ரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா?

ரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா?

எம்.ஜி.ஆர் நடிகராக இருந்தபோது, அவர் முகத்தை காட்டி அண்ணாதுரை ஓட்டு வாங்கி ஆட்சி அமைத்தார். அவருக்கு பின் கருணாநிதி எல்லாம் தானே என்று நினைத்து, எம்.ஜி.ஆரை ஓரம் கட்டினார். ஆட்சியை இழந்தார்.

கட்சி, ஆட்சி நடத்துவது எளிதல்ல. நேர்மையாக ஆட்சி நடத்த அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், தொழிலதிபர்கள் விட மாட்டார்கள். எம்.ஜி.ஆர் ஐந்து ஆண்டுகள் நேர்மையாக ஆட்சி நடத்தினார். அதன்பின், நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால், தன்
நிலையை மாற்றிக் கொண்டார்.

அரசின் எல்லா துறைகளிலும் தன் கட்சியினரை புகுத்தினார். அவர்கள் மூலமாக கட்சிக்கு நிதி திரட்டினார். சாராய சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளாக இருந்த இரு கர்நாடக மாநிலத்தவரை ஓரம் கட்டி, சாராய வினியோக உரிமையை தன் கட்சியின் மூத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு கொடுத்தார். வட்டம், மாவட்டம், பஞ்சாயத்து என எல்லாருக்கும் சாராய வினியோக உரிமை அளித்து, பணக்காரர் ஆக்கினார்.

மருத்துவ கல்லுாரிகளை தனியாரும் துவக்கலாம் என்றார். தன் கட்சி பிரமுகர்கள் மூன்று பேருக்கு மருத்துவ கல்லுாரி தொடங்க அனுமதி கொடுத்தார். கட்சியினருக்கு பதவி கொடுப்பதற்காக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு அமைப்பை ஏற்படுத்தி பதவிகளை வழங்கினார். அவர்களின் அனுமதியும், கண்காணிப்பும் இல்லாமல் எந்த ஒரு நலத் திட்ட உதவியையும் அதிகாரிகள் வழங்க முடியாது.

அரசு நிதியில் பெரும் பகுதி இந்த நிர்வாகிகள் மூலமாக பகிர்ந்து கொடுக்கப்படும். அதில் பாதி, அவர்களின் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களுக்கு போய் விடும். அவர்கள்தான் தேர்தலில் வாய்ப்பு தரப்பட்டு கவுன்சிலராக வருவார்கள். கமிஷனுக்கு தயார் ஆவார்கள். கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கும், மாவட்ட அமைச்சர்களுக்கும் சம அதிகாரம் கொடுக்கப்பட்டது. அரசிடமிருந்து மாவட்டத்துக்கு நேரடியாக வரும் நிதி, இந்த இருவர் சொல்லும் ஒப்பந்தக்காரர்களுக்குதான் போகும். ஒப்பந்தக்காரர்கள் அமைச்சரின் அல்லது மாவட்ட செயலாளரின் பினாமியாக இருப்பார்கள்.

ஒரு நேர்மையான அமைச்சர், என்னிடம் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் சொன்ன தகவல்கள்தான் இவை.

கட்சியின் ஒரு மாவட்ட தலைவர் தண்ணீர் வாரிய தலைவராக இருந்தார். வறட்சி வந்தபோது மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தார். 2,000 லாரிகளுக்கு பணம் கொடுக்க பில் போட்டு, அரசுக்கு அனுப்பினார். உண்மையில் 200 லாரிதான் தண்ணீர் சப்ளை
செய்தது.

இப்படிப்பட்ட ஆட்கள்தான் 20 க்கு மேல் மருத்துவ கல்லுாரிகள், 500 க்கு மேல் இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லுாரிகள் நடத்துகின்றனர். இரண்டு திராவிட கட்சிகளுமே ஊழலில் ஒரே மாதிரி செயல்பட்டனர்.

விஜயகாந்த் நல்லவர். அவரை வளர விடாமல், இரு கட்சிகளின் தலைவர்களும் தடுத்து விட்டனர். அவருடைய கட்சிக்காரர்களை விலைக்கு வாங்கினர். அவருக்கு குடிகாரன் என்று பட்டமும் சூட்டி விட்டனர். பாவம், இப்போது விஜயகாந்த், நிலை குலைந்து
இருக்கிறார்.

முறைகேடாக சம்பாதித்த பணத்தை வைத்து கட்-அவுட் கலாசாரம். போஸ்டர், ஊர்வலம், கூட்டத் துக்கு பல லட்சம் செலவழிப்பது, ஓட்டுக்கு 2,000 கொடுப்பது என சீரழித்து விட்டார்கள்.

மக்களுக்கு பெயரே தெரியாதவர்கள் அமைச்சராக இருக்கிறார்கள். ஆனால் ரஜினி, கமல் இருவ ரும், பல கோடி மக்களின் உள்ளத்தில் குடி கொண்ட நடிகர்கள். 40 ஆண்டுகளாக திரை உலகில் சாதிப்பவர்கள். அவர்களைப் பார்த்து, திராவிட கட்சி தலைவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

இதய நோய் நிபுணர் எஸ்.அர்த்தநாரி தினமலர் சிந்தனைக் களம் பகுதியில் எழுதிய கட்டுரையில் இருந்து:

Related Posts

error: Content is protected !!