மகளிர் உலகக் குத்துச் சண்டைப் போட்டி: இந்திய வீராங்கனை முன்னேற்றம்!

மகளிர் உலகக் குத்துச் சண்டைப் போட்டி: இந்திய வீராங்கனை முன்னேற்றம்!

துருக்கியில் நடைபெறும் உலக குத்துச்சண்டை போட்டியில் முன்னால் உலக சாம்பியனான சென் நியென் சின்னை வீழ்த்தி லவ்லினா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12ஆவது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 73 நாடுகளை சேர்ந்த 310 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 70 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், முன்னாள் உலக சாம்பியனான சென் நின் சின்னை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் முதலில் இருவரும் தற்காப்பு யுக்தியை கையாண்டனர். அதன் பிறகு இருவரும் சரமாரியாக குத்துகளை விட்டனர். முடிவில் லவ்லினா 3-2 என்ற கணக்கில் சென் நின் சின்னை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

அசாமை சேர்ந்த 24 வயதான லவ்லினா கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு கலந்து கொண்ட முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் லவ்லினா, இங்கிலாந்தின் சின்டி நம்பாவை நாளை மறுநாள் சந்திக்க உள்ளார்.

அதே போல் செவ்வாயன்று நடந்த போட்டியில் ருமேனிய வீராங்கனை ஸ்டெலுடா டுடாவை வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்குள் நுழைந்த இந்தியாவின் நீத்து (48 கிலோ) தனது முதல் போட்டியிலேயே அசத்தினார். சனிக்கிழமை நடைபெறும் இறுதி 16 சுற்றில் நீத்து ஸ்பெயினின் மார்த்தா லோபஸ் டெல் அர்போலை எதிர்கொள்கிறார்.

Related Posts

error: Content is protected !!