Exclusive

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு வெளியிட முக்கியத் தகவல்கள்!

ல்வேறு நாடுகளில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெறியிட்டுள்ளது.

ஒமைக்ரான் பற்றிய தகவல்கள்

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–

ஒமைக்ரான் வகை வைரஸ், ஏற்கனவே கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களில் மீண்டும் எளிதாக தொற்றை ஏற்படுத்தக் கூடும் என்பது முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. டெல்டா திரிபுடன் ஒப்படுகையில் ஒமைக்ரான், ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டதா? என்பது இன்னும் துல்லியமாகப் புலப்படவில்லை. இப்போதைக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் ஓமைக்ரான் பரவலின் தன்மையைக் கண்காணிக்க முடியும்.

ஒமைக்ரான், தடுப்பூசி எதிர்பாற்றல் கொண்டதா? என்பது குறித்து தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போதைக்கு ஒமைக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு மற்ற திரிபுகளை விட வித்தியாசமானது, மோசமானது என்பதை நிரூபிக்க போதிய தரவுகள் இல்லை. தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக கோவிட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆனால், இதை நாம் நேரடியாக ஒமைக்ரானின் வீரியம் என்று கூறிவிட முடியாது. அங்கு அண்மை காலமாக கோவிட்டால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால், கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

aanthai

Recent Posts

20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடலாம் !- இந்தியாவுக்கு எச்சரிக்கை!

சர்வதேச அளவில் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதை கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். வெப்பம் உயர்வதற்கான…

7 hours ago

தமிழ்நாட்டில் தென்னக காசி பைரவர் திருக்கோயில் ஆசியாவிலே உலகில் மிகப்பெரிய பைரவர் ஆலயம்!

உலகிலேயே மிகப்பெரிய பைரவர் ஆலயம் ஒன்று உருவாகி வருகிறது.64 பைரவர்களுக்கும் அந்த ஒரே ஆலயத்தில்சிலைகள் வைக்கப்படுகின்றன. இந்தப் பைரவர் ஆலயம்…

12 hours ago

லட்சுமியின் தண்டனைக் காலம் முடிந்து விட்டது. சித்ரா, மைதிலிகளின் காலம் துவங்க வேண்டாம்!

மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது செய்தியாகி இருக்கிறது. பக்தர்கள் யானைக்கு இறுதி மரியாதை செலுத்தி…

12 hours ago

‘விஜயானந்த்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புத் துளிகள்!

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர்…

1 day ago

பிரபல தனியார் செய்தி நிறுவனமான ‘என்டிடிவி’ -அதானி வசமானது!

இந்திய அளவில் மிகவும் பிரபலமான செய்தி நிறுவனமான என்டிடிவி பங்குகளை அதானி குழுமம் வாங்கியதால், அந்த செய்தி நிறுவனத்தின் இயக்குனர்களான…

1 day ago

கஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு இழிவான பிரச்சாரப் படம் என்று போட்டு உடைத்தற்காக நன்றிகள் நாதவ் லாபிட்!

பன்னாட்டு திரைப்பட விழா (IFFI) கோவாவில் நடந்து வந்தது. அதில் சிறப்புப் பிரிவு வரிசையில் திரையிடப்பட்ட 15 படங்களை பரிசீலனைக்…

1 day ago

This website uses cookies.