2 வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்வது ஆபத்து! -வீடியோ
சர்வதேச அளவில் கொரோனா தொற்று,பாதிப்பு 17 கோடியை கடந்து விட்டது. இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சத்து 7 ஆயிரத்து 732 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 17 கோடியே 19 லட்சத்து 85 ஆயிரத்து 738 ஆக பதிவாகியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 கோடியே 80 லட்சத்து 48 ஆயிரத்து 949 ஆக உறுதி செய்யபப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர்களில் 78 ஆயிரத்து 554 நபர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள சூழலில் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, வளர்ந்துவரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தும்போது இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகிறது. தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே 2 ஊசிகளை கலந்து போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் உருவாகி உள்ள நிலையில் இது ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது..
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வெவ்வேறு வகையில் உருமாற்றம் அடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, உலகளவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களின் இந்தியாவில் உருவான டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் இதுவரை 104 நாடுகளில் பரவி இருப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம், அண்மை காலமாக உயிரிழப்புகள் அதிகரிக்க இவவகை வைரஸ் தான் காரணம் என கூறியுள்ளார்.
🦉கொரோனா தடுப்பு கலந்துரையாடலில் @WHO சவுமியா சுவாமிநாதன் :
தடுப்பூசியில் முதல் டோஸ் ஒரு மருந்தையும், இரண்டாவது டோஸ் மற்றொரு நிறுவனத்தின் மருந்தையும் போட்டுக் கொள்வது ஆபத்து
மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது என்பதை் மக்களே தீர்மானிக்க கூடாது. pic.twitter.com/nADCQPBqNi
— Àanthai Répørter™ 👀🦉 (@aanthaireporter) July 13, 2021
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் நேற்று நடந்த கருத்தரங்கில் பேசும் போது, “கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல. இன்னும் உலக சுகாதார நிறுவனம் அதில் ஒரு முடிவுக்கு வரவில்லை. இப்போதுள்ள குழப்பமான நிலையில் 2 வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று சிபாரிசு செய்வது ஆபத்தை ஏற்படுத்தி விடலாம்.உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே 2 ஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ-
கொரோனாவுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை. அதற்கு பதிலாக பணக்கார நாடுகள் தங்களிடம் மிச்சம் உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும். உலகளவில் கொரோனா இறப்புகள் 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில், டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐ.நா.வி.ன் கோவேக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும்