October 18, 2021

பாகிஸ்தானில் சிக்கிய விங் கமாண்டர் அபினவ்! – வீடியோ!

இந்தியாவிற்குள் அத்து மீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்ட மிக் 21 ரக விமானங்கள் புறப்பட்டன. நடுவானில் நடைபெற்ற மோதலில் இந்தியா ஒரு மிக் 21 ரக விமானத்தை இழந்தது. அதில் பயணித்த விமானி ஒருவர் மாயமானதை உறுதிப் படுத்தியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அவரை பாகிஸ்தான் தங்கள் வசம் வைத்திருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளதாகவும் ஆனால் அந்த தகவலை அந்நாடு இதுவரை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்து பின்னர் உண்மைதான் என்றும் கூறி போட்டோ மற்றும் வீடியோவை ரிலீஸ் செய்தது .

 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானப்படை இன்று இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.

இதற்கிடையில் பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானி அபிநந்தன் இன்னமும் திரும்பவில்லை. அவர் சென்ற போர் விமானம் விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகிறது. காணாமல் போன இந்திய விமானி, தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் அபிநந்தனை காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் மற்றொரு விமானியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் கூறி அபிநந்தன் தொடர்பான காணொளியை வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் அபி-யை பலர் தாக்குவது போல் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானியின் இன்னொரு வீடியோ வெளியானது அதில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு நமது வீரர் அளித்த பதில்.

கேள்வி : உங்களுடைய பெயர் என்ன ?

பதில் :wing Commander அபினந்தன்.

கேள்வி : நாங்கள் உங்களை நன்றாக நடத்தி இருக்கிறோம் என்று நம்புகிறோம்

பதில் : கண்டிப்பாக நன்றாக கவனித்தீர்கள். ஒரு வேளை நான் இந்தியா திரும்பி னாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன்.பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் என்னை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர்.அவர்களுக்கும் என்னை பாதுகாப்பாக அழைத்து வந்து உரிய மரியாதை கொடுத்த அனைவருக்கும் நன்றி இதே போன்று தான் எங்களுடைய இந்திய இராணுவமும் உங்களை மரியாதையோடு நடத்தி இருக்கும்

கேள்வி : நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.

பதில் : என்னால் இதற்கு பதில் அளிக்க முடியும்.ஆனால் எந்த இடம் என்று குறிப்பிட்டு நான் சொல்ல மாட்டேன். தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன்

கேள்வி : உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா ?

பதில் : ஆம் sir ஆகி விட்டது.

கேள்வி : நீங்கள் அருந்தும் டீ நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்

பதில் : டீ மிகவும் அருமையாக உள்ளது

கேள்வி : நீங்கள் வந்த விமானத்தின் பெயர் என்ன என்றார் ?

பதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.

கேள்வி : உங்களுடைய இலக்கு என்ன ?

பதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.

உயிரே போனாலும் தாய் நாட்டின் ரகசியத்தை சொல்ல மாட்டேன் என்று வீரத்தோடு சொல்கிறார்.