September 24, 2021

துப்பறிவாளன் – திரை விமர்சனம்!

தற்போது உள்ளங்கையில் அடங்கி விட்ட நவீனமயமான உலகில் குற்றமில்லா சமூகம் என்பதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு உலகம் முழுக்க ஒவ்வொரு மூலை முடுக்கிலும் குற்றம் பல்வேறுவிதங்களில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் கொடுமைகள், ஆட்கடத்தல், நம்பிக்கை மோசடி செய்தல், கிளர்ச்சி செய்தல், கையூட்டு, அதிகார துஷ்பிரயோகம், இணையக்குற்றங்கள், பயங்கரவாதம் என பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன. அந்த குற்றங்களை கண்டு பிடிக்கும் முழு பொறுப்பு நம் நாட்டில் போலீஸூக்கு மட்டுமே இருக்கிறது. வெளி நாடுகளில் பிரைவேட் டிடெக்டிவ்களுக்கு இது போன்ற பணிகளை கண்டு பிடிக்க தனியான அனுமதி வழங்கும் போக்கு நிலவுகிறது. ஆனால் நம் தமிழகம் உள்ளிட்ட நாடெங்கும் துப்பறிவாளன் என்ற பணிக்கு அங்கீகாரமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் நம்மூரில் தமிழ் வாணன், சுஜாதா, ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், புஷ்பா தங்க துரை, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்கள் மூலம் பல்வேறு துப்பறிவாளர்கள் தமிழனுக்கு பரிச்சயம்தான் என்றாலும் மிஷ்கின் & விஷால் இணைந்து படைத்துள்ள ’துப்பறிவாளன்’ ரொம்ப புதுசு என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படத்தின் நாயகன் தனியார் துப்பறிவாளரான கனியன் பூங்குன்றன் என்னும் நாம கரணத்துடன் உலா வரும் விஷால், ஓப்பனிங் காட்சியிலேயே தன் உதவியாளர் மனோ பிரசன்னா போட்டெக் கொடுத்த டீயை காண்டா மிருகம் மூத்திரம் மாதிரி இருக்கு கத்தியபடி ஏண்டா. கொஞ்ச நாட்களாக என் துப்பறிவு தாகத்திற்கேற்ற தீனி கிடைக்கலே? என்று செம டென்ஷனாக அங்குமிங்கும் அலைகிறார். அப்போது தன் காணாமல் போன (காதலனோடு ஓடிப்போன…) மகளைத் தேடித் தரச் சொல்லி 50 லட்சமும், அது பத்தாது எனில் .,பிளாங்க் செக்கும் தர முன் வரும் ஒரு பெரிய புள்ளி (நாசர்) கேஸை .எடுத்துக் கொள்ள மறுத்து, அதற்கு விளக்கம் கேட்ட பிரசன்னாவிடம் அந்த பெண்ணை கண்டுபிடித்தால் அந்த அப்பா மகளை போட்டு தள்ளி விடுவார் ..என காரணத்தை சொல்கிறார் விஷால்,

அதே விஷால் ஒரு பொடியனின் 837 ரூபாய் சேமிப்பு சில்லரை பணத்தை கூலியாக வாங்கிக் கொண்டு மர்மமான முறையில் இறந்த அவனது செல்ல நாயின் சாவிற்கு யார் காரணம் என துப்பறிய களம் இறங்குகிறார். அதில் பல கோடி பணத்திற்காக வினய் ,பாக்யராஜ் , ஆன்ட்ரியா ஜெர்மியானா , , ஜான் விஜய் …உள்ளிட்டோர் அடங்கிய ஹைடெக் கொலை கும்பல் … வசமாக சிக்குகிறது .அவர்களை போலீஸ் உதவியுடன் விஷால் எப்படி போட்டுத் தாக்கி., நாட்டுக்கு நல்லது செய்கிறார் ? என்பது தான் “துப்பறிவாளன்” மிச்ச கதை .

படத்தின் டைட்டிலிலேயே ஷெர்லாக் ஹோம்ஸூக்கு, அதைப் படைத்த எழுத்தாளர் சர் ஆர்தர் கொனான் டாய்லுக்கு நன்றி சொல்லிய மிஷ்கின் உருவாக்கிய துப்பறிவாளன் தன்னைத் தேடி வந்தவர் போலீஸ் உள்ளிட்ட ஒவ்வொருவர் பற்றிய தகவல்களைச் சொல்லி எதற்க்காக வந்திருக்கிறார் என்று சொல்வதெல்லாம் ஜோசியக்காரன் டைப்பில் இருப்பதால் ரசிகர்கள் வாய் விட்டு சிரிக்கிறார்கள். மேலும் நாம் அறிந்த வரையில் இன்வெஸ்டிகேட்டர் படப்படப்பாகவோ, டென்ஷனாகவோ இருக்க மாட்டார்கள் என்பதை மாற்றி இருக்கிறார் மிஷ்கின். அதற்காக படம் பார்ப்பவர் அத்தனி பேரையும் முட்டாள் ரேஞ்சில் நினைத்து விஷால் கேரக்டரை உருவாகி இருப்பதில் மிஷ்கின் மிஸ்டேக் செய்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனாலும் கனியன் பூங்குன்றனாக வரும் விஷால் மிஷ்கின் சொல்லிக் கொடுத்ததை புரிந்து கதகளம் செய்து இருக்கிறார். சீனர் களுடன் பைவ் ஸ்டார் ஹோட்டலில் போடும் சைனிஸ் பைட்டில் தொடங்கி க்ளைமாக்ஸில் பிச்சாவரம் காட்டில் ஆப்பிரிக்கர் களுடன் போடும் கன் பைட் வரை சகலத்திலும் தன் பாணியை கையாண்டு இருக்கிறார். ஆனால் பல இடங்களில் பக்கத்து சீட் பார்டிங்க ஸ்டண்டெ சீனைப் பார்த்து சிரிப்பதுதான் வேதனையாக இருந்தது. விஷாலின் உதவியாளரான மனோ என்ற நாமகரணம் கொண்ட பிரசன்னா கழுதை தேய்ந்து கட்டெறும்பு ரேஞ்சிற்கு போய் கொண்டிருகிறார். பிக்பாக்கெட் பெண்ணாகி அறிமுகமாகி பின் ,விஷாலுக்காக உயிரையே விடும் மல்லிகாவான அனு இமானுவேல் அழகு. ஒரு காப்பிக்கு ஒரு கொலை செய்து அதையும் எலெக்ட்ரிக் ரம்பம் வைத்து அறுத்து டிரெயினேஜ் வழியே அனுப்பும் கொடூர கொலைகார வில்லனான வினய் ஓ.கே. நாயகி ஆன்ட்ரியா ஹாலிவுட் வில்லிகள் மாதிரி, பைக் ரேஸ் , கார் சேஸ் என்றெல்லாம் பண்ணுவது ஏனோ ஒட்ட வில்லை.

அருண்குமார் படத்தொகுப்பில் இன்னும் கண்டிப்பு காட்டி இருக்கலாம் .கார்த்திக்கின் ஒளிப்பதிவு மிஷ்கினின் சஸ்பென்ஸ் , த்ரில்லர் , இயக்கத்திற்கு பலம் சேர்க்கும் பதிவு. குறிப்பாக பிச்சாவரத்தை பிரமிப்பாக காட்டி அசத்தி உள்ளார். ஆரல்கரோலியின் மிரட்டும் பின்னணி இசை படத்திற்கு பெரும் வெயிட்டை கூட்ட வில்லை..

மொத்தத்தில் துப்பறிவாளன் – பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

மார்க் 5 / 3