எதை மறைக்க இந்த நேசமணி ட்ரென்டிங்?

எப்படி மீடியா நியூஸ் திரிக்கபடுகிறதோ அதே தான் இந்த சோஷியல் மீடியா நியூஸும்…நேற்று முழுவதும் நேசமனி விஷயத்தை நெ 1 ட்ரென்டிங்காக கொண்டு வந்த சாதாரண பாமரர்கள் நேற்றைய முக்கிய நிகழ்வுகளை அப்படியே மறைத்து விட்டனர்………ட்ரென்டிங் என்பது நாமே உருவாக்கும் ஒரு சின்ன விஷயம், அதுவும் உப்பு சப்பில்லாத ஒரு காமெடி நிகழ்ச்சியின் ஒரு சிறு பகுதியை வைத்து ஆல் இந்தியா ட்ரென்டிங் கொண்டுவர முடியும் என்பதை நேற்று நிருபிக்கபட்டது…….உண்மையிலே இது தான் ” நிஜம்” அது மோடி கோ பேக் ஆகட்டும், என் தலைவன் படம் முதல் நாளில் 10 லட்சம் ஹிட், 1 மில்லியன் வியூஸ் இது எல்லாமே அரசியல் ஐடி டீம், தேர்ட்பார்ட்டி எஸ் ஈ ஓ ஸ்பெஸலிஸ்ட்ஸ் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் ஆட்கள் செய்யும் ஒரு செயற்கை வெளிப்பாடே…!

ஓகே நேற்று மறைக்கபட்ட அல்லது டேக் டைவர்ஷன் செய்த நேசமணி விஷயத்தை ஒதுக்கினால் இந்த முக்கிய நிகழ்வுகள் நேற்று உயிரோடு புதைக்கபட்டது……தினமும் பல பிரேக்கங் நியூஸ் வருவதால் புதைக்கபட்ட நியூஸ் புதைக்கபட்டது தான் இதை யாராலும் அடுத்த நாள் ட்ரென்டிங்காக கொண்டுவர இயலாது…… மீடியாவும் அது நல்லதோ, கெட்டதோ அதையொட்டி தான் அவர்களின் பார்வை இருக்கும்………….. நேற்றைய முக்கிய நிகழ்வுகள் இதோ – ஈதில் எதை மறைக்க இந்த நேசமணி ட்ரென்டிங் கொண்டு வரப்பட்டது என்பதை உங்களின் பார்வைக்கு விட்டுவிடுகிறேன்………

1. நெல் ஜெயராமன் – விவசாய நாடான இந்தியாவின் 175 வகை அரிய வகை நெல் விதைகளை சேமித்து வைத்து அதை டெல்டா விவசாயிகளுக்கு உறுதுனையாய் இருந்து நம் சாப்பிடும் அரிசிக்கு ஆதாராமாய் இருந்து மறைந்த ஒரு பெரும் புரட்சியாளர் தான் இந்த நெல் ஜெயராமன். அவர் உயிரோடு இருந்த வரை ஒரு கவுரவமும் கொடுக்கப்படவில்லை. அவர் இறந்த பின்பு இப்போது +2 பாட்டனி சிலபஸில் அவரை பற்றி சேர்த்திருப்பது வரலாற்று வெற்றி தமிழர்களுக்கும் மொத்த இந்தியாவுக்கும். இந்த மாதிரி புரட்சியை எந்த ஒரு இந்தியரும் செய்தது இல்லை.

2. அனிதா தற்கொலை, மற்றும் வேமுலா கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டதை மீடிய வரிந்து கட்டுகொண்டு பெரிதாக்கியது, ஆனால் எஸ் ஆர் எம் கல்லூரியில் மூன்று மாணவிகள் இரண்டு நாளில் தற்கொலை என்பதை – அனேக மீடியாக்கள் – தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழப்பு என்று சிம்பிள் சென்ட்டன்ஸில் முடித்துவிட்டனர். பச்சைமுத்து சமீபத்தில் வென்ற எம்பி என்பதனாலா, அல்லது தண்ணி வரலைனா லைவ் கவரேஜ் போடும் நட்ட நடு சென்ட்டர் தன்னை கூறி கொள்ளும் புதிய தலைமுறை அதை பற்றி கொஞ்சமும் மூச்சு விடாதது ஏன்?

3. TNEBல் சத்தமில்லாமல் நேற்று, ஆந்திர, கேரளா, கர்னாடாக மானிலத்தில் இருன்டு அப்பாயின்மென்ட் செய்யபட்ட ஊழியர்கள் விஷயத்தை மறைக்கவா? தமிழ் நாட்டில் தமிழர்க்கு வேலை வாய்ப்பு கேட்டு மத்திய அரசான ரயில்வே டிபார்ட்மென்ட்டில் போராடி கொண்டிருக்கும்போது, தமிழக TNEBல் வேலை செய்யவே வெளிமானில ஆட்கள் என்றால்?

4. ஒரு அமைச்சர் ஒரு பெர்மிஷனை சைன் செய்ய – இரண்டு பாலிவுட் நடிகைகளை லஞ்சமாக கேட்ட அவலத்தை மறைக்கவா?

5. மோடி / ஜகன் அண்ணா பதவியேற்பு விழாவை மறைக்கவா…………..

உங்கள் வியூகங்களுக்கே விட்டு விடுகிறேன்…………… ஆனால் இன்று முதல் England வோர்ல்ட்கப் டிரன்டிங் மூலம் இந்த முக்கிய ஒரு நாள் நிகழ்வு அப்படியே புதைக்க்பட்டுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை……