March 23, 2023

னிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வெற்றிகரமாக திகழ வேண்டும் என்பதே பெரு விருப்பமாக இருக்கிறது. குழந்தையோ, பெரியவரோ வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், வெற்றி பெற வேண்டும் எனும் உள்ளார்ந்த விருப்பமே, நம்மை மகத்தான வெற்றியை நோக்கி முன்னேற வைக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும், ஒருவருக்கு ஒருவர் போட்டியிடும் தன்மையை பார்க்கலாம். வெற்றியை நோக்கிய பயணத்துடனான நம்முடைய முயற்சியின் ஒப்பீடாக, நாம் மேலும் எதிர்பார்த்து, வெற்றி நம் வாயிற்கதவுகளை தட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் இப்படி சாதனைப் படைத்த பெரும்பாலான ஜாம்பவான்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சோதனைகளை எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் வெற்றிக்கான பாதையில் தொடர்ந்து முயற்சித்து, தங்கள் துறைகளில் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர். சாதி, மதம் என சிலபல பேதங்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியம் உண்மை. இந்த நடப்பைக் காட்ட உருவான சினிமாவே’ விஜயானந்த்’. இதில் இடம் பிடித்திருக்கும் எல்லாக் காட்சிகளும் ஒரே ஒரு ட்ரக்கை மூலதனமாக வைத்துக் கொண்டு இந்திய அளவிலான `லாஜிஸ்டிக்’ தொழிலில் மட்ட்மின்றி மீடியாவிலும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஒரு `ட்ரீம் கேட்சர்’ வாழ்வில் நிஜமாகவே நடந்தவை என்பதே இப்படத்தின் பிளஸ்பாயிண்ட்.

கதை என்னவென்றால் நாயகன் விஜய் சங்கேஸ்வர் அப்பா சொல்லிக் கொடுத்த வழியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்த தொழிலை அட்வான்ஸ் மெஷின் எல்லாம் வாங்கிப் போட்டு அடுத்த கட்டத்திற்கு போக முயல்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த தொழிலை மட்டும் செய்து வந்தால் பெரிதாக சாதிக்க முடியாது என்று லாரி சர்வீஸ் தொழில் செய்ய முடிவு செய்கிறார். அதற்கு அவரது அப்பா சம்மதம் தெரிவிக்காத நிலையில் வங்கியில் கடன் வாங்கி, ஒரு லாரியை வாங்கிக் கொண்டு தனது தொழிலை தொடங்கினார். எதிர்பார்த்த அளவிற்கு எதுவும் லாபமில்லாமல், தொடர்ந்து சிரமங்கள் வந்தாலும், மேலும் ரிஸ்க் எடுத்து 4 லாரிகளை வாங்கி தொழிலில் வளர்ச்சியடைந்தார். அதன் பிறகு வெவ்வேறு தொழிகளிலும் இறங்கி பல்வேறு இன்னல்களை சந்தித்து அதைத் தாண்டி சாம்ராஜ்யமொன்றை எப்படி உருவாக்கினார் என்பதுதான் விஜயானந்த்.

ரியல் ஹீரோ விஜய் சங்கேஸ்வரராக நிஹால் நடித்திருக்கிறார் அவரின் மனைவியாக நடித்திருக்கிறார் சிரி பிரகலாத். இவர்களின் மகனாக நடித்திருக்கிறார் பாரத் போபனா. நிஹால் தனது ஏற்றுள்ள கனவு நாயகன் ரோலுக்குரிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவரின் உடல்வாகு மொழி எல்லாமே ரசிக்கும்படி இருக்கிறது. இவரின் மனைவியாக நடித்த சிரி பிரகலாத்தும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு முக்கிய கட்டத்தில் இணைத்துக் கொள்ளும் விஜய் சங்கேஸ்வரரின் மகனான ஆனந்த் சங்கேஸ்வர் கேரக்டரும் மிக்ப் பொருந்தி போகிறது.

கீர்த்தன் புஜாரி கேமரா வழியாக 1969 ஆம் காலத்தோடு பயணிக்க வைக்கும்படி காட்சிகள் தொடங்கி ஒவ்வொரு பிரேமையும் துல்லியமாக வைத்து ச்கோர் செய்து இருக்கிறார். மியூசிக் டைரக்டர் கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இப்படத்துக்கு தேவையான அளவு பங்களித்து இருக்கிறது

பயோபிக் என்பதால் , நேர்த்தியாக கதையை சொல்லிக் கொண்டே போகும் இயக்குனர் ரிஷிகா சர்மா கொஞ்சம் ஸ்பீடை ஏற்றி கமர்ஷியல் மிக்ஸ் செய்ய தவறி விட்டதால் ரசிகனுக்கு சோர்வு தட்டுகிறது.

ஆனாலும் சாண்டல்வுட் என்றழைக்கப்படும் கன்னடவுலகின் முதல் பயோபிக் என்ற பெருமையோடு வந்துள்ள விஜயானந்த் ஃபீல் குட் மூவிதான் என்பதில் சந்தேகமில்லை

மார்க் 3.25/5