விஜய்சேதுபதி திரிஷா படத்திற்கு பிரமாண்டமான அரங்குகள் -பாண்டியில் படமாகிறது!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற  வெற்றிப்படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும்  ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள்.  மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு           –       சண்முகசுந்தரம்

இசை                    –        கோவிந்த் மேனன்  

எடிட்டிங்               –        கோவிந்தராஜ்

கலை                    –        வினோத் ராஜ்குமார்

பாடல்கள்             –        உமாதேவி, கார்த்திக் நேத்தா.

எழுத்து, இயக்கம்            –        C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.   

தயாரிப்பு   –  எஸ்.நந்தகோபால்

இந்த படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..

இந்த படத்திற்காக அழகான அதே சமயம் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளது. அந்த அரங்கில் விஜய்சேதுபதி திரிஷா காளி வெங்கட் ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. 300 துணை நடிகர் நடிகைகள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர்.

தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றம்  வித்தியாசமான கதாபாத்திரம் என கொடி கட்டி பறக்கும் விஜய் சேதுபதிக்கு 96  படமும் வித்தியாசமான படமாக இருக்கும்.