November 29, 2021

விசாகப்பட்டினத்தில் விஷவாயுக் கசிவு: 13 பேர் பலி! – வீடியோ

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை கசிவில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இந்துஸ்தான் பாலிமர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவால் முச்சு திணறி ஒரு வயது குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 200 பேர் மயக்க நிலையில் உள்ளனர், 2000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.ன் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இத்தனைக்கும் இந்த ஆர்ஆர் வெங்கடபுரத்தில் எல்.ஜி. பாலிமர் என்ற ரசாயன ஆலை கொரோனா ஊரடங்கால் ஆலை மூடப்பட்டு உள்ளது. திடீரென இன்று அதிகாலை 5 மணியில் இந்து ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டதுடன், சுவாச பாதிப்புகளும் ஏற்பட்டன. சாலைகளில் சென்ற சிலர் மயங்கி விழுந்தனர்.

தொடர்ந்த இந்த வாயுக்கசிவால் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவ மனைகளுக்கு அழைத்து கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பின்னர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடும், கடுமையான பாதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். வாயு பரவல் 2 முதல் 2.5 கி.மீ. தொலைவு வரை சென்றுள்ளது. கிராமத்தில் இருந்த சுமார் 2000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். அந்த பகுதியில் மயங்கிய நிலையில் உள்ள 200 பேர் வரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.