October 20, 2021

அ அ அ இரண்டாம் பாகம் ஷூட்டிங்கிற்கு தயாராயிட்டோம்! -மைக்கேல் ராயப்பன் பேட்டி

மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம்தான் இப்போது கோலிவுட்டில் கொஞ்சம் பிசியாக இயங்கும் பட நிறுவனம் என்கிறார்கள். நாடோடிகள் என்ற பெயரிலான படம் ஆரம்பித்து ஹிட கொடுத்த இந்த நிறுவனம் தயாரித்த மிருதன், ஈட்டி படங்களும் வெற்றி பெற்றது. தற்போது சிம்பு நடிக்கும் ஏஏஏ படத்தை தயாரித்து முதல் பாகத்தை வரும் ரம்ஜான் பண்டிகையன்று ரிலீஸ் செய்கிறது. கூடவே நிக்கி கல்ராணி, ஜீவா நடிக்கும் கீ என்ற படத்தை தயாரிக்கிறது. மேலும் இரண்டு பட வேளைகள் நடந்து வரும் சூழ்நிலையில் மைக்கேல் ராயப்பனிடம், “ இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்தே நெகட்டிவ் செய்திகளே வந்ததே.. ஏனிப்படி?“ என்று கேட்டோம்.

அவர் சிரித்தபடியே, “ அதுதான் எனக்கும் தெரியவில்லை. இந்த நிமிஷம் வரை இந்த படத்தால் எனக்கு ஒரு கஷடம் கூட இல்லை. திட்டமிட்டபடி ஷூட்டிங் போய் கொண்டிருந்த போதுதான் பாகுபலி வந்தது. அதை பற்றி பேசிக் கொண்டிருந்த போது இந்த அ அ அ படத்தின் தொடர்பையும் இன்னொரு பாகமாக தயாரிக்கலாமே என்று சிம்புதான் யோசனை சொன்னார். உடனே நான் ஒப்புக் கொண்டேன். அந்த படத்துக்காக அவர் கொடுத்த ஒத்துழைப்பு எக்ஸ்ட்ரானரி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த விநாடி வரை எதையும் நேரடியாக நான் அவரிடமும், அவ்ர் என்னிடமும் பேசிக் கொள்ளும் மன நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் சில மீடியாக்களில் தயாரிப்பாளரான் எனக்கும் சிம்பு ஆகாதது போல் கற்பனையாகவே ஏதேதோ எழுதியதைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. இதோ.. இந்த அ அ அ இப்போ ரிலீஸாகிறது. அடுத்த பாகம் ஆகஸ்ட் முதல் ஷூட் செய்து டிசம்பருக்குள் ரிலீஸ் செய்ய பிளான் செய்து இப்பவே தயாராகி ஓடிக் கொண்டே இருக்கிறோம்” என்றார்.

அப்போது உடனிருந்த இயக்குநர் ஆதில் ரவிச்சந்திரன் “அட.. கமிட் ஆன புதுசுலே சிம்பு அப்படி, இப்படி என்று பல மோசமான விஷயங்களை என்னிடமே சொன்னாங்க. ஆனால் அவர் அப்படி கொஞ்சம் கூட இல்லை. அவருடன் பணியாற்றுவது ரொம்ப வசதியாக இருக்குது. இதுலே வர்ற அஷ்வின் தாத்தா கதாபாத்திரத்திற்கு சிம்பு சார் 3 மூன்று மணிநேரம் மேக்கப் போட வேண்டும். ஆரம்பத்தில் அவருக்கு கஷ்டமாக இருந்தாலும் பின்னர் அட்ஜெஸ்ட் செய்து கொண்டார். இன்னொன்னு சொல்லியே ஆகணும் – சிம்பு சார் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் மானிட்டர் பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டாராக்கும். தயாரிப்பளர் திட்டமிட்டப்படி முதல் பாகத்தை இந்த ஜூன் 23ஆம் தேதியும், 2 ஆம் பாகத்தை இந்த வருட இறுதிக்குள்ளாகவும் வெளியிட போறோம்”என்றார்❤