June 28, 2022

விண்வெளி ட்ராவல் போக அஃபீஷியல் லைசன்ஸ் கிடைச்சாச்சு!

எதையோ அல்லது யாரையோ தேடி செய்யும் பயணமே மனிதனை மேம்படுத்துகிறது. அதிலும் பலருடைய துணிச்சலான பயணங்களால்தான் புதிய கண்டங்கள் புலப்பட்டன; புதிய சிந்தனைகள் புலர்ந்தன; புதிய வழித்தடங்கள் கிடைத்தன; புதிய பொருட்கள் அறிமுகமாயின. இப்படி மனித மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும் பெரும்பாலான் மனிதனுக்கு விண்வெளி பயண வாழ்க்கையை அனுபவிக்கும் வசதி அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விடுதில்லை. விண்வெளி ஆய்வாளர்கள் அல்லது விண்வெளி வீரர்கள் மட்டுமே இந்த அனுபவங்களை சில நாட்களுக்கு தங்களுடைய விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக பெறும் யோகம் பெற்றவர்களாக உள்ளனர். இதனிடையே நாம் விண்வெளியில் உயிரினங்கள் வாழ முடியாது என்று பந்தயமே கட்டினாலும், அங்கு சென்று சாகசங்கள் செய்ய இப்போதும் பலர் தயாராகத்தான் உள்ளனர். அதே சமயம் இந்த சாகச பயணங்களை செய்ய வேண்டாம் என்று கருதுபவர்கள், விண்வெளி வாழ்க்கை பெற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவாவது விரும்புவர்கள்.

world aug 2

அப்படியான விண்வெளி வாழ்க்கையைப் பற்றி சில விந்தையான ஆர்வமூட்டும் தகவல்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

சூரிய உதயங்கள்! நீங்கள் விண்வெளியில் இருக்கும் போது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சூரிய உதயத்தை பார்க்க முடியும். இதனால் தான் விண்வெளி வீரர்களின் தூக்கத்தில் ஏராளமான பிரச்னைகள் உருவாகின்றன. சாதாரணமாக இருக்கும் பகல் மற்றும் இரவு வேளைகள் இல்லாததால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. சர்வதேச விண்வெள தளத்தின் நிர்வாகிகள் இந்த பிரச்னைக்கு ஒரு புதுமையான தீர்வு கண்டுள்ளனர். அவர்கள் விண்வெளி வீரர்களுக்காக 24 மணி நேர அட்டவணையை தயார் செய்துள்ளனர். பூமி நேரத்தை அடிப்படையாக கொண்ட இந்த கால அட்டவணைப்படி அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள்.

உடற்கூறு மாற்றங்கள் ; விண்வெளியில் உள்ள மிகவும் குறைந்த புவிஈர்ப்பு விசை காரணமாக நமது முதுகெலும்பு பூமியில் பெற்று வரும் தொடர்ச்சியான அழுத்தம் விடுபட்டு விடும். அதன் காரணமாக விண்வெளி வீரர்களின் முதுகெலும்பு நேராக நிமிர்ந்து, சுமார் 2.25 அங்குல அளவிற்கு அவர்களுடைய உயரம் அதிகரிக்கும்.

விண்வெளி சுகவீனம் ; விண்வெளிக்கு சென்று விட்டு திரும்பும் வீரர்களின் உடல் நிலை 2-3 நாட்களுக்கு சுகவீனமாக இருக்கும். விண்வெளியில் குறைவான புவிஈர்ப்பு விசை இருந்ததான் காரணமாகவும் மற்றும் விண்வெளிக்கு யார் சென்றாலும் ஏற்படும் சாதாரண விஷயமாகவும் இது உள்ளது. அதிலும் நிலாவுக்கு சென்று திரும்பிய வீரர்கள் அடுத்தடுத்து இதய நோயால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தூக்கம் : விண்வெளிக்கலத்தில் தூக்கம் என்பது ஒரு சிக்கலான விஷயமாகும். விண்வெளியில் சிறிது நேரமாவது தூங்க நினைக்கும் விண்வெளி வீரர்கள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். அவர்கள் தங்களை ஒரு பட்டைக்குள் புகுத்திக் கொண்டு – மிதப்பதையும், மற்ற பொருட்களுடன் மோதுவதையும் தவிர்த்துக் கொண்டு தூங்குவார்கள்.

