October 16, 2021

அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியது ; இதே அக்டோபர் 14 (195)6

இன்னும் பல ஆயிரம் வருஷங்கள் போனாலும் நம்ம நிலைமை மாறாதுன்னுதான் தோணுது. இப்படி தொடரும் போக்கால நாம் முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கச் சான்சே இல்லை. நாம் அறிந்த இந்து மதத்தில் இருந்து கொண்டு நம்மால் எதையும் செய்ய முடியலை. அவங்களோட மனுஸ்மிருதி சொல்லும் நான்கு வர்ணங்கள் மனித குல முன்னேற்றத்துக்குப் பெரும் ஆபத்து விளைவிப்பவை. அதுலே சூத்திரர்கள் இழிவான வேலைகளை மட்டுமே செய்ய வேண்டுமுன்னு தீர்வா சொல்லுது.

ambedgar oct 14

ஆனாக்க.. மனுசனா பொறந்தவ்னுக்கு கவுரவம்தான் ரொம்ப முக்கியம், வருமானத்திற்க்காக எதையும் இழக்க முடியாது இல்லையா?. நல்ல குணமுடைய ஒவ்வொரு பெண்ணுக்கும், பலான தொழிலில் வருமானம் கிடைக்குமுன்னுத் தெரியும். ஆனால், அதுக்காக அந்த பெண் அப்படிச் செய்வதில்லையே இத்தனைக்கும் தாழ்த்தப்பட்ட என்னுடைய சகோதரிகளுக்குச் சாதாரண சப்பாத்தி-சட்னி கூடக் கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் இன்னி வரைக்கு கண்ணியமாத்தான் வாழறாங்க..ஆமாமுங்கறேன். நாங்கள் எங்கள் கவுரவத்துக்காகத்தன் போராடி வாரோம்ம்.

இதுக்கிடையிலேப் ஒரு பிராமணப் பெண், குழந்தை பெத்துக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்; அப்போதிருந்தே அவள் தனது குழந்தைக்காக இன்னும் முப்பது வருஷத்துலே காலியாகப் போற ஜட்ஜ் போஸ்டிங்கைக் கனவு காண் ஆரம்பித்து விடுவாள். அதே சமயம், நமது துப்புரவுப் பணியாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி குழந்தை பெற்றால், ஒரு துப்புரவுப் பணியைத்தான் தனது குழந்தைக்காகக் கனவுகாண முடியுங்கற கோரமான அமைப்பைத்தான் இந்த இந்து மதம் ஏற்படுத்தியிருகுது. அப்படியான இந்த அமைப்பில் இருந்துகொண்டு எந்த முன்னேற்றத்தை அடைய முடியும்?

பிராமணர்களெல்லாம் கல்வி கற்க வேண்டுமாம்; சத்திரியர்களெல்லா போரிட வேண்டுமாம்; வைசியர்களெல்லாம் வணிகம் செய்யணுமாம்; ஆனா சூத்திரர்களோ தொண்டூழியம் மட்டும்தான் செய்யணும்- மதி நுட்பமான இந்த ஏற்பாட்டை யாரேலேயும் மாத்த முடியாதாம். சிம்பிளா சொல்லப் போனா பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய சாதியினருக்கு இதில் பலன்கள் உண்டு. ஆனால், சூத்திரர்களுக்கு? இந்த அடுக்கில் கீழ்நிலையில் உள்ள சாதியினர் ஊக்கம் கொள்ள ஏதும் இருக்கிறதா? இந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமேயில்லை. இந்த மதத்தின் பெயரால் எங்களை அழித்தவர்கள் அதே மதத்தால் அழிந்துபோவார்கள்.

ஆனா ஒண்ணு.. “இந்துவாக நான் பொறந்துட்டேன்.. வாஸ்தவம்தான்..ஆனா சாகும்போது நான் கண்டிப்பா ஒரு இந்துவாக இறக்க மாட்டேன்” -ன்னு முன்னாடி சபதம் எடுத்திருந்தேன். நேத்திக்கு அதை நிறைவேற்றிட்டேன். இதுனாலே எனக்கு ரொம்ப பரவசமாக இருக்குது!

நேத்திக்கு ஒரு ஆதிக்க சாதிப் பையன் என்கிட்டே வந்து, “பார்லிமெண்டுலேயும் அசெம்பிளிகளிலும் உங்கள் ஜனங்களுக்குன்னு எடங்கள் ஒதுக்கப்பட்டிருக்குதே. அவற்றையெல்லாம் உதறி விட்டா செல்கிறீர்கள்?” என்று கேட்டான். நான் அவங்கிட்டே , “நீ மஹராக (அம்பேத்கர் பிறந்த குலம்) மாறி நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நாங்கள் விட்டுச் செல்லும் இடை வெளியை நிரப்பிக்கொள்! அந்த இடங்களுக்காக ஆதிக்க சாதியினரிடமிருந்து எவ்வளவு மனுக்கள் வருகிறதென்று பார்ப்போம்!”அப்ப்டின்னு சொல்லிட்டேன்

ஆனா இங்கே- நான் இப்போது இணைந்துள்ள புத்த மதத்தின் பகவான் சொல்கிறார், “பிட்சுகளே, நீங்களெல்லாம் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வெவ்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். நதிகளெல்லாம் அவரவர் நாடுகளில் தனித்தனியாக ஓடுகின்றன. ஆனால், கடலில் கலந்த பிறகு அவற்றை நாம் வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது. நீங்களெல்லாம் இரண்டறக் கலந்து விட்டிருக்கிறீர்கள். புத்த மத பிட்சுகளெல்லாம் கடலைப் போன்றவர்கள்.இந்தச் சங்கத்தில் எல்லோரும் சமமே. கடலில் கலந்த பிறகு கங்கையையும் மகாநதியையும் பிரித்தறிய முடியாது. அதே போன்றுதான் இந்த புத்த சங்கத்தில் வந்து கலப்பதன்மூலம் உங்கள் சாதி மறைகிறது, அனைவரும் சரிநிகர் சமானமாகிறீர்கள்.”

நாக்பூரில் தன் இன பல்லாயிர மக்களுடன் அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவியதற்கு மறுநாள் அவர் ஆற்றிய உரையிலிருந்து கொஞ்சூண்டு …