October 19, 2021

அப்போலோ-வில் அந்தம்மாவுக்கு உண்மையில் நடப்பது இதுதான்!

22ஆம் தேதி செப்டம்பர் அன்று தமிழக முதல்வரை உடல் நிலை குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்த அன்றில் இருந்து தொற்றி கொண்டது ஒரு பரபரப்பு. அந்த பரபரப்பு அவர் கட்சி சார்ந்த மனிதர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி பொது மக்களையும் தொற்றி கொண்டது அபிமான பார்வையை மீறி அளவில்லா பற்றின் காரணமாக சிலர் பலராய் குமிய அப்போலோ எப்போதும் இல்லா ஒரு பரபரப்பு மையமாக‌ 24 மணி நேர விஷயமாக மாறி போனதில் 90% காரணம் புரளி என்ற ஒற்றைப்புள்ளி தான்.

ravu oct 9

எந்த ஒரு டெக்னாலஜி டெவலப்மென்ட்கள் வந்தாலும் நம் மக்கள் அதை முதலில் எப்படி அடிச்சி விட பயன்படுத்த முடியும்னு தான் ஆக்கப்பூர்வமாய் சிந்திக்கின்றனர். அந்த அடிச்சி விடுவதில் அவர்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை. ஒன்று விட்ட அத்தை பையன் மார்க் சூக்கர்பெர்க் இன்று நள்ளிரவு பெட்ரோல் விலை ஏற்றம் போல ஃபேஸ்புக்குக்கு ஒரு டாலர் சார்ஜ் செய்யபோகிறார் அதனால் இதை 108 வாட்ஸப் ஐடிக்கு நீங்கள் பரப்பினால் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கு ஏழு ஜென்மத்திற்க்கு இலவசம்னு ஆரம்பிச்சி நாசா நாளை மறு நாள் உலகம் அழிய போகுதுனு எனக்கு ஒரு ஸ்பெஷல் ஈ மெயிலை அனுப்பியுள்ளனர் என்று உடுக்கை அடிப்பது போலத்தான் இந்த முதல்வர் உடல் நிலை குறித்த வதந்திகளும்.

முன்பெல்லாம் கட்சிக்காரங்க இந்த வேலையை செஞ்சிகிட்டு இருந்த இந்த புரளி பேயை இப்போது பேஸ்புக் பிரபலங்கள் மற்றும் ஆறு கோர்ஸ் உணவை தினமும் தின்னும் முக்கிய சோர்ஸுகளும், அப்போலோ ரெட்டிக்கு சொந்த்மென சில கேசுகளும் எங்க ஒண்ணு விட்ட சித்தப்பா அப்போலோ விசிட்டிங் டாக்டர் என அப்படியே மருத்துவ டெர்மில் வாட்ஸப் டாக்டர்களும் அடிச்சி விடும் ஆட்களை தூக்கிவிட்டு நகர்ந்தால், நயன்தாராவுக்கு நாலாவது காதல்னு 399 ரூபாய்க்கு டொமெய்ன் வாங்கி அதில் ஒரு இல்லாத விஷயத்தை போட்டு நாமும் எப்ப பிரபல இணையத்தளம் ஆகுவோம் என குறுக்கு புத்தி கொண்ட மானிடர்கள் அம்மா போயாச்சி, அய்யா போயாச்சி இதோ இப்ப விஷயத்தை சொல்லிருவாங்க இதோ கடையெல்லாம் அடைக்க போறாங்க லா அன்ட் ஆர்டர் சிட்டுவேஷனை கருதி நள்ளிரவு அல்லது காலை அஞ்சு மணி வாக்குல விஷயத்தை சொல்ல போறாங்கனு அடிச்சி விடுவாங்க.

அட.. ஒரு செல்ப்பி எடுத்து போட்டிருக்கலாம்ல, ஒரு போட்டாவாது போட்டிருக்கலாம்ல, ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாம்லனு மற்ற கட்சிகள் தங்களின் அரசியல் அரிப்புகளை தீர்த்து கொள்ள இது தான் உண்மைனு அப்போலோ தினமும் ஒரு மருத்துவ அறிக்கையை சுழல விட்டாலும் இல்ல அப்போலோ குடும்பத்துல கல்யாணம், அதனால நாளைக்கு சொல்லிருவாங்கன்னு ஒரு குருப்பும், அப்போலாவுல ரெட்டிக்கு பயம் மருத்துவமனையை கொளுத்திருவாங்கன்னு ஒரு குரூப்பு செப்ப இல்ல அங்கிட்டு இந்த விஷயத்தை சொல்ல யாருக்கு தைரியம் இல்லை அதனால் நாளை மறூ நாள் அறிவிச்சிருவாங்கன்னு அறிவுள்ளவர்கள் கூட சலம்ப என்னதான் நடந்திருக்கும்னு அதே அப்போலோவின் இரண்டாவது தளத்தில் உள்ள எம் டி சி சி யூவில் ஒரு உறவினருக்காக 28 நாள் தவம் இருந்த குடும்பத்தின் ஒருவனாய் இதை சொல்கிறேன்.

