September 27, 2021

21-ம் தேதி தாக்கலாகும் அம்மா பட்ஜெட்டில் என்ன ஸ்பெஷல்?

தமிழக அரசின் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் 2016-17ஆம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 21-7-2016ஆம் நாள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 11 மணிக்கு 2016-2017ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்” என்று அவர் கூறியுள்ளார்.

budjet jy 14

நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தபின்னர், அதன் மீதான விவாதம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும். பட்ஜெட் மீதான விவாதம் 4 நாள்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து, துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும். இந்த கூட்டத்தொடர் ஒரு மாதம் வரை நடைபெறும். இந்த தொடரில் காரசார விவாதத்துக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக தமிழகத்தில், சமீபத்தில் நடைபெற்று வரும் கூலிப்படையினரின் தொடர் கொலைகள், கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் மற்றும் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியுள்ளது, டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பற்றி சூடுகிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனிடையே அதில், இந்தப் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன’ என்கின்றனர் அதிகாரிகள். இது குறித்து கிடைத்த தகவல்கள் இவைதான்:

” இன்னும் மூன்று மாதங்களில் வரப் போகும் உள்ளாட்சித் தேர்தலுக்கு அ.தி.மு.க தலைமை தயாராகி வருகிறது. அதற்கேற்ப, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுகளையும் தாண்டி சிலவற்றைச் செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதன்படி ஏற்கெனவே 500 டாஸ்மாக் கடைகளை மூடியாகி விட்டது. இப்போது மேலும் 100 கடைகளை மூட திட்டமிட்டு . அதற்கேற்ப, அமைச்சரவைக் கூட்டத்தில், ‘ அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தக் கூடிய லீக்கேஜ்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார்

அடுத்து, ‘ நீண்டதூரப் பயணங்களுக்கு அரசுப் பேருந்துகளையே பொதுமக்கள் நம்பியுள்ளனர். பகல், இரவுப் பயணங்களில் சரியான உணவில்லாமல், தரமற்ற உணவுக் கடைகளில் பேருந்துகளை நிறுத்துகின்றனர். சாலையோர மோட்டல்களால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அம்மா உணவகம் போல, அரசே தரமான மோட்டல்களை திறந்தால் மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும்’ எனத் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு முதல்வர் ஒப்புதல் கொடுக்க இருக்கிறார்.

அத்துடன், இளைய தலைமுறையினரைக் கவர பொது இடங்களில் இலவச வைஃபை வழங்கும் திட்டமும், 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டி வழங்குவது குறித்த அறிவிப்பும் வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் வெளியாகலாம்