தமிழகத்தில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம்! – அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம்! – அரசு எச்சரிக்கை!

மக்கள் மீண்டும் மழைநீர் சேகரிப்பில் ஆர்வம் காட்டினால் மட்டுமே தமிழகத்தால் இனிவரும் காலங்களில் நீர்த்தேவைகளை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது என்று ஏற்கெனவே பல தரப்பினரும் கொடுத்த எச்சரிக்கையை புறக்கணித்து விட்டது தமிழகம். இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையும் தென்மேற்கு பருவமழையும்  போதிய அளவு பெய்யாத காரணத்தினால் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 17 மாவட்டங்கள் தண்ணீர் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலக அளவில் நிலத்தடி நீரை பயன்படுத்துவதில் இந்தியா இப்போதைக்கு முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 80 சதவீத மக்கள் நிலத்தடிநீரைக் குடிக்க பயன்படுத்துகின்றனர். 66 சதவீத மக்கள் வேளாண் தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர். நாடு முழுவதும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்திற்கு உரிய, கண்காணிப்பு கிணறுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதே சமயம் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்திலும், பஞ்சாப் 2ஆம் இடத்திலும், ஆந்திரா 3ஆம் இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2007 முதல் 2017க்கு இடைப்பட்ட காலத்தில் 87 சதவீத கிணறுகளில் நிலத்தடிநீர் குறைந்து உள்ளது. சில பகுதிகளில் உள்ள 13 சதவீத கிணறுகளில் மட்டுமே நிலத்தடிநீர் உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தகவல் குறிப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.

இதனிடையே நம் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள 17 மாவட்டங்களில் பெயர்கள் இதுதான் : சென்னை, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, நாமக்கல், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி. இந்த 17 மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் நிலவும் மாவட்டம் தர்மபுரி. இரண்டாம் இடத்தில் இருப்பது கிருஷ்ணகிரி. மூன்றாவது இட்த்தில் இருப்பது சென்னை.

சென்னையில் குடி நீர் வைக்க உதவும் ஏரிகள் 4 உள்ளன. இந்த நான்கு ஏரிகளிலும் சேர்த்துக் கூட்டினாலும் கிடைக்கும் தண்ணீரின் அளவு 17 சதவீதம்தான் உள்ளது. சென்னையின் பல பகுதிகளுக்கு இப்பொழுதே தண்ணீர் கிடைப்பதில்லை. மேலும் இந்த 17 மாவட்டங்களில் கடந்த ஆண்டு பருவ மழை 19 முதல 59 சதவீதம் குறைவாக இருந்தது என மதிப்பிட்டுள்ளனர்.

இதுதவிர 7 மாவட்டங்களில் 38 ஊராட்சி ஒன்றியங்கள் குடிநீர் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அந்த 7 மாவட்டங்களின் பெயர்கள் வருமாறு:

தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் ராமநாதபுரம்.

கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இரண்டு பருவ மழைகளின் போதும் பெய்த மழை அளவை கொண்டு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் போதுமான அளவு மழை பெய்து உள்ளதா இல்லையா என்று கணக்கிட்டுள்ளனர் என வருவாய் துறை நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார்.

கிராமப்புற வளர்ச்சித் துறை தமிழகத்தில் எந்த கிராமங்கள் குடிநீர் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆயிரத்து 333 கிராமங்கள் குடிநீர் பஞ்சத்தில் பாதிக்கப்படும் என கிராமப்புற வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது ஏப்ரல் மாதம் மேலும் 20 ஆயிரத்து 212 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் மே மாதம் 26 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்தி மூன்று கிராமங்கள் மொத்தம் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படும் நிலை ஏற்படும் எனவும் கிராமப்புற வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

வறட்சி பாதிப்பு பற்றிய அரசின் முறையான அறிவிப்பு இருந்தால்தான் குறிப்பிட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவித் திட்டங்களை வகுத்து அமல் செய்ய முடியும்,விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செயது நிவாரணங்களை வழங்க முடியும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்ர்.

error: Content is protected !!