ஆண்களின் விந்தணு குறைபாடு – காரணம் என்ன?

உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனித உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படை உணவே.

உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். அண்மை யில் கருவுறுதல் மருத்துவமனை ஒன்றில் 99 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நொறுக்குத் தீனிகளை (ஜங்க் ஃபுட்) அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களின் தரம் பலவீனம் அடைவது கண்டறியப்பட்டது.

ஆம்.. ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையானது அவர் உண்ணும் உணவு மற்றும் அவரின் பழக்க வழக்கங்களுடன் தொடர்பு உடையது. பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணு குறை பாடானது இயற்கையாக ஏற்படுவதை விட அவர்களின் பழக்க வழக்கங்களால் அதிகமாக ஏற்படுகிறது.

விந்தணுக்கள் குறைய காரணங்கள்

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் செல்போன்களாலும் விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுகிறது. ஆண்கள் தங்களின் செல்போன்களை பின் பையிலோ அல்லது முன் பையிலோ வைக்கும் போது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மற்றும் அதிர்வுகள் விந்தணுக்கள் உற்பத்தியை குறைக்கிறது.

அதிக வெப்பம் உள்ள இடங்களில் இடங்களில் அதிக நேரம் இருந்தால் விந்தணு குறைபாடு ஏற்படும். விந்தணு உற்பத்தியாக சரியான வெப்பநிலை 4 டிகிரிக்கும் குறைவாக இருக்க வேண்டும். எனவே கூடியமட்டும் அதிகமான வெப்பநிலை உள்ள இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உடல் எடையில் கவனம் செலுத்தி உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

புகைபிடித்தல் பழக்கம் உள்ளவர்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் குறைவாக இருக்கும். இது விந்தணுக்களின் உற்பத்தியை குறைக்கிறது.

அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தி குறைவாக இருக்கும். மது அருந்துவதால் ஆண்களின் பாலுணர்வை தூண்டும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது.

ஆண்களுக்கு ஏற்படும் அதிக மனஅழுத்தம் விந்தணுக்களின் உற்பத்தியை குறைக்கிறது. இதனால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. எனவே மனஅழுத்தம் இருந்தால் அதை சரிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

பாலியல் தோற்று ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.

தினமும் குறைந்தது ஆறு அல்லது ஏழு மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களின் விந்தணுக்கள் உற்பத்தியானது பாதிக்கப்படுகிறது.

அடிக்கடி சுயஇன்பம் மற்றும் உடலுறவு மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஜங்க் புட் மற்றும் பாஸ்ட் புட் போன்ற துரித உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அலுவலகத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும்.நீண்டநேரம் தொடைகளை நெருக்கியபடி உட்கார்ந்து இருந்தால் விதைப்பையின் வேப்பம் அதிகரித்து விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைகிறது.

நமது உடலில் போதிய அளவு ஜிங்க் சத்து இல்லாமல் இருந்தால் விந்தணுக்கள் உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறது.
பிளாஸ்டிக்கில் உள்ள ஒரு கரிம சேர்க்கை கலவையானது விந்தணு உற்பத்தியை குறைக்கிறது. எனவே பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க வேண்டும்.