மக்கள்: இ.எம்.ஐ. கட்ட வேண்டுமா? வேண்டாமா? – எந்த வங்கி கெடுபிடி செய்யாது?

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்காக மத்திய அரசாங்கத்தால் நாடு தழுவிய லாக்-டவுன் உத்தரவை அடுத்து, வங்கிகளில் கடன் வாங்கி மாததோறும் தவணை முறையில் கட்டி வரும் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கருத்தி கொண்டு சில அரசு வங்கிகள் பெரும் நிவாரணம் அளித்துள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்த வேண்டியதில்லை என்று கடன் வாங்கியவர்களின் ஈ.எம்.ஐ யை மூன்று மாதங்களுக்கு வங்கிகள் ஒத்திவைத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தொடர்ந்து வங்கிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை, ரிசர்வ் வங்கி சில்லறை மற்றும் பயிர் கடன்கள் உட்பட அனைத்து கால கடன்கள் மற்றும் பணி மூலதன கொடுப்பனவுகளுக்கு மூன்று மாத கால அவகாசம் அறிவித்தது. அதனையடுத்து இந்த வங்கிகள் கடன் தவனைகளை மூன்று மாதங்களுக்கு விலக்கு அளித்து உள்ளது. எந்ததெந்த வங்கிகள் அறிவித்துள்ளது என்று தெரிந்து கொள்வோமா?.

பஞ்சாப் நேஷனல் வங்கி:
பிஎன்பி(PNB) ட்வீட் செய்துள்ளது, அதில் “பி.என்.பி தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 2020 மார்ச் 1 முதல் 2020 மே 31 வரை அனைத்து தவணை கால கடன்கள் மற்றும் ரொக்க கடன் வசதிக்கான வட்டி ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Punjab National Bank

@pnbindia

PNB presents relief scheme for our customers. In view of COVID-19, it has been decided to defer payment of all installments on term loan and recovery of interest on cash credit facilities falling due between March 01,2020 and May 31 2020.@DFS_India @dfsfightscorona

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா:
எஸ்பிஐ (SBI) ட்வீட் செய்ததாவது, “கோவிட் -19 (COVID-19) தாக்கத்தை கருத்தில் கொண்டு, 2020 மார்ச் 1 முதல் 2020 மே 31 வரை மூன்று மாதங்களுக்கு செலுத்தப்பட்ட ஈஎம்ஐ ஒத்திவைக்க எஸ்பிஐ (SBI) நடவடிக்கை எடுத்துள்ளது. 2020 மார்ச் 1 முதல் 2020 மே 31 வரை செலுத்தப்பட்ட மூலதன வசதிகளுக்கான வட்டி 2020 ஜூன் 30 வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

State Bank of India

@TheOfficialSBI

Important announcement for all SBI customers.@guptapk @DFS_India @DFSFightsCorona#Announcement #SBI #StateBankOfIndia

பேங்க் ஆஃப் பரோடா:
அதே நேரத்தில், பாங்க் ஆப் பரோடா ட்வீட் செய்ததாவது, “ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலை அடுத்து, பாங்க் ஆப் பரோடா வங்கி, கார்ப்பரேட் கடன், எம்.எஸ்.எம்.இ (MSME), வேளாண் கடன், சில்லறை விற்பனை கடன், வீடு மற்றும் வாகன கடன்கள், தனிநபர் கடன்கள் உட்பட அனைத்து கடன்களின் தவணையும் , மார்ச் 1, 2020 முதல் மே 31, 2020 வரை என மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.

 

Bank of Baroda

@bankofbaroda

#BankofBaroda is providing a moratorium of 3 months on payment of all instalments falling due between 01.03.20 & 31.05.20 for all term loans including Corporate, MSME, Agriculture, Retail, Housing, Auto, Personal loans, etc. in pursuance of the RBI COVID-19 Regulatory Package.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா:

யூனியன் பாங்க் ஆப் இந்தியா ட்வீட் செய்ததாவது, “நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கோவிட் -19 அச்சுறுத்தலை சமாளிக்க நிவாரணத்தின் பயனை வழங்க உள்ளோம். மார்ச் 1, 2020 முதல் மே 31, 2020 வரை வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்களுக்கு கடன் தவணை / வட்டியை செலுத்த வேண்டியதில்லை.

 

Bank of Baroda

@bankofbaroda

#BankofBaroda is providing a moratorium of 3 months on payment of all instalments falling due between 01.03.20 & 31.05.20 for all term loans including Corporate, MSME, Agriculture, Retail, Housing, Auto, Personal loans, etc. in pursuance of the RBI COVID-19 Regulatory Package.

கனரா வங்கி ட்வீட் செய்துள்ளது, அதில் “ரிசர்வ் வங்கி தொகுப்பின் கீழ், கடன் வாங்கியவர்கள் தங்கள் ஈ.எம்.ஐ.யை 2020 மார்ச் 1 முதல் 2020 மே 31 வரை மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.”

 

Canara Bank

@canarabank

In terms of Covid 19- RBI package, borrowers are eligible for moratorium/ deferment of installments/EMI for Term loans falling due from 01.03.2020 to 31.05.2020 & repayment period gets extended accordingly. SMS also has been sent to customers to avail the same. @DFS_India #COVID

கார்ப்பரேஷன் வங்கி:
கார்ப்பரேஷன் வங்கியும் ட்வீட் செய்துள்ளது, “கடன் வாங்கியவர் தனது ஈ.எம்.ஐ-யை (EMI) மார்ச் 1, 2020 முதல் மே 31, 2020 வரை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடன் தவணை கழிக்கப்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், இதற்காக உங்கள் வங்கி கிளையை தொடர்பு கொள்ளலாம்.

 

Canara Bank

@canarabank

In terms of Covid 19- RBI package, borrowers are eligible for moratorium/ deferment of installments/EMI for Term loans falling due from 01.03.2020 to 31.05.2020 & repayment period gets extended accordingly. SMS also has been sent to customers to avail the same. @DFS_India #COVID

இந்த வங்கிகளைத் தவிர, இந்தியன் வங்கி, யூகோ வங்கி, சென்ட்ரல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகியவையும் கடன் தவணைக்கு தடை விதிக்க முன்வந்துள்ளன

aanthai

Recent Posts

அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘ரத்தம்’ பட டீசர்!

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' பட டீசர் பார்வையாளர்களிடையே, படம் குறித்த எதிர்பார்ப்புகளைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நடிகர்…

1 hour ago

சங்கராந்தியன்று இரட்டைப் பரிசு வழங்கும் ஸ்ருதிஹாசன்!

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின்…

7 hours ago

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை சுரேஷ் காமாட்சி ரிலீஸ் செய்கிறார்!

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம்…

7 hours ago

நல்ல கலை இயக்கம் என்பது வெளியே தெரியாமல் இருப்பதுதான்: கலை இயக்குநர் வீரசமர்!

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் 'காதல்' திரைப்படத்திலிருந்து சுமார் 30 படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வீரசமர் .இவர் 'வெயில்', 'பூ',…

8 hours ago

கனெக்ட் படத்தில் என்ன ஸ்பெஷல்? – டைரக்டர் அஸ்வின் சரவணன் பகிர்ந்தவை!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்…

24 hours ago

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து வெளியேற திட்டம்?

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள்…

2 days ago

This website uses cookies.