November 27, 2022

மன நலத்தை பாதிக்கும் ஒர்க் ஃப்ரம் ஹோம் – ஊழியர்களுக்கு ஒரு வார லீவு கொடுத்த லிங்க்டின்!

திமூன்று மாதங்களுக்கு முன்னர் பரவி பத்து மாதங்கள் பாடாய் படுத்திய பின்னர் மிகச் சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு மெதுவாக குறையத் தொடங்கியதால், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று வேலை செய்யத் தொடங்கினர். ஆனாலும் இன்னமும் சில பெரு நிறுவனங்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. காரணம் கொரோனா அலை மீண்டும் பரவி வருவதை கருத்தில் கொண்டு ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தினர். அந்த வகையில் தினமும் டிரஸ் அயர்ன் செய்ய அவசியம் இல்லை, அவ்வப்போது புது டிரஸ் எடுக்க வேண்டியதில்லை, டிராஃபிக் அலைச்சல் இல்லாதது, போக்குவரத்துச் செலவுகள் இல்லாதது, குடும்பத்துடன் கூடுதலா நேரம் செலவிடுவதுனு ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையால் நிறைய பாசிட்டிவ் மாற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது ஊழியர்களுக்கு மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாக ஆய்வுகள் வெளியாகின.

அதாவது வீட்டில் இருந்து வேலை செய்வது ஆரம்பத்தில் பலருக்கும் மகிழ்ச்சியையே கொடுத்தது. ஆனால் ஒருகட்டத்தில் உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படத் தொடங்கின. அலுவலகத்தில் வேலை செய்யும் போது மீட்டிங்கில் கலந்து கொள்வது, சக ஊழியர்களுடன் உரையாடுவது என பொழுது போகும். ஆனால் தற்போது எல்லாம் ஆன்லைனில் தான் நடந்து கொண்டிருக்கின்றன. நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் முதுகு வலி ஏற்படுகிறது. அவ்வப்போது பலருக்கு தலைவலி வேறு துன்புறுத்துகிறது. அது மட்டுமின்றி வீட்டில் இருந்து வேலை செய்வதால் தனிப்பட்ட வாழ்க்கையை பிரித்து பார்க்க முடிவதில்லை. இதனால் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது. பலரும் விருப்பமானதை சாப்பிடுவது அதிகரித்துள்ளது. சில நாட்கள் இரு வேளையும், சில நாட்கள் நான்கு வேளையும் உண்பது வாடிக்கையாகி விட்டது.. அலுவலகத்தில் ஏதோ கார்ணத்துக்காக சிறிய நடைபயணத்தை மேற்கொள்வார்கள். இவையெல்லாம் ஒர்க் ஃப்ரம் ஹோமில் நின் போய்விட்டன. இதனால் பலரின் உடல் எடை 4 கிலோ அதிகரித்துவிட்டது. பலருக்கு இரவில் சரியாக தூங்க முடியவில்லை. 4 மணி நேரத்திற்கும் குறைவாக மட்டுமே தூங்க முடிகிறது என்றெல்லாம் சொல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டு, உலகளவில் வேலைவாய்ப்பு தகவல்களை முன்னணியில் கொடுக்கும் லிங்க்டின் (LinkedIn) நிறுவனம், தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்துள்ளது. அதாவது, ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் லிங்கெடின் நிறுவனத்தின் பணியாற்றும் 15,900 ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறையை கொடுத்து அசத்தியுள்ளது. வழக்கமான நடைமுறையில் இருந்து ஒரு மாற்றத்தை சந்திக்கவும், மனதளவில் புத்துணர்ச்சி பெறுவதற்கும், தங்களை Refresh செய்து கொள்வதற்கும், ஊழியர்களுக்கு இந்த விடுமுறையை லிங்கெடின் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய லிங்டின் தலைமை செயல் அதிகாரியான டியூலா ஹான்சன் (Teuila Hanson), “லிங்க்டின் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மதிப்பு மிக்க ஒன்றை கொடுக்க விரும்பினோம். அனைவரும் கூட்டாக விலகிச் செல்ல வேண்டிய நேரம் இது என்பதால், எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஒருவாரம் விடுமுறை கொடுத்துள்ளோம்” என்று அறிவித்துள்ளார். அதே சமயம் , முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என தெரிவித்த டியூலா ஹான்சன், அவர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை பின்வரும் நாட்களில் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஒரு வாரம் விடுமுறை எதற்காக என்பது குறித்து விளக்கிய டியூலா ஹான்சன், ” கொரோனா காலத்தில் ஊழியர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை ஆய்வின் மூலம் உணர்ந்து கொண்டோம். இதனை மாற்ற வேண்டும் என முடிவு செய்து, அதன்படி Lift Up என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தோம். இந்த வார விடுமுறையில் ஊழியர்களுக்கு எந்த மீட்டிங்கும் இருக்காது, தங்களுடைய மன நலத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படும், வழக்கமான நடைமுறையில் இருந்து விலகி புத்துணர்ச்சியுடன் சிந்திக்க வைக்கும் வகையிலான பயிற்சிகளும் கொடுக்கப்படும்”, என்று கூறியுள்ளார்.