மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்!

மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்!

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார். அவருக்கு வயது 81.

கருப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி ஆவார். இவர் நெல்சன் மண்டேலாவுடன் பல்வேறு போராட்டங் களில் கலந்து கொண்டு, அதற்காக சிறையும் சென்றிருக்கிறார். நெல்சன் மண்டேலா தலைமையில் அமைந்த ஆட்சியிலும் முக்கிய அரசுப் பதவிகளை வகித்துள்ளார்.

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது, அவரது கருத்துக்களை வெளியுல கிற்கு சொன்னவர் வின்னி மண்டேலா தான். நெல்சன் மண்டேலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1996-ம் ஆண்டு அவரிடம் இருந்து வின்னி மண்டேலா விவாகரத்து பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினராக மட்டும் வின்னி மண்டேலா பதவி வகித்தார். அவர் சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக வின்னி மண்டேலா மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!