December 1, 2021

உலக ஆர்த்ரைடிஸ் தினம்!

ஆர்த்ரைடிஸ் எனப்படுவது மூட்டு வலியாகும். இது ஆண், பெண், குழந்தைகள், சிறு வயதினர் என எல்லா தரப்பினரையும் தாக்கும் நோய். முன்னோர்களிடமிருந்து பரம்பரை நோயாகவும் பரவும். கீல்வாத நோயால் வரும் பெரும்பாலான ஆர்தரைடிஸ்கள் உடலின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்குகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆர்த்ரைடிஸ் என்பது ஆண், பெண், குழந்தைகள், சிறுவயதினர் என்று எல்லாத் தரப்பினரையுமே தாக்கும். கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 18 கோடிக்கும் அதிகமானோர் ஆர்த்ரைடிஸ் ஸால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 65 வயதுக்கு உட் பட்டவர்கள். உலகம் முழுவதும் ஆர்த்ரைடிஸ் தாக்கப்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேர் பெண்கள். இந்தியாவில் 90 சதவிகித கிராமப்புறத்தினர் ஆர்த்ரைடிஸ் பாதிப்புக்கு சிகிச்சை எடுப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உறுதியான புஜங்களும், திறன் நிறைந்த மூட்டுக்களும் பண்டைய காலத்தில் வலிமைக்கு முன்னு தாரணமாக கூறப்பட்டது. இரண்டு எலும்புகள் இணைக்கப்பட்ட பகுதியை மூட்டுக்கள் என்பார்கள். மூட்டுக்களின் இயக்கம் அதனை சுற்றியுள்ள கட்டமைப்புகளை பொருத்தே அமையும். உடல் எடையை தாங்கியே கால் மூட்டு இயக்கம் அமைவதால் மூட்டுகளுக்கு இடையே ஏற்படும் உராய்வு விசையின் அளவு அதிகமாகவே இருக்கும். உராய்வுகளின் பொழுது எலும்புகள் ஒன்றை ஒன்று தேய்ந்தே இயங்குவதால் எலும்பு மூட்டுகளை சுற்றி அமைந்து இருக்கும் பஞ்சு போன்ற பகுதி (CARTILAGE) வலுவை இழக்க ஆரம்பிக்கும். மூட்டுக்கள் வழுத்தன்மை வயதாக ஆரம்பித்தவுடன் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். அதாவது மூட்டுக்களை சுற்றியுள்ள கட்டமைப்புகள் தங்களின் செயல் திறன் ஆட்டம் காண ஆரம்பிக்கும் பொழுது வலியே வீக்கமே அல்லது மடக்கி நீட்டும் பொழுது சத்தம் வரலாம்.

அதாவது சைக்கிள் செயின் ஆயில் இழக்க நேரிடும் பொழுது பெடல் மிதிக்கும் பொழுது வரும் சத்தம் போன்றே மூட்டுக்களுக்குள் சத்தம் வரும். பெரும்பாலும் இதனை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விட நேரிடும், இதனை தொடர்ந்து அடுத்த நிலையான பஞ்சு போன்ற பகுதி கொஞ்சம் கொஞ்சமாக தேய ஆரம்பித்து மொத்த மூட்டு பகுதியும் தனது செய்ல் திறனை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக வளைய ஆரம்பிக்கும். (deformity). இதனால் மொத்த கட்டமைப்பும் ஆட்டம் காண ஆரம்பித்தால் மருத்துவர் உங்களை அறுவை சிகிச்சைக்கு செல்லுமாறு வழி காட்டுவார்.

அப்படி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலரையும் நீங்களை கண்டு இருக்கலாம். இது போன்ற இன்னும் பல விதமான் மூட்டுக்களை பாதிக்கும் ஆர்த்ரைடிஸ் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் வருடம் தோறும் OCT 12 தேதி உலக ஆர்த்ரைடிஸ் தினமாக அறிவுறுத்தப்படுகிறது. மூட்டுகள் பாதிக்கும் பொழுது இயக்கம் பாதிப்படடுவதால் சுற்றியுள்ள தசைகள் தனது இயங்கு திறனை மெல்ல மெல்ல குறைத்து கொள்ளும். இதனால் தசைகளின் வலு குறைவதால் மீண்டும் மூட்டுகளுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கவும் குணபடுத்தி கொள்ளவும் இயன்முறை மருத்துவம் எனப்படும் பிசியோதெரபி துணைபுரிகிறது.

ஆர்த்ரைடிஸ் நம்மைத் தாக்கியுள்ளது என்பதை சில எளிய வழிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதாவது கால் மூட்டில் கடுமையான வலி இருப்பது, காலைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நகர்த்த முடியாமல் இருப்பது, மூட்டுகளில் கடும் எரிச்சல் ஆகியவற்றின் மூலம் அறியலாம். மேலும் மூட்டுகள் விரைப்பு, வீக்கம், சிவந்திருத்தல், எரிச்சலாக இருக்கும் இடத்தில் தசைகள் மிகவும் தளர்வாக இருத்தல் ஆகியவையும் ஆர்த்ரைடிஸ்ஸின் அறிகுறிகளாகும்.

இந்தப் பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம். முன்னரே சொன்னது போல் பிஸியோ தெரபிஸ்ட்டிடம் சென்றால், இதற்கான சிறப்பு உடற்பயிற்சிகளைச் சொல்லிக்கொடுப்பார். உடலில் கை, கால், தசை, மூட்டுகள் என எதாவது ஒரு பகுதிகளில் வலி, வீக்கம் ஒரு மாதத்துக்கு மேல் இருந்தால் அது முடக்கு வாதமாக இருக்கலாம். எனவே, உடனடியாக எலும்பு, தசை, இணைப்புதிசு போன்ற துறையின் மருத்துவர்களை அணுகி ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மூட்டுவலிக்காகக் கொடுக்கப்படும் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைத்த நாள்கள் வரை தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும். வலி குணமாகிவிட்டது என தாங்களாகவே மருந்து, மாத்திரைகளை நிறுத்திவிடக் கூடாது. ஆண்களைவிட, அதிகமாகப் பெண்களே பாதிக்கப் படுகிறார்கள். எனவே, பெண்கள் அதிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். முடக்கு வாதத்தின் அறிகுறிகளை அலட்சியப்படுத்தக்கூடாது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.