சிலர் நடத்துகின்ற நாடகம்தான் இந்த கருத்துகணிப்புகள்! – வி.எம்.எஸ்

சிலர் நடத்துகின்ற நாடகம்தான் இந்த கருத்துகணிப்புகள்! – வி.எம்.எஸ்

தமிழகத்தில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் கருத்துக் கணிப்புகளும் தேர்தல் முடிவுகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை -காரணம் ஒரு தொகுதியில் குறைந்தபட்சம் 5,000 பேரிடமாவது மாதிரி வாக்கெடுப்பை நடத்தி இருக்க வேண்டும். அப்படி நடத்தினாலும் அந்த முடிவுகளை பாரபட்சமில்லாமல் அந்த நிறுவனங்களின் நிர்வாகம் வெளியிட வேண்டும் .ஆனால் அவ்வாறு கருத்துக்கணிப்புகளை திருத்தம் செய்யாமல் வெளியிடுவதில்லை. ஏதோ ஒரு அணியினரை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவும், தாங்கள் திருப்தியாக வேண்டும் என்பதற்காகவும் , சிலர் நடத்துகின்ற நாடகம்தான் இந்த கருத்துகணிப்பு முடிவுகள் எல்லாம் ..!

அதனால்தான் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பொய்த்து விடுகின்றன. இதற்கு கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து கருத்து கணிப்புகளும் திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று ஆருடம் சொன்னது. ஆனால் தேர்தல் முடிவுகளோ வேறு மாதிரியாக இருந்தன .

அரியணையில் அதிமுக மீண்டும் அமர்ந்தது .

நான் அப்போது 2016 ல் பணிபுரிந்த நிறுவனத்தில் மெகா சர்வே ஒன்று எடுத்தோம் . 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு 1000 பேர் வீதம் மக்களிடம் கருத்துக் கணிப்பு ஒரு வார காலத்துக்குள் நடத்தப்பட்டது . ஆனால் பொதுமக்களிடம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அணுக முடியவில்லை என்றும் குறிப்பிட்ட சில குழுக்கள் இடமும் தனிப்பட்ட நபர்கள் இடமும் கருத்துக்கணிப்பு சீட்டுகள் கொடுத்து முடிவுகள் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது .

ஆனால் கருத்துக்கணிப்பு முடிவுகளோ சரியான முறையில் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தை நான் முன்வைத்தும் எடுபடாமல் போய்விட்டது.. ஏனென்றால் சில நிறுவனங்கள் வெளியிடும் கருத்துக்கணிப்புகள் கூட நிறைய தவறுகள் நடைபெறுகின்றன .அதனை நிர்வாகம் கண்டு கொள்வதில்லை .

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற கட்சிக்கு ஆதரவாகவே கருத்துக்கணிப்புகள் வெளியிடுவதே தங்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

லயோலா கல்லூரியை, பொறுத்தவரை
இன்னாள் மாணவர்கள்
முன்னாள் மாணவர்கள்
கல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான ஒரு குழுவினர்
என மூன்று பிரிவுகளாக உள்ளனர்..
அவற்றில் சில பிரிவினர் முக்கியமான நகரங்களில் 50 பேரிடம் மட்டும் கருத்துக் கணிப்பை நடத்தி விட்டு தங்களுக்கு வேண்டிய கூட்டணியை திருப்திப்படுத்தும் நோக்கில் கருத்துக்கணிப்பை ஒரு திணிப்பாக ஒவ்வொரு தேர்தலின் போதும் வெளியிடுகின்றனர்.

இதுபோன்ற காரணங்களினால் தான் கருத்துக் கணிப்புகள் வேறு மாதிரியாகவும் கள நிலவரங்கள் வேறு மாதிரியாகவும் உள்ளன .தேர்தலுக்குப் பிறகு கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனங்கள் யாராவது தாங்கள் சொன்னபடி இந்த தொகுதியில் குறிப்பிட்ட கட்சி தான் வெற்றி பெற்றுள்ளது என்று அறுதியிட்டுக் கூற முடியாது ..!

தமிழகத்தைப் பொருத்தவரை ஒருசிலர் ஊடகங்களைத் தவிர அனைத்து ஊடகங்களும் அரசியல் சார்ந்தே இயங்குகின்றன .அதுவும் அரசியல்வாதிகளால் நடத்தப்படுவதால் ஊடகத்தின் மீதான நம்பகத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது..இந்த முறையும் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் அவரவர் விருப்பம்போல் சில கருத்துக்களை திணிப்பாக வெளியிட்டுள்ளனர்
இது கணிப்பா
இது திணிப்பா
இல்லையெனில்
தித்திப்பா என்பது
மே 2 ந் தேதி தெரியவரும்..

நானும் உங்களுடன் தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்…

வி.எம்.எஸ்.
ஊடகவியலாளர்.
சென்னை …

error: Content is protected !!