இந்திய திரையுலகம் சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா! விஷால் டீம் ஏற்பாடு!

இந்திய திரையுலகம் சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா!  விஷால் டீம் ஏற்பாடு!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான ‘நம்ம அணி’ பெரும் வெற்றி பெற்றுள்ளது. புதிய நிர்வாகிகளின் பதிவியேற்பு விழா ஏப்ரல் 6ம் தேதி மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

1

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் இன்று (ஏப்ரல் 4) காலை இளையராஜாவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், துணைத் தலைவர் பிரகாஷ்ராஜ், செயலாளர்கள் ஞானவேல்ராஜா மற்றும் கதிரேசன், பார்த்திபன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் விஷால் பேசும் போது, “இது என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நிகழ்வு. இளையராஜாவோடு பேசிய 30 நிமிடங்கள் வாழ்க்கையில் இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. இளையராஜா செய்த சாதனைக்கு, இந்தியத் திரையுலகம் சார்பில் அவரை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று நடத்த வேண்டும் என்பது எங்களுடைய ஆசை.

இது தொடர்பாக அவரோடு பேசினோம். ஏற்கனவே முந்தைய நிர்வாகிகள், இளையராஜாவை வைத்து நிகழ்ச்சி செய்ய விரும்பினார்கள். ஆனால், நாங்கள் வெறும் 2 மணி நேர நிகழ்ச்சியாக நடத்தாமல், அது இந்தியத் திரையுலகமே அவரை கவுரவப்படுத்தும் நிகழ்வாக இருக்க வேண்டும் என்று விண்ணப்பம் வைத்தோம். சிறப்பாக செய்யலாம் என்று பதிலளித்தார்.

இன்று முதலே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளோம். அந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பொறுப்பு வந்துள்ளது. அந்நிகழ்வு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். இது எங்களுடைய அணிக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறோம். வெறும் 100 பேரை அழைத்து கைத்தட்டி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வாக அது இருக்காது. அந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும். இளையராஜா அனைவரது வாழ்க்கையின் சந்தோஷம், துக்கம் என இசையால் புகுந்துவிட்டார். திரையுலகினர் மட்டுமன்றி பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி இருக்கும்” என்றார் விஷால்.

error: Content is protected !!