September 23, 2021

விவேகம் – டிரைலர் – என்ன ஸ்பெஷல்?

அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி உள்ள விவேகம் படத்தின் டிரைலர் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியானது. சத்தியஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள படம் விவேகம். இதில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக்ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க சிவா இயக்கி உள்ளார்.

இப்படம் வரும் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டு யு/ஏ வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்படுகிறது.இப்படத்தின் டீசர் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டு நிமிடம் 25 செகண்ட் ஓடக்கூடிய டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. யார் நீ? என்ற கேள்விக்கு’நான் யாருங்கிறத எப்பவுமே நான் முடிவு பண்றது இல்ல என் எதிர்ல இருப்பவங்கதான் முடிவு பண்ணுவாங்க என அஜித் வாய்ஸை கேட்கும் போதே ஜில்லிடுகிறது. உன்கூட இருக்கிறது சந்தோஷங்கிறத விட நீதான் என் சந்தோஷமாகவே இருக்க என காஜல் அகர்வாலிடம் தன் காதலை வெளிப்படுத்தும் விதத்தில் அஜித்தும் அழகாய் இருக்கிறார். போராடாம அவன் போக மாட்டான் சாகவும் மாட்டான். பீனிக்ஸ் பறவை போல எரிக்க எரிக்க எழுந்து வருவான் என விவேக் ஒபராய் பேசும் வசனமெல்லாம் ட்ரெண்டாகி வருகிறது.

மொத்தத்தில் படு ஹாண்ட்ஸமாக அஜித் காணப்படுகிறார். காட்சிகளும் ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அனிரூத்தின் இசை டிரைலர் முழுக்க தெறிக்கிறது. படத்தின் ஹைலைட்டான வசனங்களும், காட்சிகளும் இடம் பெறும் வகையில் ரூபனின் எடிட்டிங் அமைந்துள்ளது. வெற்றியின் கேமிரா கண்களுக்கு விருந்து அளிக்கிறது. டிரைலரை பார்த்தவுடன் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் தல ரசிகர்களிடம் மேலோங்குகிறது. முன்னர் விவேகம் டீசர் அதிக லைக்குகளை பெற்று டாப் இடத்தை பிடித்தது போல் தற்போது விவேகம் டிரைலர் வெளியான 15 மணி நேரத்தில் 36 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளதும் தனி கவனத்தை பெறுவதுடன்  யூ டியூப் வரலாற்றில் தனி சாதனை படைக்கும் என்றும் படமும் கண்டிப்பாக ஹிட்தான் என்றும் ரசிகர்கள் உரத்த குரலில் சொல்லி வருகிறார்கஃள் .