சுர்ஜித் மீட்புப் பணியில் சுணக்கம் ஏன்? போர்வெல் தோண்டும் அதிகாரம் யாருக்கு?
அப்பப்பா.. கடந்த இரண்டு,மூன்று நாட்களாக சோஷியல் மீடியாக்களில் ஒரு பக்கம் சுர்ஜித்-துக்கு ஆதரவாக பிரே பண்ணியும்., இன்னொருப் பக்கம் மீட்பு பணியில் ஈடுப்பட்டிருக்கும் துறை எது? என்று தெரியாமலே அவர்களை சகட்டுமேனிக்கு திட்டுவோரின் குரலும் கொஞ்சம் எல்லை மீறிதான் போய் விட்டது. இது போன்ற மீட்புப் பணியில் முதலில் இறங்கி தொடர்ந்து ஈடுப்பட்டு வருவது தீயணைப்பு துறை ஆகும். நம் தமிழக காவல் துறையிலிருந்து பிரிந்து வந்த துறையே தீயணைப்பு துறை, ஆரம்பத்தில் விரல் விட்டு எண்ணக் கூட்டிய அளவிலான தீயணைப்பு வீரர்கள் பிரிவு என்றொன்று ஏற்படுத்தப்பட்டு தற்போது அது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை என்று ஆகி சில ஆயிரம் பணியாளர்கள் கொண்ட துறையாக்கும். இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த துறையில் இன்று வரை ஆங்கிலேயர் கள் காலத்தில் கடைப் பிடிக்கப் பட்ட விதிமுறையே இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. மற்றத்துறைகளைவிட 60 வருடங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று சொன்னால் நம்ப முடியுமா?
இன்றளவும் ஒவ்வொரு தீயணைப்பு வீரரின் பணி மிக கடினமான, துணிச்சலான அதே சமயம் சவால் நிறைந்த பணியாகும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது தெரிந்தும் தெரியாத துமான ஆபத்துகளைத் தாங்கிப் பணிபுரியும் பணியாளரின் உடல்நிலை மற்றும் மன நிலை பாதிக்கக்கூடும். தீ, வெள்ளம், புயல், பூகம்பம், நிலச்சரிவு, ரசாயன வாயுகசிவு, கட்டிட இடுபாடு களில் மீட்பு பணி போன்ற நிகழ்வுகளில் பணிபுரியும்போது சிறியதும் பெரியதுமான காயங்கள், உடல் உறுப்புகளின் தற்காலிக மற்றும் நிரந்தரச் செயலிழப்பு, உடல் உறுப்புகளைப் பறிகொடுத்தல் போன்ற பாதிப்புகள் மட்டுமின்றி சில விபத்துகளில் பணிபுரியும்போது மரணமும்கூட ஏற்படும். இத்தனை ஆபத்துக்களையும் தாண்டி சக உயிர்களைக் காப்பதொன்றே கடமையாகக் கொண்டி ருக்கிறார்கள் தீயணைப்பு வீரர்கள். போர்க்களத்தில் எதிரிகளோடு போரிடும் வீரர்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல,
ஆனால் இன்றளவும் இது தேசிய மாநிலத்துறைகளில் துணைத்துறையாகவே செயல்பட்டு
வருகிறது. இத்துறையில் இன்றைய கால சூழ்நிலைக்கு தக்க தேவையான உபகரணங்கள் ஏதும் கிடையாது.வழங்கப்படவும் இல்லை. ஆனாலும் இத்துறை இறைவன் அருளாலும், கடமை உணர்வு கொண்ட பணியாளர்களாலும்,சேவை மனப்பான்மை மக்களாலும் செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தனியார் கம்பெனி, நிறுவனங்கள் போன்றவற்றிற்கு சான்றுவழங்கும் அதிகாரம் மட்டுமே, அதை நிறுத்தும் அதிகாரமோ சட்டமோ கிடையாது. அதாவது போலீஸ் ஸ்டேசனின் பாராக்காரருக்கு உள்ள பவர்தான்.
இப்போது போர்வெல்லில் சிக்கி நிறைய குழந்தை மற்றும் விலங்குகள் பாதிப்படைந்தும், அரசு பேரிடர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய சொல்கிறது. ஆனால் பேரிடர் உபகரணம் வாங்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. போர்வெல்லுக்கு அதிகாரம் வழங்கும் அலுவலர் யார் என்று அரசு உறுதிபடுத்தவில்லை. அவசர அழைப்புக்குச் செல்லும் தீயணைப்பு வாகனத்திற்கு வழி விடாத வாகனங்கள், நபர்கள் மீது தண்டணை வழங்கும் சட்டமும், அதிகாரமும் இத்துறைக்கு பல முறை கோரியும் இது வரை வழங்கப்படவில்லை.
தேவையான, முறையான உபகரணங்கள்,பதவி உயர்வு இல்லாமல் பணியாளர்கள் மன உளைச்ச லில் பணிபுரிந்து வருகிறார்கள். தொழில் நுட்பரீதியாக தீ-மீட்பு சம்பந்தமாக படித்தவர்களை அதிகாரியாக தேர்வு செய்யாதது இத்துறையின் வளர்ச்சிக்கு பெரிய பாதிப்பு. இன்று தீயணைப்புத் துறையின் மீது படும் குறைபாடுகள் வருங்காலங்களில் இத்துறையின் வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமையும்.
இதை எல்லாம் அறிந்து கொள்ளாமல் சீனாவில் இது போல் குழியில் விழுந்த குழந்தையை பத்தாவது நிமிடத்தில் காப்பாற்றிய வீடியோவையும், பேனா தனக்கு தோன்றியதை பேப்பரில் ஐடியா என்ற பெயரில் வரைந்து வாய்ஸ் ஓவர் கொடுத்து வாட்ஸ் அப்-பில் ஷேர் செய்வதாலும் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. சரியாக, தெளிவாக புரிந்து குரல் கொடுங்கள் ப்ளிஸ்
தீயணைப்பு வீரர்களுக்காக
அகஸ்தீஸ்வரன்