November 29, 2021

புதுமையான நகைச்சுவை கலந்த காதல் தொடர் தந்தூரி இட்லி!

வடக்கும் தெற்கும் எதிரெதிர் துருவங்கள் என்றாலும், அருகாமையில் வந்தால் என்ன நடக்கும் என்பது ஒரு சுவையான கற்பனை. ஒரு வட இந்தியப் பெண் சென்னையில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிக்கு வருகிறார். தென் இந்திய அலுவலக நடைமுறைகள் அந்தப் பெண்ணை எந்தெந்த விதத்தில் பாதிக்கிறது என்பதை விளக்குவதுதான் தந்தூரி இட்லி.முன்ணியிலிருக்கும் பொழுதுபோக்கு ஒளிபரப்பு தளமான எம்.எக்ஸ்.பிளேயர், சாதாரணமான ஒரு கதையை அசாதாரணமாக முறையில் சுவைபட வழங்குகிறது. நகைச்சுவை கலந்த இந்தக் காதல் கதையை தேவன்ஷு ஆர்யா இயக்கியிருக்கிறார்.

தந்தூரி இட்லி தொடரில் சிம்ரன் என்ற வட இந்தியப் பெண் வேடத்தில் நடித்திருக்கும் அவந்திகா மிஷ்ரா கூறுகிறார்…

இந்தத் தொடரின் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்து அனுபவித்து நடித்தேன். குறிப்பாக இந்தத் தொடரின் தலைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. காரணம் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி தொடரைப் பார்க்க ஈர்க்கும் தலைப்பு இது. டில்லியிலிருந்து பணி நிமித்தமாக சென்னை வரும் சிம்ரன் என்ற பெண் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். தற்போதுள்ள இறுக்கமான சூழ்நிலையில் மக்களுக்கு மன நிறைவைத் தரும் பொழுதுபோக்கு தேவை. இதை தந்தூரி இட்லி சரியாகப் பூர்த்தி செய்யும்.

சிம்ரன் மீது காதல் வசப்படும் செல்வம் என்ற சென்னை இளைஞன் வேடத்தில் நடிக்கும் அஜய் பிரசாத் கூறுகிறார்…

தந்தூரி இட்லி நகைச்சுவைத் தொடர் முழுமையாக ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் முழ்கச் செய்யும். தந்தூரி இட்லி இதை சரியாகச் செய்திருக்கிறது.

ஆறு பகுதிகளைக் கொண்ட இந்த மென் தொடரை இயக்கியிருக்கும் தேவன்ஷு ஆர்யா கூறுகிறார்….
சினிமா மற்றும் தொலைக்காட்சியில் சொல்ல முடியாத வித்தியாசமான கதைகளை ஆக்கப்பூர்வமான சுதந்திரத்துடன் சொல்ல இடமளிப்பவைதான் இணைய தொடர்கள். இந்தத் தொடரில் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கும் இனிய அனுபவமாக எங்களுக்கு அமைந்தது. இதேபோல் பார்வையாளர்களுக்கும் இது மகிழ்சியான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.

அஜய் பிரசாத், அவந்திகா மிஸ்ரா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் இத்தொடரில் விகால்ஸ் விக்ரம், வினோத் குமார், வாட்ஸப் மணி, சுஹாசினி சஞ்சீவ் மற்றும் மிர்ச்சி சபா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
Watch the trailer here: https://bit.ly/Tandoori_IdlyTrailer
Watch the series now: https://bit.ly/TandooriIdly_YT_ep1

உயர் தரத்தில் பார்வையாளர்களுக்கு எண்ணற்ற வீடியோக்களை வழங்கி வரும் எம்.எக்ஸ்.பிளேயர், ஸ்டேட் ஆப் மொபைல் 2020 என்ற தலைப்பில் வரும் ஆனிஸ் ஆப் ரிப்போர்ட்டில் சர்வதேச அளவிலான வீடியோ ஸ்டீமிங்கில் ஏழாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. நாட்டின் மாபெரும் பொழுது போக்குத் தளமான எம்.எக்ஸ்.பிளேயர் நாளொன்றுக்கு 75 மில்லியன் தீவிர பார்வையார்களைப் பெற்றிருப்பதுடன், இரண்டு ஸ்மார்ட் போன்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஆப் தரவிறக்கம் செய்யப்பட்டதாகவும் திகழ்கிறது. என்டர்டெயின்மெண்ட் என்ற பதத்தை எவ்ரிடெயின்மெண்ட் என்றாக்கி, அதாவது ஒவ்வொன்றுக்குமான பொழுதுபோக்கு என்ற வகையில் மக்களை மகிழ்விக்கிறது எம்.எக்ஸ்.பிளேயர். தற்போது விளம்பரங்கள் ஆதரவுடன் ஒளிபரப்பாகிறது என்றாலும், செயலி ஆப் வடிவிலானவை இலவசமாகவே வழங்கப்படுகிறது.

பரபரப்பு ஏற்படுத்திய எம்.எக்ஸ்.ஒரிஜினல்ஸ், திரைப்படங்கள், வெப் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள், ஓலி இசை மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் பத்து மொழிகளில் 1,50,000 மணி நேர ஆஃப் லைன் வீடியோக்களை ஒருங்கிணைந்த மாபெரும் லைப்ரரியையும் தன்னகத்தே கொணடிருக்கிறது எம்.எக்ஸ்.பிளேயர்.
இந்தியாவின் மாபெரும் ஊடகம் மற்றும் பொழுது போக்கு நிறுவனமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் டிஜிடல் வடிவ செயல்பாடான எம்.எக்ஸ்.பிளேயர், 2012 ஆம் ஆண்டிலிருந்து முதல் பத்து ஆன்ட்ராய்ட் ஆஃப்களில் ஒன்றாகத் திகழ்வதுடன், ஆன்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ்., வெப், அமெஸான் ஃபயர் ஸ்டிக், ஆன்ட்ராய்ட் டி.வி. மற்றும் ஒன் பிளஸ் டி.வி. ஆகியவற்றிலும் இடம் பெற்றிருக்கிறது.
Download the App Now
Web: https://www.mxplayer.in/