கடந்த இரண்டு மாதங்களாக தினசரி செய்திகளில் இடம் பிடித்தப்படி காட்டிலிருந்து நாட்டுக்குள் வந்து முகாமிட்டிருந்த யானை சின்னத்தம்பியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து விட்டனர். அதை தொடர்ந்து பலத்த முயற்சிக்கு பின்னர் சின்ந்த் தம்பியை டாப் சிலிப் முகாமுக்கு கொண்டு சென்றதால் பலரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கண்ணாடி புத்தூரில் 15வது நாளாக பொது மக்களை அச்சுறுத்தியும் விளைநிலங்களுக்கு சேதம் ஏற்படுத்தியும் வந்த சின்னதம்பி யானை வனத்துறையால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. முன்னதாக காலை 5 மணிக்கு தொடங்கிய நடவடிக்கை 5 கட்டமாக நடந்தது. முதல் 4 முறை செலுத்தப்பட்ட ஊசிகளில் ஒன்று மட்டுமே யானையின் உடலில் பட்டது. மற்ற மூன்று ஊசிகள் தவறியது.கடைசி முயற்சியாக செலுத்தப்பட்ட ஊசி யானையின் உடலில் பின்புறமாக பட்டது. இதனை தொடர்ந்து, யானை பிளிறியவாறு கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து கொண்டது.
தொடர்ந்து அரை மணி நேரத்தில் மயக்க நிலையை அடைந்தது. உடனே கும்கி யானைகள் மூலம் சின்னதம்பி யானையின் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு லாரிகளில் ஏற்ற தயார் செய்யப்பட்டது. இதற்கென, கேரள மாநில வனத்துறை மூலம் வயநாடு பகுதியிலிருந்து யானைகள் ஏற்றும் வண்டிகள் கொண்டுவரப்பட்டிருந்தது.
இது குறித்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”உயர்நீதிமன்ற உத்தரவு படி, வெற்றிகரமாக யானைக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி பிடித்திருக்கிறோம். இந்த யானை டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு முறையாக பராமரிக்கப்படும். அரசின் உத்தரவுப்படி கூட்டுமுயற்சியால் இந்த யானையை பிடித்திருக்கிறோம். மருத்துவர்கள் கூற்றுப்படி 8 மில்லி போதை மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்கு சின்னத்தம்பி யானை முகாமிற்கு கொண்டு செல்லப்படும்” என கூறினார்.
ஆக..கடந்த 15 நாளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சின்னதம்பி யானை பிடிபட்டு உள்ளது அப்பகுதி மக்களை மட்டுமின்றி பல்வேறு ஊடகவாசிகளையும் நிம்மதியடைய செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் ஏவி வருகிறது. இதன்படி…
கடந்த மூன்று நாட்களாக ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. அவர் செய்தது தவறு என்று பாஜக அபிமானிகள்…
“அடுத்தடுத்து வரும் படங்களில், சின்ன வேடத்தில் நடித்தால்கூட போதும் என நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே ஹீரோ என்று வந்திருக்கும்…
டைரக்டர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.…
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம்…
இரண்டு நாட்கள் முன் வரை எம்பியாக இருந்த ராகுல் காந்தி, தற்போது தனது அந்த பதவியை இழந்து நிற்கிறார். அவரது…
This website uses cookies.