ஐ. நா. -வின் அடுத்த பொது செயலர் யார்?

ஐ. நா. -வின் அடுத்த பொது செயலர் யார்?

ஐ.நா.வின் தற்போதைய பொதுச் செயலர் பான் கி-மூனின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், அடுத்த பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

un jy 22

ஐ.நா. விதிமுறைகளின்படி, பாதுகாப்புக் கவுன்சில் பரிந்துரையின் அடிப்படையில், 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு ஐ.நா. பொதுச் செயலரைத் தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்படும் பொதுச் செயலரை ஏற்க மறுக்கும் அதிகாரம் பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு.விதிமுறைகளில் இல்லாவிட்டாலும், உலகின் அனைத்துப் பிராந்தியத்தினருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், சுழற்சி முறையில் ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்தவரும் பொதுச் செயலராக நியமிக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.

அந்த வகையில், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் ஐ.நா.வின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளனர்.இந்தச் சூழலில், பான் கி-மூனுக்கு அடுத்ததாக தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அடுத்த பொதுச் செயலராக வேண்டும் என்று ரஷியா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும், இதுவரை ஒரு பெண் பொதுச் செயலர் கூட நியமிக்கப்பட்டதில்லை என்பதால், ஒரு பெண்தான் அடுத்த பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று 56 உறுப்பு நாடுகள் வலியுறுத்தி, பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.இந்த நிலையில், இதுதொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் 12 பேர் போட்டியிட்டனர். போட்டி யாளர்களில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டு பேர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.இருவர் தென் அமெரிக்காவையும், ஒருவர் மேற்கு ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள் .அடுத்த பொதுச் செயலர் பதவிக்கான போட்டியில், இதுவரை இல்லாத வகையில் வெளிப்படைத் தன்மை அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல்முறையாக ஐ.நா. பொதுக் குழு உறுப்பினர்கள், தூதர்கள், செய்தியாளர்கள் முன்னிலையில் தாங்கள் ஏன் பொதுச் செயலராக விரும்புகிறோம் என்று போட்டியாளர்கள் விளக்கம் அளித்தனர். இதைத் தவிர, பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்கள் முன்னிலையிலும் போட்டியாளர்கள் தனித்தனியாக “நேர்காணலில்’ கலந்து கொண்டனர்.

error: Content is protected !!