October 16, 2021

வாட்ஸ் அப் மூலம் வதந்திகள் : தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை!

அடுத்தடுத்து தொடரும் வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகள் பரப்புவதைத் தடுக்க வாட்ஸ் அப் நிறுவன மூத்த அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று டெல்லியில் பேச்சு வார்த்தை நடத்தினர். குறிப்பாக தேர்தல் நேரத்தில் வாட்ஸ் அப் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதெப்படி என்று ஆலோசனை நடத்தினார்கள்.

இனி இது போன்ற வதந்திகள் செய்திகள் பரப்புவதைத் தடுக்க இந்தியாவில் இனி ஒருவர் 5 முறைக்கு மேல் செய்தி, படங்கள், வீடியோக்கள் என மற்றவர்களுக்கு ஃபார்வர்டு செய்ய முடியாத வகையில் கட்டுப்பாடுகள் கொண்டு வர உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இனி ஒருவர் 5 முறைக்கு மேல் செய்தி, படங்கள், வீடியோக்கள் என மற்றவர்களுக்கு ஃபார்வர்டு செய்ய முடியாத வகையில் கட்டுப்பாடுகள் கொண்டு வர உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியை தற்பொழுது 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றன.

இந்த ஆப் மூலம் குடும்பத்தாருடன், நண்பர்களுடன் சாட் செய்வதற்கும், பேசிக் கொள்வதற்கும் வசதியாக உள்ளது. இந்நிலையில் தற்பொழுது வாட்ஸ் அப் மூலம் பொய்யான செய்திகள், வதந்திகள், படங்கள், வீடியோக்கல் என மக்கள் அதிகளவில் பரப்பி வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் பசு பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் என பல்வேறு வதந்திகளால் கடந்த இரண்டு மாதங்களில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. இது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் ஒன்றை மத்திய அரசு அனுப்பியிருந்தது. இந்நிலையில் மீண்டும் தற்போது 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தவறான மற்றும் வதந்திகளை பரப்பும் மார்பிங் படங்கள், வீடியோக்களை தடுக்கும் வகையில் தொழில்நுட்பங்களையும், வழிமுறைகளையும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்னும் மத்திய அரசு அந்த நோட்டீசில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வரவிருக்கும் தேர்தல்காலத்தில் போலி குறுந்தகவல்களை எதிர்கொண்டு தவிர்க்க புதிய தொழில் நுட்ப வசதிகளை வழங்குவது குறித்து டில்லியில் வாட்ஸ் அப் நிறுவன மூத்த அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

தேர்தல் சமயங்களில் வாட்ஸ்அப் தளத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது குறித்தும் தேர்தல் காலத்தில் போலி குறுந்தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் புதிய வசதிகளை வழங்குவது குறித்த பணிகளில் ஈடுபட இருப்பதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதிகள் தேர்தல் துவங்குவதற்கு முன் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வாட்ஸ்அப் பயனாளர் ஒரு செய்தியினை இனி 5 முறைக்கு ஃபார்வர்ட் செய்ய முடியாதவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் உள்ள குயிக் ஃபார்வர்டு பட்டன் நீக்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.