September 28, 2021

ஒயின் சேல்ஸ் வருஷா வருஷம் எகிறுது! – ஏன் தெரியுமா?

மகாராஷ்டிராவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒயின் விற்பனை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 95 ஒயின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 77 மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. நாசிக் மாவட்டத்தில் மட்டும் 39 ஒயின் ஆலைகள் இயங்கி வருகின்றன. ஒயின் என்பது ஆரோக்கிய பானம் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது நாட்டில் ஒயின் விற்பனை அதிகரித்து வருகிறது.

wine sep 26

அகில இந்திய ஒயின் தயாரிப்பாளர் சங்க தலைவர் யதின்பாட்டல் கூறுகையில், “ கடந்த நிதியாண்டை காட்டிலும், 2015-16வது நிதியாண்டில் நாடு முழுவதும் ஒயின் விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒயின் ஆரோக்கிய பானம் என்பது குறித்த விழிப்புணர்வு, கல்வியறிவு மற்றும் தெளிவான முடிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஒயின் விற்பனையை அதிகரித்துள்ளன. ஆண்டுதோறும் ஒயின் விற்பனை அதிகரித்து அடுத்த ஐந்தாண்டுகளில் 20 சதவீத வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015-16ம் நிதியாண்டில் ஒயின் விற்பனை 1.40 கோடி லிட்டராக உள்ளது. இது 2020-21ம் நிதியாண்டில் 3 கோடி லிட்டராக அதிகரிக்கும். வாடிக்கையாளர்கை இலக்காக வைத்து குறைந்த விலையில் ஒயின் தயாரிக்கப்படுகிறது. இதுவும் ஒயின் விற்பனை அதிகரிப்பதற்கான ஒரு காரணமாகும்” என்றார்.