மேரேஜ் மெட்டிரியலாகத்தான் இந்திய சமூகம் 80 % பெண்களை வைத்துள்ளது!

மேரேஜ் மெட்டிரியலாகத்தான் இந்திய சமூகம் 80 % பெண்களை வைத்துள்ளது!

செருப்பால் அடிக்கனும்” – ஆம்.. கொஞ்சம் பச்சையாக் பேசப்போகிறேன் . சமூகத்திற்கான கோபம் இது. பெண்கள் முன்னேறிவிட்டார்கள், அவர்களுக்கு என்ன சிக்கல், 2023 ல் ஏன் இப்படி பெண் முன்னேற்றம் பேசுகிறீர்கள் என்று பேசும் பலருக்கான பதில் மேலே உள்ளது. பாலியில் சீண்டல் பேருந்தில் வந்தால் நான் முதல் வரியை செய்வேன். அப்படிப்பட்ட உணர்வை பெண் முன்னேற்றதிற்கு எதிர் கருத்து கொண்டிருப்பவர்கள் மேல் கொண்டேன்.

நேற்று முதன் முதலில் 16 வயது குழந்தை தன் குழந்தையுடன் இருந்ததை பார்த்தேன். ஆல்மோஸ்ட் எல்லாருமே டீன் மேரேஜ். ஒரு ஆதி திராவிட குடியிருப்பில் பார்த்த அவலம். சட்டதிற்கு புறம்பான திருமணம் மட்டுமல்ல, குழந்தை வேறு. அது மட்டுமில்லை அந்த சின்ன வயதில் பிரசவத்திற்கு மருத்துவமனை செல்வதில்லை..என்ன நடந்தாலும் வெளியே தெரியாது.

வயிற்றுக்குள் பக பக வென தீ. கண்ணில் ஈரம். அந்த உணர்வை மறைக்க அங்குள்ள குழந்தைகளுக்கு கதை சொல்ல கிளம்பிவிட்டேன். இல்லை எனில் ஏதாவது பேசி இருப்பேன். நாளை உள்ளயே விட மாட்டார்கள். கல்வி சுத்தமாய் இல்லை. சாப்பாட்டுக்கே வழி இல்லை. ஆண்கள் குடி வழி. பெண்கள் திருமணம், கூலி வேலை. வேலை கிடைப்பது கடினம் என்றது ஆச்சர்யம் தந்தது. ஊரை விட்டு செல்ல பெண்களின் அச்சமும் காரணம்.

பால்ய விவாகம் எல்லாம் ஒழியவில்லை .இந்தியா முழுக்க நடக்கிறது தெரியும். கிருஷ்ணகிரி, ஓசுர் முழுக்க இது பரவலாக நடக்கிறது என்பதை கேட்டு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. வசதி இருந்தாலும் அதுதான் என்பதும் அதிர்ச்சிதான். திருமண மண்டபங்களில் கூட பால்ய விவாகம் நடக்கிறதாம். அக்குழந்தைகளின் கையில் குழந்தைகள் என்பதை இந்த நிமிடம் வரை செமிக்க முடியவில்லை. இன்னும் பெண்கள் பயணிக்க வேண்டிய தூரம் அத்தனை இருக்கிறது. மேரேஜ் மெட்டிரியலாகத்தான் இந்திய சமூகம் 80 % பெண்களை  வைத்துள்ளது.

ஏன் இப்படி? என்ன செய்ய போகிறோம்?

கிர்த்திகா தரன்.

Related Posts

error: Content is protected !!