September 25, 2021

விவேகம் – இந்தியாவின் மிஷன் இம்பொஷிபிள்.!?

தமிழில்,இல்லையில்லை இந்தியாவிலேயே ஐரோப்பாவில் சூட் செய்யப்பட்ட ஏஜெண்டுகள் பற்றிய முதல் படம் விவேகம் என்பதால் சிவாவிற்கு எனது பாராட்டுக்கள்.( இந்த Ek tha tiger,Agent vinod,phantom பற்றி நான் மறந்துட்டன்,நீங்களும் தான்). சிவாவிற்கென்றே இருக்கும் அத்தனை விடயங்களுடனும் கொஞ்சம் வீடியோ கேம்ஸ் பற்றிய knowledge ஐயும் சேர்த்து எடுத்திருக்கும் படம் தான் விவேகம். இது அஜித்தின் கேரியர்லயே முக்கியமான படம் என்று சிவா சொல்லியிருக்கிறார்.(எதுக்கு சொல்லியிருப்பான்டு படம் பார்த்தா புரியும்)

முதலில் ஸ்லோவேனியாவில் உள்ள டாமில் காலடி எடுத்து வைக்கிறார் AK. அதன் பிறகு என்ன? அதே அதரப்பழைய முக்காரமிட்டுக்கொண்டு பேசும் பஞ்சை பேசி விட்டு டாமில் தலைகீழாக குதித்துக்கொண்டு எயாரில் வட்டமிடும் ஹெலிகளை சுட்டுத்தள்ளுகிறார்.உடனே ஸ்கை பாலில் அடேல் பாடிய பாடல் டைடில் சாங்காக ஒலிக்கிறது.(இந்த கிரகத்தையும் பார்க்க வேண்டும்.)

அடுத்து என்ன,வேதாளத்தில் தங்கச்சி சென்டிமேன்டென்றால் இதில் பொண்டாட்டி சென்டி மேன்ட்.கஜாலும் அஜித்தும் வரும் லவ் சீன்கள் அவ்வளவு தத்ரூபம்.விண்ணைத்தாண்டி வருவாயாவிற்கு பிறகு நான் ரசித்த லவ் சீன் இதுதான்.(இழவு) இப்படியாக போகையில் அஜித்திற்கு ஒரு ரெட் அலேர்ட் வருகிறது.உடனே அவர் ஒரு இன்டர்நெஷனல் அணு ஆயுத கும்பலை பிடிக்க கிளம்புகிறார்.அதற்கு துணையாக அல்ப்ஸ் வருகிறார்.அவருடன் சேர்ந்து அஜித் அடிக்கும் லூட்டி அவ்வளவு காமெடி.

இதற்கிடையில்,அந்த அணு ஆயுத்தத்தை இயக்கக்கூடிய கோட்ஸ் தெரிந்த பெண்ணை தேடுகையில் அந்தப்பொண்ணு யாருன்னு பார்த்தா நம்மளோட காந்தக்குரலழகியின் தங்கை.(டுவிஸ்டாம்) அதன் பிறகு அந்தப்பெண்ணை துரத்தும் வெறொரு கும்பலிடமிருந்து அஜித் காப்பாற்றிய பின்னர் சரவெடி தான்.சிங்களவர்கள் அதிகம் செரிந்து வாழும் இடமான ரொமேனியாவில் எடுக்கப்பட்ட பைக்சேஷிங் ப்யூர் வார்ல்ட் கிளாஸ்.பிராவோ.அதன் பிறகு ஒரு கட்டத்தில் அஜித்தை சுட்டுவிட்டு அஜித்தின் நண்பர்களான விவேக்,நீண்ட மூக்குக்காரி,நீக்ரோ மொட்டை,விஜய் டிவி மகாபாரதம் புகழ் பீஷ்மர் போன்றோர் டெடொனேட்டரை கையகப்படுத்துகின்றனர்.இதன் பின் அஜித் சாவிலிருந்து மீண்டு பனிப்பிரதேசத்தில் பியர் கிரில்ஸிற்கே சவால் விடும் அளவிற்கு உயிர் பிழைத்து வந்து அவர்களையும் ரசிகர்களையும் எப்படி கொல்கிறார் என்பதே மிகுதிக்கதை.

எனக்கு தெரிந்து சசிக்குமாரின் சுந்தரபாண்டியன்,சமுத்திரக்கனியின் சுப்ரமணியபுரத்திற்கு பிறகு நண்பர்கள் பற்றி எடுக்கப்பட்ட காவியமாக இதை கருதலாம்.(தேசியவிருது கிடைத்தால் ஆச்சரியமில்லை).படத்தின் ஆரம்பத்தில் காஜல் ஒரு சங்கீத ஆசிரியையாக காட்டப்பட்டிருப்பார்.ஆம் அது ஒரு குறியீடே.கிளைமக்ஸில் வில்லனை அஜித்தால் வீழ்த்த முடியாது போக காஜல் பாட, வில்லன் அதனால் காதடைத்து சாக,ஒரே கூத்துத்தான். சிவா இங்குதான் தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி ரசிகர்களை சீட் நுனிக்கு கொண்டு வந்து மண்டையை பிய்க்க வைத்துள்ளார்.

இப்படம் மூலம் சர்வ தோசை லெவலுக்கு உயர்ந்திருக்கும் சீட்டா சிவாவிற்கு ஹாலிவுட் வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆச்சர்யமில்லை.தல போடும் 7 நிமிட நிஞ்சாக் ஆக்சன் சீன் புருஸ் லீயின் படத்தில் பார்த்ததுக்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன்.இந்த ஒற்றை சீனுக்கு மட்டுமே 20,000 கோடி வசூல் மழை கன்பர்ம்.நேர்த்தியான திரைக்கதை, அலுக்காத ஸ்கிரீன் பிளே.விவேகம் இந்தியாவின் மிஷன் இம்பொஷிபிள்.

படம் பார்த்து மகிழுங்கள் மக்களே. சியர்ஸ் ??

முக்கிய குறிப்பு: சமூக வலைத்தளத்தில் வரும் மட்டமான விமர்சனங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக சமீபத்தில் வருந்தினார் தல பான்ஸ்.ஆகவே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாமல் என்னைப்போல பாஸிட்டிவாக விமர்சனம் செய்வதே அவருக்கு நாம் தரப்போகும் ஆறுதல்… அதை தொடர்வீராக..

.. “ஜெய் சிவா ஜி”.

Arunyan Balendran

மார்க் 5 / 3