நவீன உலகில்கூட ரத்த தானம் கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. ரத்தம் கொடுத்தால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் தவறாக நம்புகிறார்கள். இதன் காரணமாக ரத்தத்ததைத் தானமாகக் கொடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பல இடங்களில் ரத்தத்தைப் பணம் கொடுத்து வாங்கும் சூழ்நிலையே உள்ளது.உலகில் 60 நாடுகளில் 99 சதவீதம் கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்காமல் ரத்தம் தானம் பெற முடிகிறது. 73 நாடுகளில் இன்றும்கூட ரத்தம் தேவைப்படுபவர்கள் உறவினர்களையே சார்ந்திருக்க வேண்டி யிருக்கிறது. அல்லது பணம் கொடுத்து வாங்க வேண்டியே நிலை உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு.

இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்டவர்கள் கொடையாளர்களுக்குப் பணம் கொடுக்காமல் ரத்தம் தானம் பெறுவதை 2020-ம் ஆண்டுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்பதை உலக சுகாதார அமைப்பு இலக்காக வைத்துள்ளது. இதன் காரணமாகவே ரத்த தானம் செய்வது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பை இந்த அமைப்பு ஏற்றிருக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே 2004-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 14-ம் தேதி உலக ரத்தக் கொடையாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதற்காக ஜூன் 14-ம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது ஏன்? ந்ன்கிஏஈர்க்ளா?ஏ பி ஓ ரத்த வகைகளைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர் 1868-ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி ஆஸ்திரியாவில் பிறந்தார். அவருடைய நினைவாகதான் இந்த உலக ரத்தக் கொடை யாளர்கள் நாள் அன்றைக்குக் கடைபிடிக்கப் படுகிறது.

aanthai

Recent Posts

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு!

இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து திங்கள்கிழமை நடந்தது.…

18 hours ago

பொம்மை நாயகி பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக…

19 hours ago

‘ஹின்டன்பர்க் அறிக்கை ஒரு நிறுவனத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல!

ஹின்டன்பர்க் அறிக்கைக்கு எதிராக அதானி குழுமம் பதில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். ஹின்டன்பர்க் தங்களது அறிக்கை தயாரிக்க இரண்டு வருடங்கள்…

20 hours ago

ஒடிசா : சப் இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழப்பு

ஒடிசாவில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் நப தாஸ் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். பிஜு ஜனத…

2 days ago

U19T20 WorldCup: கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு 5 கோடி பரிசு!

ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் எடிஷனில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து முதல் சாம்பியன்ஷிப்…

2 days ago

விடுதலை பார்ட் 1 & பார்ட் 2′ டப்பிங் பணிகள் தொடங்கிடுச்சு!

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் 'விடுதலை பார்ட் 1…

2 days ago

This website uses cookies.