November 29, 2022

உக்ரைன் மீது ரஷ்யாவுக்கு ஏன் இந்த மோகம்? இதைப் படிங்க காரணம் புரியும்!

ப்போது சகல செய்தித் தளங்களிலும் முன்னிலை வகிக்கும் உக்ரைன் ஐரோப்பாவின் பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடு மற்றும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டது – போலந்தை விட அதிகம். இநாடு 600 மில்லியன் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இது ஐரோப்பாவின் “ரொட்டி கூடை” என்று அழைக்கப்படுகிறது. வளமான இருண்ட மண் மற்றும் கோதுமை மற்றும் பிற உணவுப் பொருட்களின் பரந்த வயல்களால் உக்ரைன் “ஐரோப்பாவின் ரொட்டி கூடை” என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ளது. சிஐஏ வேர்ல்ட் ஃபேக்ட்புக் படி, உக்ரைன் முன்னாள் சோவியத் யூனியனில் மொத்த விவசாய உற்பத்தியில் 25% உற்பத்தியை செய்து தந்திருக்கிறது.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால் அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர். தடையற்ற வர்த்தகம், முதலாளித்துவப் பொருளாதாரம், அதிக ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகர்வுக் கலாச்சாரம், பொழுதுபோக்குகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட அவர்கள் பழைய சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பெட்டியான வாழ்க்கை முறையிலிருந்து சுதந்திரமான வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றனர். ஒன்றியம் என்ற வார்த்தையே அர்த்தமற்றுப் போன பிறகு மீண்டும், ரஷ்யாவின் பிடிக்குள் வாழ அவர்கள் அஞ்சுகின்றனர்.

இன்றுவரை பொருளாதாரத்தில் வளரும் நாடு உக்ரைன். மனித ஆற்றல் வளர்ச்சியில் உலகத்தில் 74-வது இடத்தில் இருக்கிறது. வறுமையும் ஊழலும் அதிகம்தான். ஆனால் வளமான விவசாய நிலம் இருப்பதால் வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கியமான நாடாகத் திகழ்கிறது. ராணுவ பலத்தில் ரஷ்யா, பிரான்சுக்கு அடுத்து வருகிறது. குடியரசு நாடு, அதிபர் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறை நிலவுகிறது. நீதித்துறை, அரசு நிர்வாகத் துறை, சட்டமியற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்று முக்கிய உறுப்புகளைக் கொண்டிருக்கிறது. அதிபராக விளாடிமிர் ஜெலன்ஸ்கி. பிரதமர் டெனிஸ் ஷைமிஹால் இருக்கிறார்.

 

குறிப்பாக. உக்ரைன் ஒரு முக்கியமான விவசாய நாடு:

விளைநிலத்தின் அடிப்படையில் ஐரோப்பாவில் 1வது இடம்;
கருப்பு மண்ணின் பரப்பளவில் உலகில் 3 வது இடம் (உலகின் அளவு 25%);
சூரியகாந்தி மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் 1வது இடம்;
பார்லி உற்பத்தியில் உலகில் 2வது இடமும், பார்லி ஏற்றுமதியில் 4வது இடமும்;
உலகில் 3வது பெரிய உற்பத்தியாளர் மற்றும் 4வது பெரிய சோள ஏற்றுமதியாளர்;
உலகின் 4வது பெரிய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்;
உலகின் 5வது பெரிய கம்பு உற்பத்தியாளர்;
தேனீ உற்பத்தியில் உலகில் 5வது இடம் (75,000 டன்);
கோதுமை ஏற்றுமதியில் உலகில் 8வது இடம்;
கோழி முட்டை உற்பத்தியில் உலகில் 9 வது இடம்;
சீஸ் ஏற்றுமதியில் உலகில் 16வது இடம்.

மேலும் இந்த உக்ரைன் ஒரு முக்கியமான தொழில்மயமான நாடு:

அம்மோனியா உற்பத்தியில் ஐரோப்பாவில் 1வது இடம்;
ஐரோப்பாவின் 2வது மற்றும் உலகின் 4வது பெரிய இயற்கை எரிவாயு குழாய் அமைப்பு;
அணுமின் நிலையங்களின் நிறுவப்பட்ட திறன் அடிப்படையில் ஐரோப்பாவில் 3வது பெரியதும் மற்றும் உலகில் 8வது பெரிய நாடும் ஆகும்;
ரயில் நெட்வொர்க் நீளத்தின் அடிப்படையில் ஐரோப்பாவில் 3வது இடமும், உலகில் 11வது இடமும் (21,700 கிமீ);
லொக்கேட்டர்கள் மற்றும் லோகேட்டிங் உபகரணங்களின் உற்பத்தியில் உலகில் 3வது இடம் (அமெரிக்கா மற்றும் பிரான்ஸுக்குப் பிறகு);
உலகின் 3வது பெரிய இரும்பு ஏற்றுமதியாளர்
உலகில் அணு மின் நிலையங்களுக்கான விசையாழிகளின் 4வது பெரிய ஏற்றுமதியாளர்;
ராக்கெட் லாஞ்சர்களில் உலகின் 4வது பெரிய உற்பத்தியாளர்;
களிமண் ஏற்றுமதியில் உலகில் 4வது இடம்
டைட்டானியம் ஏற்றுமதியில் உலகில் 4வது இடம்
தாதுக்கள் மற்றும் செறிவு ஏற்றுமதியில் உலகில் 8 வது இடம்;
பாதுகாப்புத் துறை தயாரிப்புகளின் ஏற்றுமதியில் உலகில் 9வது இடம்;
உலகின் 10வது பெரிய எஃகு உற்பத்தியாளர் (32.4 மில்லியன் டன்கள்).