ஆடை அணிகள்; விண்வெளியில் ஒவ்வொருவருடைய ஆடை அணிகலன்களை சரி செய்வது என்பது சவாலான காரியம் தான். விண்வெளி வீரர்கள் தங்களுக்கான பிரத்யோகமான உடைகளை கொண்டு சென்று, கலத்தின் சுவர்களில் உள்ள லாக்கர்களிலும், பிற பொருத்தும் இடங்களிலும் வைப்பார்கள். துங்களுடைய முடிகளை அலசுவதற்கு அவசியம் இல்லாத ஒரு வகையான ஷாம்பூவை கொண்டு சுத்தம் செய்வார்கள்.

உணவுப் பழக்கங்கள் ; விண்வெளியில் புவிஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால் உப்பு மற்றும் மிளகு போன்றவற்றை தெளிக்க முடியாது. எனவே அவர்கள் திரவ உணவுகளை சாப்பிடுகிறார்கள். திட உணவுகள் மிதந்து சென்று ஏதாவது ஒரு இயந்திர பகுதிக்குள் சிக்கிக் கொள்ளவோ அல்லது விண்வெளி வீரரின் கண்களை தாக்கவோ வாய்ப்புகள் உள்ளன.
கழிப்பறைகள்; விண்வெளியில் கழிப்பறைகளை பயன்படுத்துவது என்பது சவாலான காரியம் தான். பல்வேறு விண்வெளி ஆய்வு நிறுவனங்களம் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் பொருட்டாக பல மணி நேரங்களை செலவிட்டுள்ளன. முன்னதாக, விண்வெளி கழிப்பறைகள் காற்றை அடிப்படையாக கொண்டு இயங்கி வந்தன. எனினும், தற்போதைய ஏர் பில்டரிங் முறையும் முன்பையொத்த முறையாகவே உள்ளது.

மீண்டும் பூமி வாழ்க்கை ; விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பிய பின்னர், பூமியின் புவிஈர்ப்பு விசையுடன் பழகுவதற்கு நெடுநேரம் எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் விண்வெளியில் பொருட்களை கீழே போடுவதைப் போலவே, பூமியில் போட்டு பொருட்களை உடைக்கவும் செய்வார்கள்.

இதனாலேயெ விண்வெளி என்றாலே அது விஞ்ஞானிகளுக்கு தான் சொந்தம் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. ஆனாலும் நம் நாடு நகரங்களில் இருக்கும் பல்வேறு டிராவல் நிறுவனங்கள் வேற்றுகிரகத்திலும் கிளைகள் அமைக்க முயற்சித்ததின் விளைவே ஆர்டினரி மனிதர்களும் விண்வெளிக்கு செல்லலாம் என்ற திட்டம் உருவானது. இத்திட்டத்திற்குரிய பணிகள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகவே நட்ந்து வந்தது.

அதைத் தொடர்ந்து தற்பொழுது அடுத்த வருடம் மனிதர்கள் விண்வெளிச் சுற்றுலா செல்வது உறுதியாகிவிட்டது. ஆனால் அதற்கான கட்டணத்தை பார்த்தால் பணபலம் படைத்தவர்கள் மட்டுமே தற்போதைக்கு விண்வெளிப்பயணம் மேற்கொள்ள முடியும்.

ஆம்.. விண்வெளிக்கு பயணிகளை அழைத்து செல்வதற்கான உரிமத்தை விர்ஜின் கெலட்டிக் நிறுவனம் தற்போது பெற்று உள்ளது. அதாவது இதற்கான் அனுமதியை அமெரிக்க விமான நிர்வாகம் வழங்கி உள்ளது.விண்வெளிக்கு பயணிகளை அழைத்து செல்ல இவ்விமானத்தில் 6 பேர் பயணிக்கலாம். 2 பைலட்டுகள் இருப்பார்கள்.ஒரு முறை விண்வெளிக்குச் என்று வர ரூ.1.50 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

விஷயம் கேள்விப்பட்டு  விண்வெளிக்கு செல்வதற்காக இதுவரை 700 பேர் முன்பதிவுசெய்துள்ளனர். ஆனாலும் விண்வெளி வாகனம் மேலும் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அடுத்த ஆண்டு சேவையை தொடங்கும். தற்போதைக்கு பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் உயரம் வரை இந்த விண்வெளி வாகனம் செல்லும்.அப்போதே இதற்குள் இருக்கும்  பயணிகள்   புவி ஈர்ப்பு விசை மற்றத்தை உணரமுடியும்,மேலும் உலகம் உருண்டையாக இருப்பதையும் காண முடியுமாம்.