திரும்ப விளையாட வரப் போறேன்னு சொல்றாஹ – டென்னிஸ் ஷரபோவா!

திரும்ப விளையாட வரப் போறேன்னு சொல்றாஹ – டென்னிஸ் ஷரபோவா!

சர்வதேச டென்னிஸ் அரங்கில் அழகு புயலாகவும், அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனையாகவும் வலம் வந்தவர், ரஷியாவின் மரிய ஷரபோவா. இதுவரை 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஷரபோவா, தரவரிசையில் நம்பர் ஒன் இடத்திலும் இருந்துள்ளார்.

maria oct 5

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஷரபோவாவிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் பரிசோதித்த போது, அவர் ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமானது. ‘இதய பிரச்சினைக்காக 2006–ம் ஆண்டில் இருந்து மெல்டோனியத்தை பயன்படுத்தி வந்தேன். ஆனால் 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அது புதியதாக தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பட்டியலில் சேர்க்கப்பட்டதை கவனிக்காமல் உட்கொண்டு விட்டேன். மற்றபடி திறனை அதிகரிக்க ஒரு போதும் ஊக்கமருந்தை பயன்படுத்தியதில்லை’ என்று ஷரபோவா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய சர்வதேச டென்னிஸ் சங்கம் ஷரபோவாவுக்கு 2 ஆண்டு காலம் தடை விதித்தது. தடையை எதிர்த்து ஷரபோவா சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தார். அது குறித்து நேற்று விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், ஷரபோவாவுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு கால தடையை 15 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டது.

‘ஷரபோவா, ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியது உண்மை தான். ஆனால் திட்டமிட்டு ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்படவில்லை. எனவே 15 மாத தடையே சரியானதாக இருக்கும்’ என்று தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி ஷரபோவா 2017–ம் ஆண்டு ஏப்ரல் 26–ந்தேதி மீண்டும் டென்னிஸ் களம் திரும்ப முடியும். அதாவது அடுத்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் விளையாட வாய்ப்புள்ளது.

தீர்ப்பு குறித்து 29 வயதான ஷரபோவா கருத்து தெரிவிக்கையில், ‘டென்னிஸ் தான் எனது உயிர் மூச்சு. அதை தவற விடுவது வருத்தம் அளிக்கிறது. மறுபடியும் டென்னிஸ் களம் திரும்பும் வரை நாட்களை எண்ணி கொண்டிருப்பேன். டென்னிசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக மார்ச்சில் கேள்விப்பட்டேன். அந்த நாள் எனது வாழ்க்கையில் கடினமான நாட்களில் ஒன்று. இனி மீண்டும் களம் திரும்புவது தான் எனது வாழ்க்கையில் சந்தோஷமான நாட்களாக இருக்கும்’ என்றார்.

Related Posts

error: Content is protected !!