இந்த உக்ரைன் தரவரிசை:

யுரேனியம் தாதுக்களின் நிரூபிக்கப்பட்ட மீட்டெடுக்கக்கூடிய இருப்புகளில் ஐரோப்பாவில் 1வது இடம்;
டைட்டானியம் தாது இருப்பு அடிப்படையில் ஐரோப்பாவில் 2 வது இடம் மற்றும் உலகில் 10 வது இடம்;
மாங்கனீசு தாதுக்களின் (2.3 பில்லியன் டன்கள் அல்லது உலகின் இருப்புகளில் 12%) ஆய்வு செய்யப்பட்ட இருப்புக்களின் அடிப்படையில் உலகில் 2வது இடம்;
உலகின் 2வது பெரிய இரும்புத் தாது இருப்பு (30 பில்லியன் டன்கள்);
பாதரச தாது இருப்புக்களின் அடிப்படையில் ஐரோப்பாவில் 2வது இடம்;
ஷேல் எரிவாயு இருப்புக்களில் ஐரோப்பாவில் 3வது இடம் (உலகில் 13வது இடம்) (22 டிரில்லியன் கன மீட்டர்)
இயற்கை வளங்களின் மொத்த மதிப்பில் உலகில் 4வது இடம்;
நிலக்கரி இருப்பில் உலகில் 7வது இடம் (33.9 பில்லியன் டன்கள்)

இப்படியான காரணங்களால்தான் ரஷ்யாவுக்கு உக்ரைன் முக்கியமானதாகி தாக்குதலுக்குள்ளாகிறது. அதாவது ரஷ்யாவில் அதிபர், பிரதமர், மீண்டும் அதிபர் என்று கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார் விளாடிமிர் புதின். மக்களுக்கு புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சியின் ஆட்சி அலுத்துவிட்டது. ஆரம்ப காலத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி இப்போது இல்லை. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. ரஷ்ய அரசில் ஊழலும், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டும் போக்கும், சலுகைசார் முதலாளித்துவ ஆதிக்கமும் வளர்ந்து வருகின்றன. ஆட்சியில் தானே தொடர வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் வெவ்வேறு காரணங்களைக் கூறி ஒடுக்கி வருகிறார் புதின்.

மக்களுடைய ஜனநாயக விருப்பங்களுக்கு மேற்கத்திய நாடுகள் தூபம் போடுவதால், நாட்டை பழைய கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தைப் போல கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ரஷ்யாவிலேயே இயற்கை எரிவாயு, கச்சா பெட்ரோலிய எண்ணெய் கிடைப்பது அரசுக்குப் பொருளாதார வளத்தைத் தந்திருக்கிறது. சோவியத்கால ராணுவ பலம் அப்படியே குறையாமல் இருக்கிறது. எனவே இவற்றைக் கொண்டு தானும் ஒரு வல்லரசுதான் என்று நிரூபிக்க புதின் முயல்கிறார். புதிய வல்லரசாகவும் பொருளாதார வலிமை மிக்க நாடாகவும் வளரும் சீனம், ரஷ்யாவை நெருக்கமான நண்பனாகப் பெற்றிருக்கிறது.

ஐரோப்பாவிலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றத் துடிக்கும் ரஷ்யாவுக்கும், சீனத்துக்கும் பொதுவான எண்ணமாக அமெரிக்க எதிர்ப்புணர்வு இருப்பதால் இரண்டும் இணைந்து செயல்படுகின்றன.

நெருக்கடி என்றால் சீனா நமக்குத் துணை நிற்கும் என்ற நம்பிக்கையில் அமெரிக்காவைச் சீண்டிப்பார்க்க விரும்புகிறார் புதின். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய அமெரிக்கா இப்போது தன்னுடைய நாட்டு தொழில், வர்த்தகத் துறை மீட்சியில் மட்டுமே அக்கறையாக இருக்கிறது. எனவே இந்த பலவீனமான நேரத்தில் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வைக்க உக்ரைன் விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுகிறது ரஷ்யா.

இது ராணுவ பலக் கூட்டை அடிப்படையாகக் கொண்ட போட்டியாகவும் ஐரோப்பிய சந்தையை யார் பிடிப்பது என்ற வர்த்தகப் போராகவும் கூட இருக்கிறது. அதைவிட முக்கியம் இரு பெரும் நாடுகளின் தலைவர்கள், தங்களுடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடாமலிருக்க, தங்களை செல்வாக்குள்ள தலைவர்களாக காட்டிக் கொள்ளவும் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கி வருகின்றனர்.

முதல் இரண்டு உலகப் போர்களைவிட மிகப் பெரிய போருக்கு உக்ரைன் விவகாரம் இட்டுச் செல்லும் என்று ஊடகங்கள் அஞ்சும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. இதற்கு ஒரே காரணம் உக்ரைன், ரஷ்யா இரண்டுமே அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ளன. மோதல் முற்றி போர் மூண்டால் அணு ஆயுதங்களை இரண்டும் பயன்படுத்தும் என்ற அச்சமும் ஏற்பட்டது. இதனாலேயே உலக நாடுகள் உக்ரைன் விவகாரத்தை கவனமாகப் பின்பற்றுகின்றன.

ரெங்கராஜன்