தரமான கல்வியில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்!- மத்திய அரசு உறுதி!

தரமான கல்வியில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்!- மத்திய அரசு உறுதி!

ஒரு நாடு தன் முழு மனித வள வளர்ச்சியைப் பெற வேண்டுமென்றால், அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வளர்ச்சி வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் அறிவு சுரந்து வரும், என்றைக்கும் பொய்யா பொங்கு மா கடலாக மாறும். அது அரசின் முதலீட்டில்தான் நடக்க இயலும்; இலவசமாக அளித்தால்தான் அனைத்துக் குழந்தைகளின் திறன் அக்கடலில் சேரும்.உலகின் வளர்ச்சி அடைந்த அனைத்து நாடுகளும், இன்று வேகமாக வளரும் பல நாடுகளும் நிறுவி இருக்கும் கல்வி அமைப்பு ஒரே வகைப்பட்டதுதான். அருகமைப் பள்ளிகளைக் கொண்ட பொதுப் பள்ளி முறை யில், அரசின் முழு நிதிப் பொறுப்பில், அனைத்துக் குழந்தைகளும், பெரும் பணக்காரரும், அடித்தட்டு ஏழைகளும் ஒரே பள்ளிகளில், அனைவரும் இலவசமாக, தாய்மொழி வழியே கற்கும் பள்ளிகள் மட்டுமே இந்த நாடுகள் அனைத்தி லும் உள்ளன. இந்நாடுகளின் பெரும் வளர்ச்சியின் அஸ்திவாரமே இத்தகைய பொதுப்பள்ளி முறைதான். அமெரிக்கா வோ, ஐரோப்பிய நாடுகளோ, குறிப்பாக பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் என்ற கல்வியில் ஒளிரும் ஸ்காண்டினேவிய நாடுகளோ, கிழக்கு ஆசிய நாடுகளோ… இவை அனைத்திலும் ஊன்றிச் செழித்திருப்பது இவ்வமைப்புதான். ஆனால் நம் இந்தியாவில் கல்வியை வணிகமயமாக்கி விட்டு குழந்தைகளின் ஆர்வம் குறைச்சல், ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை என்ற ரீதியில் பேசி தப்பான பாதையில் தொடர்ந்து பயணிப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வாடிக்கை யின் ஓர் அம்சமாக மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு குழுவினர் கூடி கல்வியில் சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எட்டாவது வகுப்பு வரை ஆல் பாஸ் திட்டத்தினால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதால், அதை ரத்து செய்ய மோடி அரசு முடிவு செய்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களும் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் மாநில அரசுகளிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக கருத்துக்கள் கேட்கப்பட்டன. சில மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஆல் பாஸ் கொள்கை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிழக்கு பிராந்தியத்தில் கல்வியை மேம்படுத்தும் வழிமுறைகள் பற்றி கோல்கட்டாவில் வர்த்தக சபை கட்டிடத்தில் நேற்று விவாதம் நடந்தது.இதில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். இதன் பின்னர் அமைச்சர் ஜவடேகர் இது குறித்து அளித்த பேட்டியின்போது, “திறமையான மாணவர்களை உருவாக்க நினைக்கும்போது ஆசிரியர்களும் தரமானவர்களாக இருக்க வேண்டும். தரமான ஆசிரியர்களால் நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும். எனவேஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்து வதில் அரசு உறுதியாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள 15 ஆயிரம் பிஎட் கல்லுாரிகளிடம் இருந்து உறுதிமொழிப் பத்திரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தோம். ஜூலை15ம் தேதி வரை கெடு விதித்திருந்தோம். 10ஆயிரம் முதல் 11 ஆயிரம் கல்லுாரிகள் தான் உறுதி மொழிபத்திரம் சமர்ப்பித்தன. மற்ற நிறுவனங்கள் சமர்ப்பிக்க வில்லை. அந்த கல்வி நிறுவனங்கள் இனி செயல்பட அனுமதிக்க மாட்டோம். அந்த கல்விக்கடைகள் எல்லாம் இனி கடையை மூடி விட்டு போக வேண்டியது தான். நாங்களே விரட்டிஅடிப்போம். தரமான கல்வியில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்” என்றார்

மேலும், “ இனி 5 மற்றும் எட்டாம் வகுப்புகளில் மாநில அரசுகளே பொதுத் தேர்வு நடத்த வேண்டும். மார்ச் மாதம் இந்த தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படும். மே மாதம் நடக்கும் மறுதேர்வில் ஆஜராகி தேர்ச்சி பெற வேண்டும். இதில் வெற்றி பெறாதவர்கள் அடுத்து மேல் வகுப்புக்கு போக முடியாது. பழைய வகுப்பிலேயே மீண்டும் படிக்க வேண்டும். அனைத்து மாநில கல்விஅமைச்சர்களுடன் கலந்து பேசியே 9ம் வகுப்பு வருகிற மாணவர்கள் தரமானவர்களாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் 5 மற்றும் 8 ம் வகுப்பில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தான் 9ம் வகுப்புக்கு வர முடியும் என்ற புதிய முடிவை எடுத்திருக்கி றோம். மாநில அரசுகளே தேர்வு நடத்தி, அவர்களின் தரம் அறிந்து தேர்ச்சி பெற வைப்பதும் மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும். இந்தபுதிய கல்விக் கொள்கைக்கு 25 மாநிலங்கள் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டன. எனவே இது தொடர்பாக மசோதா பார்லியில் நிறைவேற்றப்படவேண்டும். நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.

பயி்ற்சிபெறாத ஆசிரியர்கள் ஏராளமாக உள்ளனர். நாடு முழுவதும் 11 லட்சம் ஆசிரியர்கள் முறையான தகுதி இல்லாதவர்களாக உள்ளனர். இன்னும் 2 ஆண்டுகளில் அவர்கள் முழுமையான தகுதி பெற்றவர்களாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இது தான்கடைசி சான்ஸ். இதற்காக அவர்களுக்கு ஆன்லைனில் இலவசமாக கற்பிக்கிறோம். அதை கற்றுக்கொண்டு தேர்வு எழுதினால் போதும். தரம்,தரம், தரம் என்பதே எங்கள்அரசின் முன்னுரிமை ஆகும். அடுத்த 2 ஆண்டுகளில் ஒவ்வொரு குழந்தையும் கல்வி அறிவு பெற வைப்போம். இதை ஒரு சமுதாய இயக்கமாகவே மாற்றிட திட்டமிட்டுள்ளோம்” என்றும் தெரிவித்தார்

Related Posts

error: Content is protected !!