மே. வங்க தேர்தலில் துப்பாக்கிச் சூடு: நால்வர் பலி – வீடியோ!

மே. வங்க தேர்தலில் துப்பாக்கிச் சூடு: நால்வர் பலி – வீடியோ!

லத்த பாதுகாப்புக்கு இடையிலும் தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை மம்தா இன்று பார்வையிடுகிறார். மேலும் பேரணி நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. 4-ம் கட்ட தேர்தலாக 44 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்றது. இந்த 4-ம் கட்ட தேர்தலில் மேற்குவங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. மேற்கு வங்கத்தில் (West Bengal) முதல் மூன்று கட்டங்களில், 91 தொகுதிகளில் தேர்தல்கள் நடந்தன. மார்ச் 27 ஆம் தேதி முதல் கட்டத்தில் 30 தொகுதிகளிலும், ஏப்ரல் 1 ஆம் தேதி இரண்டாம் கட்டத்தில் 30 தொகுதிகளிலும், ஏப்ரல் 6 ஆம் தேதி மூன்றாம் கட்டத்தில் 31 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இன்று ​​நான்காவது கட்டத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 44 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடந்தன.

நான்காவது கட்டத்தில் வாக்களிக்கப் போகும் தொகுதிகள் ஹவுரா (பகுதி II), தெற்கு 24 பர்கானாக்கள் (பகுதி III), ஹூக்லி (பகுதி II), அலிபுர்தார் மற்றும் கூச்ச்பெஹார் ஆகிய பகுதிகளில் உள்ளன. 44 தொகுதிகளில் 373 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, பாலிவுட் பாடகர் மற்றும் பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ, லாக்கெட் சாட்டர்ஜி, பேயல் சர்க்கார், முன்னாள் அமைச்சர் ராஜீப் பானர்ஜி ஆகியோர் அடங்குவர்.

இந்நிலையில்தான் வேட்பாளர்கள், ஊடகங்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதிக்கு உள்பட்ட ஜார்பட்கி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவமும் நடந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதியில் உள்ள ஜார்பட்கி பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் பார்வையிடுகிறார். அதன்பின்னர் அங்கிருந்து அவர் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.

error: Content is protected !!