எம் டி சி சி யூ எனப்படும் – ஐசியு, சிசியுவுக்கு பெரிய அண்ணன் தான் இந்த எம் டி சி சி யூ எனப்படும் அதி முக்கிய பிரிவு. இங்கு அனுமதிக்க படும் பேஷன்ட்டுக்கும் ஐசியு, சிசியு பேஷன்டுக்கு உள்ள பெரிய வித்தியாசம் இது ஒன்றுதான். இங்கு அனுமதிக் படும் பேஷன்ட்களுக்கு லைஃப் சப்போர்ட் என்னும் தொண்டையில் ஒட்டை போட்டு செயற்கை வாயு மூலம் மொத்த மூச்சு விடும் ரெஸிப்பிரேட்ரி சிஸ்டத்தை கன்ட்ரோலில் வைத்து கொள்ளும் ஒரு முக்கிய விஷயம் தான். இது எதற்கு என்றால் பல நோய்களை கொண்டிருப்பவர்களுக்கு தானே என நீங்கள் கேட்டால் ஊஹூம் அது உண்மையில்லை, நல்ல ஓடி ஆடிகிட்டு இருந்த மனுஷன் ஒரு நோய் இல்லை ஒரு கெட்ட பழக்கம் இல்லை ஆனாலும் டக்கென்று மயங்கி விழுந்திட்டாரு ரெண்டு நாள் சாதா காய்ச்சல் தான்னு சொல்லுபவர்களின் மருத்துவ நிலைமை என்ன என்றால் தொற்றூ நோய் பாதிப்பு. இது சாதா காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், பறவை காய்ச்சல் என பல பயங்கரமான காய்ச்சல்களாய் மாற ஒரே காரணம் இந்த காய்ச்சல்களின் முக்கிய காரணம் லங்க்ஸ் எனப்படும் நுரையீரலை மிக எளிதாக பற்றி கொள்ளும்.

இந்த வைரஸ்கள் சளி இருந்தால் இன்னும் மோசமே. இது மூச்சு விட சிரமபடவைப்பது மட்டும் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்கு தேவையான முக்கிய ஆர்கன்ஸ் எனப்படும் கிட்னி மற்றும் ரத்த மாறுதல்களை உண்டாக்கும். இதனை மொத்தமாக குணமாக்க டாக்டர்கள் லைஃப் சப்போர்ட் மோடுக்கு கொண்டு சென்று பேஷன்ட்களை செடஷனில் வைத்து அனைத்து முயற்சிகளையும் செய்வது ஒரு சாதாரண நிகழ்வே. இதில் ஏற்கனவே உடல் குறைபாடு இருந்தால் கூட கொஞ்ச நாட்கள் தேவை. சாதாரண நிமோனிய காய்ச்சலுக்கே எனது உறவினரை 28 நாள் எம்டிசிசியு அதற்க்கு அப்புறம் அனைத்து கிராஃப்களும் நார்மலாய் வந்துவிட்டால் அடுத்து லைஃப் சப்போர்ட்டை ரிமூவ் செய்து பேஷன்ட்டை சுய நினைவுக்கு கொண்டு வந்து போஸ்ட் ஆப்பரேட்டிவ் போல போஸ்ட் வென்ட்டிலேட்டர் சிகிச்சை தேவை. அதற்க்கு அப்புறம் தான் இயல்பு நிலை மற்றும் ஜெனர்ல் வார்ட் அல்லது தனி அறை. எம்டிசிசியு உள்ளே சாதாரண மருத்தவர்களுக்கு கூட அனுமதி கிடையாது மற்றூம் ஸ்பெஷலிஸ்ட் கூட அந்த கண்ணாடி அறையின் வெளியே இருக்கும் அனைத்து உபகரணக்களீன் ரீடிங் மற்றும் தினமும் இரு முறை செய்யப்படும் லாப் அனலீஸிஸ் ரிப்போர்ட்களை வைத்து தான் வைத்தியமே.

அதனால் இரண்டாம் தள அப்போலோ ஒன்றும் ஏழு கடல் சீக்ரட் அல்ல. உங்க வீட்டில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டால் எப்படி ஒரு பிரைவசியை மெயின்ட்டெயின் செய்வோமோ அதே போல் மானில முதல் பெண்மனி என்ற வகையில் அவர் பூரண குணமாகி வருவார் என்ற நம்பிக்கை வைப்போமாக. நம்பிக்கை என்ற ஒற்றை குளோபல் செயல் தான் 90% சதவிகத மனிதர்களை இயக்குகிறது என்ற உண்மையுடம் மனிதர்களாய் இருப்போமே!