February 7, 2023

நேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை!?

மாண்புமிகு மனதின் குரல் (மன்கிபாத்) பிரதமர் நமோ நேற்று அடிசினலாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது, “மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவழிக்க தேவையில்லை. இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசியில் 75 சதவீதத்தை ஒன்றிய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யும். மீதமுள்ள 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி பயன்படுத்தலாம்” என்றார். தனியார் மருத்துவமனைகளுக்கு ஏன் 25 சதவீதம்.? என எழும் கேள்வியை அப்படியே ஓரங்கட்டி, வேறு விஷயத்தைப் பார்ப்போம்.

எங்கே தடுப்பூசி.?, எங்கே தடுப்பூசி.? என பாவப்பட்ட மக்கள் கதறியது ஒன்றிய அரசின் காதுகளுக்கு இவ்வளவு நாள் எட்டவில்லையா.? திடீரென ஒன்றிய அரசுக்கு எப்படி ஞானோதயம் ஏற்பட்டது.? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு என்ன காரணம் என்றால், கொரோனா தடுப்பூசி, அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, தடுப்பூசிக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடியை ஒன்றிய அரசு இதுவரை எவ்வாறு செலவு செய்துள்ளது. தடுப்பூசி செலுத்துவது அரசின் அடிப்படை கடமை. அதற்குத்தான் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.மாநிலங்களுக்கு தடுப்பூசியை ஏன் இலவசமாக வழங்கக் கூடாது என சரமாரி கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

இதற்கான பதில்தான் நமது மனதின் குரல் பிரதமர் நேற்று படித்தது. இது ஒருபுறம் இருக்க, மே மாதம் 25ம் தேதி TheWire இணையதளத்தில் வந்துள்ள கட்டுரையை நாம் கவனிக்க வேண்டும். அதில், பிரதமர் தனது கடமையில் இருந்து ஒதுங்கி, ‘மாநிலங்களே தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ள வேண்டும்’ என்ற அவரது தடுப்பூசி கொள்கை மிகக்கொடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளது. ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்ற உலகளாவிய மருந்து நிறுவனங்கள், ’இந்தியாவில் உள்ள தனித்தனி மாநிலங்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இந்திய மாநிலங்களின் தேவைகளை ஒன்றிய அரசு ஒருங்கிணைத்து அவர்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று கூறியன.

Global pharma companies like Pfizer, Moderna and Johnson & Johnson do not feel the need to negotiate separately with each Indian state. They have conveyed their preference to deal with a single entity. In effect, they want the Centre to aggregate the requirements of the Indian states and negotiate on their behalf.

மகாராஷ்டிரா மாநிலம் உலகளாவிய டென்டருக்கு அழைப்பு விடுத்த போது எந்த பதிலும் கிடைக்கவில்லை. பஞ்சாப் அரசின் அழைப்புக்கு அமெரிக்க தடுப்பூசி நிறுவனம் மாடர்னா, மாநில டெண்டருக்கு பதிலளிப்பதை விட நேரடியாக ஒன்றியத்துடன் பேச விரும்புவதாக தெரிவித்தது.

The first indication came when global bids invited by states like Maharashtra did not receive any response. US vaccine maker Moderna told Punjab that it would prefer to talk to the Centre directly, rather than respond to a state tender.

இதே நிலைதான், திமுக விடுத்த உலகளாவிய டெண்டருக்கும் கிடைத்தது. மாநில அரசுகளை ஏன் நிறுவனங்கள் கண்டுக்கொள்ளவில்லை என்றால், ஒரே காரணம் அதிக லாப நோக்கத்துடன் வியாபாரம் செய்ய முடியாது என்பதே. சாதாரண சூழலில் நிறுவனங்கள் இந்த கேவலமான முடிவை எடுக்காது. பெருந்தொற்று காலம் என்பதால், நமக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்து நிறுவனங்கள் விளையாடுகின்றன. நிறுவனங்களை விடுங்கள், after all அவை அனைத்தும் நிறுவனங்கள் தானே. நான், நிறுவனங்களை குறை கூறவில்லை. ஏனென்றால், அதுதான் அதன் இயல்பு.

ஆனால், ஒன்றிய அரசை விடுத்து மாநில அரசுகளுடன் பேசத் தயாராக இல்லை என தடுப்பூசி நிறுவனங்கள் இவ்வளவு நாள் மிகவும் சத்தமாக கூறியது, தேசப்பற்றாளர் பிரதமர் மோடியின் காதுகளுக்கு சென்றடையவில்லையா என்ற கேள்வி எழுகிறது. நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் ஒரு கூட்டத்தை அவர் ஏற்பாடு செய்திருக்கலாம் அல்லது நிறுவனங்களின் கூற்றை ஏற்று தடுப்பூசி டெண்டருக்கு ஒன்றிய அரசு தாமாக முன்வந்திருக்கலாம். இவை எதையும் செய்யாமல், பிரதமர் மோடி அப்படி என்ன செய்துகொண்டிருந்தார் என்ற கேள்வி எனக்கு எழுகிறது. உங்களுக்கு.?

கொரோனா என்ற கொடிய நோய் மக்களின் உயிரை கொத்துக்கொத்தாக பறித்துக்கொண்டிருந்த போது, தடுப்பூசி விநியோகத்தின் அடிப்படை கடமையில் இருந்து பதுங்கியது ஏன் என்ற கேள்வி எனக்கு எழுகிறது. உங்களுக்கு.?

நாம் நமது நண்பரை நமது நிறுவனத்திலேயே பணிக்கு சேர்ப்போம். அவனது வேலைக்கு எந்த ஆபத்தும் வராதவாறு முடிந்த அளவுக்கு உதவுவோம். ஆனால், அவன் மமதையாக சுற்றும்போது, ‘கேனக் கிறுக்கா, உன்னை காப்பாத்துறதால, எனக்குதான் கெட்ட பேரு’ என்று, அவனை எப்போவாவது திட்டுவோம் இல்லையா.? அப்படிதான், பிரதமர் மோடியை நோக்கி நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நமது நண்பரும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒழுங்காக இருப்பான். அதே போல், அன்பரும் 2 நாட்களுக்கு மட்டும் வேலை செய்தால் போதாது எனக் கூறிக்கொண்டு, நேற்றைய அவரது உரைக்கு எந்த புகழாரமும் இல்லை என்பதை சொல்லி முடிக்கிறேன்.

எம்.எஸ்.விஸ்வநாதன்

ஆதாரம் தேவையென்போர் க்ளிக் செய்க